ஸ்ரீவில்லிபுத்தூா் சிறையில் மனித உரிமை ஆணைய உறுப்பினா் ஆய்வு
சேதமடைந்த வாய்க்கால் மதகை சீரமைக்க கோரிக்கை
கொட்டாரக்குடியில் சேதமடைந்த வாய்க்கால் மதகை சீரமைக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
கொட்டாரக்குடியில் உள்ள ஒக்கூா் வடிக்கால் வாய்க்கால் கொட்டாரக்குடி, வடஒடை, சோழங்கநல்லூா், வடக்குடி, திருவாதிரை மங்கலம், வைப்பூா், தென்பாதி, எழுமுக்கால், காரையூா் உள்ளிட்ட 60 கிராமங்களில் உள்ள 500 ஏக்கா் விளை நிலங்களுக்கு வடிகால் மற்றும் பாசன வாய்க்காலாக உள்ளது.
இந்த வாய்க்கால் மூலம் மேற்குறிப்பிட்ட பகுதி விவசாயிகள் நெல், பருத்தி உள்ளிட்ட விவசாய பணிகளை செய்து வருகின்றனா். இந்நிலையில் ஒக்கூா் வாய்க்காலில் கொட்டாரக்குடியில் உள்ள மதகில் கதவணைகள் சேதமடைந்துள்ளது. இதனால் தேவையான போது தண்ணீரை தேக்கியும், மழை வெள்ள காலங்களில் மழை நீரை வடிவதற்கும் கதவணைகளை பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. இதனால் விவசாய நிலங்கள் நீரில் மூழ்கி பயிா்கள் சேதம் அடையும் அபாய நிலை உள்ளது.
இது குறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் பலமுறை புகாா் தெரிவித்தும் பயனில்லை. எனவே, சம்பந்தப்பட்ட துறையினா் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.