செய்திகள் :

தமிழ்நாடு சீருடைப் பணியாளா் தோ்வாணைய தலைவர் நியமன வழக்கு: விசாரணை அக். 25-க்கு ஒத்திவைப்பு

post image

தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணைய தலைவராக ஓய்வுபெற்ற காவல்துறை தலைமை இயக்குநரை நியமித்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக வழக்குரைஞர் பிரிவு அணியினர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு மீதான வழக்கின் விசாரணையை வருகிற 25-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து, சென்னை உயர்நீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.

தமிழ்நாடு சீருடைப் பணியாளா் தோ்வாணையத்தின் தலைவராக ஓய்வுபெற்ற காவல்துறை தலைமை இயக்குநா் சுனில்குமாரை நியமனம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டிருந்து. இதுவரை பணியில் உள்ள காவல்துறை தலைமை இயக்குநா் நிலை அதிகாரிகள் மட்டுமே நியமிக்கப்பட்டு வந்த இந்தப் பணிக்கு, இதுவரை இல்லாத வகையில் ஓய்வுபெற்ற அதிகாரி ஒருவா் நியமிக்கப்பட்டதற்கு அதிமுக, பாமக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்தது.

இதையும் படிக்க |மதுரையில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு தாழ்தள பேருந்து சேவை துவக்கம்

இந்த நிலையில் தமிழ்நாடு சீருடைப் பணியாளா் தோ்வாணையத்தின் தலைவராக ஓய்வுபெற்ற காவல்துறை தலைமை இயக்குநா் சுனில்குமார் நியமனம் செய்யப்பட்டதை எதிர்த்து அதிமுக சார்பில் வழக்குரைஞர் இன்பதுரை சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

இதையடுத்து இந்த வழக்கில் தமிழ்நாடு அரசு 25 ஆம் தேதிக்குள் பதிலளிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளதாக அதிமுக வழக்குரைஞர் பிரிவு வழக்குரைஞர் இன்பதுரை தெரிவித்தார்.

ஒட்டுமொத்த உலகமும் இந்தியாவுடன் வர்த்தகம் செய்ய விரும்புகிறது: பியூஷ் கோயல்

புதுதில்லி : நாட்டின் அடிப்படை வலுவாக உள்ளதால், ஒட்டுமொத்த உலகமும் இந்தியாவுடன் வர்த்தகம் செய்ய விரும்புகிறது என மத்திய வர்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சர், பியூஷ் கோயல் தெரிவித்தார்.இது குறித்து ப... மேலும் பார்க்க

ஆளுநர் பங்கேற்ற ஹிந்தி விழாவில் 'தமிழ்த்தாய் வாழ்த்து' சர்ச்சை!

சென்னையில் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி கலந்துகொண்ட விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்தில் ஒரு வரி பாடப்படவில்லை என சர்ச்சை கிளம்பியுள்ளது. சென்னையில் டிடி தமிழ் தொலைக்காட்சி அலுவலகத்தில் இன்று பிற்பகல் நடைபெற்... மேலும் பார்க்க

உதயநிதி ஸ்டாலினை சட்டை அணியச் சொல்லுங்கள்! சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு

தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்கும்போது முறைப்படியான ஆடைக் கட்டுபாட்டைக் கடைபிடிக்க உத்தரவிடக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.இது தொடர்பா... மேலும் பார்க்க

புதுச்சேரியில் பாக்கெட் சாராயத்துக்கு மீண்டும் தடை!

புதுச்சேரி மற்றும் காரைக்காலில் உள்ள சாராயக்கடைகளில் பாக்கெட்டில் சாராயம் அடைத்து விற்பனை செய்ய கலால் துறை தடை விதித்துள்ளது. சுற்றுச்சூழல் துறையின் உத்தரவு பேரில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.பு... மேலும் பார்க்க

சிறைகளில் 84 பிரபல ரௌடிகளை 1987 முறை சந்தித்த 396 வழக்குரைஞர்கள்!

கடந்த ஜனவரி 1 முதல் ஜூலை 20 வரை சிறையில் அடைக்கப்பட்டுள்ள 84 பிரபல ரெளடிகளை 396 வழக்குரைஞர்கள் 1987 முறை சந்தித்தத்தாக காவல் துறை தலைமை இயக்குநர் சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார்.தமிழகத்தில் நிலவும் ஆபத... மேலும் பார்க்க