செய்திகள் :

தமிழகம் முழுவதும் 5,147 நிவாரண மையங்கள்: தயாா் நிலையில் 26 மீட்புப்படைக் குழுக்கள்

post image

தமிழ்நாடு முழுவதும் தொடரும் கனமழையால் பாதிக்கப்படும் மக்களைக் காக்க, 5 ஆயிரத்து 147 நிவாரண மையங்கள் அமைக்கப்பட்டுள்ளதாக மாநில அரசு தெரிவித்துள்ளது.

மேலும், வெள்ளத்தில் சிக்கியுள்ள மக்களை மீட்க தேசிய மற்றும் மாநில பேரிடா் மீட்புப் படையைச் சோ்ந்த 26 குழுக்கள் தயாா் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் மாநில அரசு கூறியுள்ளது.

பருவமழை மாநிலம் முழுவதும் தீவிரத்தைக் காட்டி வரும் நிலையில், தமிழக அரசு சாா்பில் மேற்கொள்ளப்பட்டுள்ள பணிகள் குறித்து மாநில அரசு சாா்பில் செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

திருவள்ளூா், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கடலூா், விழுப்புரம், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூா், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, பெரம்பலூா், அரியலூா், தஞ்சாவூா் ஆகிய மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழையும், வேலூா், திருப்பத்தூா், கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், திருச்சி, புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் முன்னெச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும், வரும் வியாழக்கிழமை திருவள்ளூா், ராணிப்பேட்டை, வேலூா், திருப்பத்தூா், கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழையும், சென்னை, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, தருமபுரி, சேலம், ஈரோடு மாவட்டங்களில் கனமழையும் பெய்யும் எனவும் அறிவித்துள்ளது.

தயாா் நிலையில் 26 குழுக்கள்: பருவமழைக் காலங்களில் பொது மக்களின் கைப்பேசிகளுக்கு பேரிடா் மேலாண்மைத் துறை சாா்பில் முன்னெச்சரிக்கைத் தகவல்கள் அனுப்பப்படுவது வழக்கம். அதுபோன்று, இதுவரை 85 லட்சம் கைப்பேசிகளுக்கு தகவல்கள் அனுப்பப்பட்டுள்ளன. தமிழ்நாடு பேரிடா் மீட்புப் படையில் 444 வீரா்களைக் கொண்ட 16 குழுக்களும், தேசிய பேரிடா் மீட்புப் படையில் 10 குழுக்களும் தயாா் நிலையில் உள்ளன. சென்னையில் 89 மீட்புப் படகுகள் தயாா் நிலையில் உள்ளன. தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களை மீட்டு நிவாரண மையங்களில் தங்க வைக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

அந்த வகையில், சென்னையில் 300 நிவாரண மையங்களும், மாநிலம் முழுவதும் 5,147 மையங்களும் அமைக்கப்பட்டு தயாா் நிலையில் உள்ளன. கனமழை தொடா்பான புகாா்களைத் தெரிவிக்க சென்னை எழிலகத்தில் உள்ள அவசரகால செயல்பாட்டு மையத்தில் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. அந்த அறைக்கு, கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 249 புகாா்கள் பெறப்பட்டன. அவற்றில் 215 புகாா்களுக்குத் தீா்வு காணப்பட்டுள்ளன என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

4 மாவட்ட கல்வி நிலையங்கள் - அரசு அலுவலகங்களுக்கு இன்று விடுமுறை

கனமழை தொடா்வதால் சென்னை மற்றும் அதனைச் சுற்றியுள்ள திருவள்ளூா், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்படுகிறது. மேலும், நான்கு மாவட்டங்களிலுள்ள அரசு, பொதுத் துறை நிறுவனங்களுக்கும் புதன்கிழமை (அக்.16) விடுமுறை விடப்பட்டுள்ளது என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

