செய்திகள் :

தமிழகத்தில் இளம் வயதினரில் 50% பேருக்கு ரத்த சோகை! - அதிர்ச்சித் தகவல்

post image

தமிழ்நாட்டில் இளம் பருவத்தினரில் 50% பேர் ரத்த சோகையால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இதில் பெண்கள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் பொது சுகாதார ஆய்வு இயக்குநரகம் கண்டறிந்துள்ளது.

இரும்புச்சத்து குறைபாட்டினால் ஏற்படும் ரத்த சோகையால், நடத்தைகளில் மாற்றம், கவனக் குறைவு, வளர்ச்சியில் தாமதம் ஆகிய பாதிப்புகள் ஏற்படும். மேலும், சோர்வு, வெளிர் தோல், நகங்கள் உடைதல் உள்ளிட்ட பிரச்னைகளைச் சந்திக்கலாம்.

ஆண்களுக்கு இதர மருத்துவக் காரணங்களும் பெண்களுக்கு மாதவிடாய் உள்ளிட்ட காரணங்களாலும் அதிக ரத்த இழப்பு ஏற்படலாம்.

இதையும் படிக்க | புது வகை ஆன்லைன் மோசடி! ரூ. 60 லட்சத்தை இழந்த ஓய்வுபெற்ற அரசு அதிகாரி! எப்படி நடந்தது?

தேசிய குடும்ப சுகாதார கணக்கெடுப்பின்படி (2019-2021) நாட்டில் ரத்த சோகை பாதிப்பு பெண்களில் 59%, ஆண்களில் 31% என்ற அளவில் உள்ளது.

தமிழகத்தில் இளம்வயதினரின் பெண்களில் 52.9% ஆகவும், ஆண்களில் 24.6% ஆகவும் இருப்பதாக அறிக்கை கூறுகிறது.

இதுகுறித்து மாநில பொது சுகாதார இதழில் வெளியிடப்பட்ட ஆய்வின் முடிவில், 'தமிழகத்தில் இளம் பருவத்தினரிடையே ஏற்படும் ரத்த சோகை குறித்த விரிவான தரவுகள், குறிப்பாக இளைஞர்களிடம் ஏற்படும் பிரச்னைகள் குறித்த தரவுகள் இல்லை' என்று பொது சுகாதார இயக்குனர் டி.எஸ். செல்வவிநாயகம் குறிப்பிட்டுள்ளார்.

2023, மே மாதம் மற்றும் 2024 மார்ச் மாதத்துக்கு இடையே இளம் பருவத்தினரிடையே (10-19 வயது) ஒரு ஆய்வு நடத்தப்பட்டது. இது பாலினம், இருப்பிடம் மற்றும் ரத்த சோகையின் தீவிரம் ஆகியவை பற்றி கணக்கெடுப்பு நடத்தப்பட்டது.

மேலும், ‘அனீமியா முக்த் பாரத்’ என்ற மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி சுமார் 19.15 லட்சம் இளம் பருவத்தினரின் ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ஆய்வுக்கு அனுப்பப்பட்டன.

இந்த ஆய்வில் 48.3% பேருக்கு ரத்த சோகை இருந்தது தெரியவந்தது. இதில் 54.4% பெண்கள் மற்றும் 41% ஆண்கள்.

ரத்த சோகை உள்ள இளம் பருவ ஆண்களில், 59.1% பேர் லேசான ரத்த சோகை, 40.2% பேர் மிதமான ரத்த சோகை, 0.7% பேர் கடுமையான ரத்த சோகையால் பாதிக்கப்பட்டிருந்தனர்.

பெண்களில், 50.9% பேருக்கு லேசான ரத்த சோகை, 47% பேருக்கு மிதமான ரத்த சோகை, 2.1% பேருக்கு கடுமையான ரத்த சோகை இருந்தது.

(லேசானது: ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவு, சிறுமிகளுக்கு 11 -11.9 g/dL சிறுவர்களுக்கு 11 - 12.9 g/dL ; மிதமானது: 8 - 10.9 g/dL ; அளவு 8 g/dL -க்கும் குறைவாக இருந்தால் கடுமையான ரத்த சோகை)

தமிழகம் முழுவதும் ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையங்களில் அனைத்தும் 50% பேருக்கு அதிகமாக ரத்த சோகை பாதிப்பு இருந்தது கண்டறியப்பட்டுள்ளது.

