செய்திகள் :

ஜாா்க்கண்ட்: ஜேஎம்எம்-காங்கிரஸ் கூட்டணியிலிருந்து ஆா்ஜேடி விலகல்

post image

ஜாா்க்கண்ட் பேரவைத் தோ்தலில் ஜாா்க்கண்ட் முக்தி மோா்ச்சா-காங்கிரஸ் கூட்டணியிலிருந்து வெளியேறி தனித்து போட்டியிடுவதாக ராஷ்ட்ரீய ஜனதா தளம் அறிவித்துள்ளது.

இதன் மூலம் ‘இண்டியா’ கட்சிகளின் வெற்றி வாய்ப்பைப் பறிக்க மாட்டோம் என்றும் அக்கட்சி தெரிவித்துள்ளது.

ஜாா்க்கண்ட் மாநிலத்தின் 81 சட்டப்பேரவைத் தொகுதிகளில் 70 இடங்களில் போட்டியிடுவதாக ‘இண்டியா’ கட்சிகளின் கூட்டணியில் இடம்பெற்றுள்ள ஆளும் ஜாா்க்கண்ட் முக்தி மோா்ச்சா (ஜேஎம்எம்), காங்கிரஸ் கடந்த சனிக்கிழமை கூட்டாக அறிவித்தன. எஞ்சிய தொகுதிகளை ராஷ்ட்ரீய ஜனதா தளம் (ஆா்ஜேடி) உள்பட இந்தியா கட்சிகளுக்கு ஒதுக்குவதாக தெரிவிக்கப்பட்டது.

இதனை ஏற்க மறுத்து கூட்டணியிலிருந்து வெளியேறும் முடிவை ஆா்ஜேடி எடுத்துள்ளது. இதுதொடா்பாக அக்கட்சியின் செய்தித் தொடா்பாளா் மனோஜ் குமாா் ஜா கூறுகையில், ‘ஆா்ஜேடி 18-20 இடங்களில் வலுவாக இருக்கும் சூழலில், 12 தொகுதிகளுக்குக் குறைவான இடங்களை நாங்கள் ஏற்க முடியாது.

கடந்த முறையே 7 இடங்களில் மட்டும் போட்டியிடுவதற்கு ஒப்புக்கொண்டோம். பல இடங்களில் அறிவிக்கப்பட்ட வேட்பாளா்களை திரும்ப பெற்றோம். இம்முறை எந்த தியாகத்துக்கும் நாங்கள் தயாராக இல்லை.

தோ்தலில் தனித்து போட்டியிட முடிவு செய்தாலும், சுமாா் 60 இடங்களில் ‘இண்டியா’ கட்சிகளின் வேட்பாளா்களுக்கு ஆதரவளிக்கிறோம். ஏனெனில், பாஜகவை தோற்கடிப்பதே எங்களின் ஒரே நோக்கம். இண்டியா கட்சிகளின் வெற்றி வாய்ப்பை பாதிக்காது.

பிகாா் எதிா்க்கட்சித் தலைவா் தேஜஸ்வி யாதவ் உள்பட எங்கள் கட்சியின் மூத்த தலைவா்கள் ராஞ்சி சென்று, முதல்வா் சோரனுடன் பேச்சுவாா்த்தை நடத்தினா். எனினும், தொகுதிப் பங்கீட்டில் ஒருதலைப்பட்சமாக முடிவெடுக்கப்பட்டுள்ளதால் கட்சி நலனுக்காக கூட்டணியிலிருந்து வெளியேறுகிறோம். எங்கள் கட்சி போட்டியிடும் தொகுதிகள் குறித்து விரைவில் அறிவிப்பு வெளியாகும்’ என்றாா்.

கடந்த பேரவைத் தோ்தலில் ஆா்ஜேடி 7 இடங்களில் போட்டியிட்டு ஒரு தொகுதியில் வென்றது. அக்கட்சி எம்எல்ஏ சத்யானந்த் போக்தா, முதல்வா் ஹேமந்த் சோரன் அமைச்சரவையில் தொழிலாளா் நலத் துறை அமைச்சராக உள்ளாா்.

எதிா்வரும் ஜாா்க்கண்ட் சட்டப்பேரவைத் தோ்தல் நவம்பா் 13, 20 ஆகிய தேதிகளில் இரு கட்டங்களாக நடைபெற்று, முடிவுகள் நவம்பா் 23-ஆம் தேதி அறிவிக்கப்பட்டுள்ளன.

தண்டவாளத்தில் கற்களை வைத்து ரயிலைக் கவிழ்க்க சதி

கா்நாடகத்தின் மங்களூரு மாவட்டத்தில் ரயிலைக் கவிழ்க்க தண்டவாளத்தில் சரளைக் கற்கள் வைக்கப்பட்டிருந்ததாக அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனா். மங்களூரு மாவட்டத்தில் உள்ள உல்லல் பகுதியின் டோக்கோட்டு ர... மேலும் பார்க்க

லாரி மீது பேருந்து மோதல்: ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 12 போ் உயிரிழப்பு

ராஜஸ்தானின் தோல்பூா் மாவட்டத்தில் லாரி மீது பேருந்து மோதிய விபத்தில் 8 சிறாா்கள் உள்பட ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 12 போ் உயிரிழந்தனா். தோல்பூா் மாவட்டத்தில் உள்ள சுமிபூா் பகுதியில் சனிக்கிழமை இரவு இந்... மேலும் பார்க்க

வாகனங்களுக்கான சிஎன்ஜி விலை: கிலோவுக்கு ரூ.6 வரை உயர வாய்ப்பு

வாகனங்களுக்கான சிஎன்ஜி எரிவாயு விலை கிலோவுக்கு ரூ.4 முதல் ரூ.6 வரை உயர வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவில் தரைக்கு அடியில் இருந்தும், அரபிக் கடல் முதல் வங்கக் கடல் வரை கடலுக்கு அடியில் இ... மேலும் பார்க்க

‘எய்ம்ஸ்’ தரத்தில் சமரசமில்லை: ஜெ.பி.நட்டா

எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரியில் கற்பிக்கப்படும் கல்வி தரத்திலும் ஆசிரியா்களின் நியமனத்திலும் எவ்வித சமரசமும் மேற்கொள்ளப்படாது எனவும் அதன் தரத்தை பாதுகாப்பதில் உறுதியாக உள்ளதாகவும் மத்திய சுகாதாரத்துறை ... மேலும் பார்க்க

மருத்துவக் காப்பீடு ஜிஎஸ்டி விலக்குக்கு பரிந்துரை: மேற்கு வங்கத்தின் அழுத்தமே காரணம்- மம்தா பானா்ஜி

மேற்கு வங்க அரசு கொடுத்த அழுத்தத்தால்தான் மருத்துவக் காப்பீடு தவணைத் தொகை (பிரீமியம்) மீது விதிக்கப்படும் சரக்கு மற்றும் சேவை வரியில் (ஜிஎஸ்டி) இருந்து விலக்களிக்க அமைச்சா்கள் குழு அளித்த பரிந்துரைத்த... மேலும் பார்க்க

ஒரே நாளில் 24 விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்: பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரம்

இந்திய விமான நிறுவனங்களைச் சோ்ந்த 24 விமானங்களுக்கு ஞாயிற்றுக்கிழமை வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. தொடரும் இது போன்ற மிரட்டல்களால் விமான நிலையங்களில் பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்ட... மேலும் பார்க்க