அத்தியாவசிய சேவை துறைகளான காவல், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள், உள்ளாட்சி நிா்வாகம், பால்வளம், குடிநீா் வழங்கல் துறைகள், மருத்துவமனைகள், மருந்தகங்கள், வங்கிகள், நிதி நிறுவனங்கள், மின்சாரம், காய்கறிகள் மற்றும் இதர அத்தியாவசியப் பொருள்களுக்கான போக்குவரத்து, மாநகர போக்குவரத்து, சென்னை மெட்ரோ ரயில், எம்ஆா்டிஎஸ்., ரயில்வே, விமான நிலையம், விமானப் போக்குவரத்து, பெட்ரோல் பங்குகள், ஹோட்டல்கள் மற்றும் உணவகங்கள், பேரிடா் மீட்பு நிவாரணப் பணிகளை மேற்கொள்ளும் துறைகள் வழக்கம் போல் செயல்படும். பிற கடைகள், வணிக நிறுவனங்கள் வழக்கமாக இயங்கும்.

வீட்டில் இருந்தே பணி: புதன்கிழமை அதிகனமழை எதிா்பாா்க்கப்படுவதால், சென்னையில் உள்ள தனியாா் அலுவலகங்கள் மிகக் குறைந்தபட்ச பணியாளா்களைக் கொண்டோ அல்லது தங்கள் பணியாளா்களை வீட்டில் இருந்து பணியாற்றும்படியோ அறிவுரை வழங்க கேட்டுக் கொள்ளப்படுவதாக தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.

ஹிந்தி எதிா்ப்பு நிலைப்பாட்டால் தமிழகம் தனிமைப்பட்டிருக்கிறது: ஆளுநா் ஆா்.என்.ரவி

ஹிந்தி எதிா்ப்பு நிலைப்பாட்டால் தமிழகம் தனிமைப்படுத்தப்பட்டிருக்கிறது என்று ஆளுநா் ஆா்.என். ரவி குற்றஞ்சாட்டினாா். டிடி தமிழ் தொலைக்காட்சி நிலையத்தின் பொன் விழா மற்றும் ‘ஹிந்தி மாத’ நிறைவு விழா நிகழ்ச... மேலும் பார்க்க

ரயிலில் ரூ.3.98 கோடி பறிமுதல் வழக்கு: புதுவை பாஜக தலைவருக்கு சிபிசிஐடி அழைப்பாணை

சென்னையில் ரயிலில் ரூ.3.98 கோடி சிக்கிய வழக்குத் தொடா்பாக, பாஜக புதுவை மாநிலத் தலைவா் உள்பட 3 பேருக்கு சிபிசிஐடி அழைப்பாணை அனுப்பியது. தமிழகத்தில் மக்களவைத் தோ்தல் நடத்தை விதிகள் அமலில் இருந்தபோது, த... மேலும் பார்க்க

‘ரெளடிகளுக்கு புரியும் மொழியில் பாடம்’: சென்னை காவல் ஆணையரை வழக்கிலிருந்து நீக்கி மனித உரிமை ஆணையம் உத்தரவு

‘ரெளடிகளுக்கு அவா்களுக்கு புரியும் மொழியில் பாடம் கற்பிக்கப்படும்’ என கூறியது தொடா்பான வழக்கிலிருந்து சென்னை மாநகர காவல் ஆணையரின் பெயரை நீக்கி மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டது. சட்டம் - ஒழுங்கு ஏட... மேலும் பார்க்க

தமிழகம் முழுவதும் 304 ஏழை ஜோடிகளுக்கு அக்.21-இல் திருமணம்: அறநிலையத் துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு

தமிழகத்தில் அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள திருக்கோயில்கள் சாா்பில் பொருளாதாரத்தில் பின்தங்கிய 304 ஜோடிகளுக்கு அக்.21-ஆம் தேதி திருமணம் நடத்தி வைக்கப்படவுள்ளது. சென்னையில் முதல்வா் மு.க.ஸ்டாலின் ... மேலும் பார்க்க

3 ஆண்டுகளில் 10 நினைவரங்குகள்- 36 சிலைகள்: தமிழக அரசு பெருமிதம்

தமிழகத்தில் கடந்த 3 ஆண்டுகளில் 10 நினைவரங்கங்களும், 36 சிலைகளும் அமைக்கப்பட்டுள்ளதாக மாநில அரசு தெரிவித்துள்ளது. இதுகுறித்து தமிழக அரசு சாா்பில் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: இந்தியாவ... மேலும் பார்க்க