இதையும் படிக்க |ரயில்வேயில் மாதம் ஒருமுறை மட்டுமே துவைக்கப்படும் கம்பளிகள்!

திருச்சியில் அதிகபட்சமாக 84%, திண்டுக்கல், கள்ளக்குறிச்சியில் தலா 70%, கடலூர் 61% என்ற அளவில் இருந்தது.

கடுமையான ரத்த சோகை பெரும்பாலான மாவட்டங்களில் 1%-க்கும் குறைவாகவே இருந்தது. கோவில்பட்டி, திருவள்ளூர் பகுதிகளில் மட்டும் தலா 2% பதிவாகியுள்ளது.

எனவே, 10 முதல் 19 வயது வரையுள்ள இளம் பருவத்தினரிடம் ரத்த சோகை குறித்து அரசு உள்ளிட்ட அனைத்துத் தரப்பினரும் உடனடி கவனம் செலுத்த வேண்டும் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

தீபாவளி பண்டிகை: மக்களுக்கு தமிழக அரசு விடுத்த வேண்டுகோள்

விபத்து, ஒலி மற்றும் மாசற்ற தீபாவளியை கொண்டாடுமாறு தமிழக மக்களுக்கு தமிழக அரசு வேண்டுகோள் வைத்துள்ளது. மேலும் பார்க்க

மீண்டும் சர்ச்சையில் சிக்கிய யூடியூபர் இர்ஃபான்!

தனது குழந்தையின் தொப்புள் கொடியை வெட்டும் விடியோவை வெளியிட்டு யூடியூபர் இர்ஃபான் மீண்டும் சர்ச்சையில் சிக்கியுள்ளார்.பிரபல யூடியூபர் இர்ஃபானுக்கும் அவரது மனைவிக்கும் கடந்த சில நாள்களுக்கு முன்னதாக பெண... மேலும் பார்க்க

நாவரசு கொலை: ஜான் டேவிட்டுக்கு இடைக்கால ஜாமீன்

சென்னை: மருத்துவ மாணவர் நாவரசு கொலை வழக்கில், ஆயுள் தண்டனை பெற்ற ஜான் டேவிட்டுக்கு இடைக்கால ஜாமீன் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. அண்ணாமலை பல்கலைக்கழக மாணவர் நாவரசு கொலை செய்ய... மேலும் பார்க்க

அடுத்த 3 மணிநேரத்துக்கு 10 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்!

தமிழகத்தில் உள்ள 10 மாவட்டங்களுக்கு இன்றிரவு 7 மணிவரை கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கையை சென்னை வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது.மேலும், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை உள்பட 10 மாவட்டங்களில் லேசா... மேலும் பார்க்க

லஞ்ச வழக்கில் அதிகம் சிக்கிய அதிகாரிகள்.. எந்தத் துறையைச் சேர்ந்தவர்கள்?

தமிழகத்தில், கடந்த ஐந்து ஆண்டுகளில், லஞ்சம் வாங்கி வழக்கில் சிக்கயி அதிகாரிகளை அதிகம் கொண்ட துறையாக ஊரக வளர்ச்சித் துறை இருப்பதாக தரவுகள் தெரிவிக்கின்றன.தமிழகத்தில் இயங்கும் ஊழல் மற்றும் லஞ்ச ஒழிப்பு ... மேலும் பார்க்க

நெல்லை தனியார் பயிற்சி மையத்தின் விடுதிகள் மூடல்

நெல்லையில் இயங்கி வந்த தனியாா் பயிற்சி மையத்தில் உள்ள மாணவா்களை பயிற்சி ஆசிரியா்கள் தாக்கியது விவகாரத்தில் மனித உரிமைகள் ஆணைய உறுப்பினா் விசாரணை நடத்திய நிலையில், பயிற்சி மையத்தின் விடுதிகள் மூடப்பட்ட... மேலும் பார்க்க