செய்திகள் :

தவெக மாநாட்டில் பங்கேற்பா? - நடிகர் விஷால் பதில்

post image

தமிழக வெற்றிக் கழக மாநாட்டில் பங்கேற்பா? என்கிற கேள்விக்கு நடிகர் விஷால் பதிலளித்துள்ளார்.

இதுகுறித்து அவர் சென்னையில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், தமிழக வெற்றிக் கழக மாநாட்டிற்கு அழைப்பு விடுத்தால் பங்கேற்பேன். அழைப்பு இல்லாவிட்டாலும் ஓரமாக நின்று மாநாட்டை பார்ப்பேன். புதிய அரசியல்வாதி வருகிறார்.

அவர் என்ன பேசப்போகிறார் என்பதை கேட்க ஒரு வாக்காளராக ஆவலாக உள்ளேன்.

நான் ஏற்கெனவே அரசியல்வாதிதான். சமூக சேவை செய்கிற அனைவருமே அரசியல்வாதிதான். தவெகவில் இணைவது பற்றி இன்னும் முடிவெடுக்கவில்லை.

நடிகர் விஷால்2026 தேர்தலில் நான் வேட்பாளராக இருக்கவும் வாய்ப்புள்ளது. இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

விக்கிரவாண்டியை அடுத்த வி.சாலையில் வருகிற 27-ஆம் தேதி தவெகவின் முதல் மாநில மாநாடு நடைபெறவுள்ளது. இதற்காக கடந்த 4-ஆம் தேதி பந்தல்கால் நடப்பட்டது.

மாநாட்டுத் திடலை சமன் செய்தல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில், மழையால் பணிகள் சற்று தாமதமாகின.

கடந்த 2 நாள்களாக மாநாட்டுப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

தீபாவளி: ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணமா? புகார் எண்கள்!

தீபாவளி பண்டிகை காலத்தை பயன்படுத்தி ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலித்தால் புகார் அளிக்க உதவி எண்களை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.தீபாவளி பண்டிகை அடுத்த வாரம் வியாழக்கிழமை(அக். 31) கொண்டாடப்படவுள்... மேலும் பார்க்க

தூத்துக்குடியில் பலத்த மழை

தூத்துக்குடி புறநகர் பகுதியில் திங்கள்கிழமை பலத்த மழை பெய்தது.மத்திய கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனையொட்டிய வடக்கு அந்தமான் கடல் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை உருவாகியுள்ள வளிமண்டல மேலடுக்கு சுழற்சி, தற்ப... மேலும் பார்க்க

தீபாவளி: காரில் சொந்த ஊர் செல்வோர் கவனத்துக்கு..

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, சென்னையிலிருந்து, காரில் சொந்த ஊர் செல்வோர், தாம்பரம்-பெருங்களத்தூர் வழியாக செல்வதைத் தவிர்க்க வேண்டும்.சென்னையிலிருந்து திருப்போரூர்-செங்கல்பட்டு அல்லது வண்டலூர் வெளிச்ச... மேலும் பார்க்க

தீபாவளியையொட்டி 14,086 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்: அமைச்சர் சிவசங்கர்

சென்னை: தீபாவளி பண்டிகையையொட்டி தமிழகம் முழுவதும் ஒட்டுமொத்தமாக 14,086 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுவதாக தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் அறிவித்துள்ளார்.தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சி... மேலும் பார்க்க

தீபாவளி சிறப்புப் பேருந்துகள்: அமைச்சர் ஆலோசனை

தீபாவளி பண்டிகையையொட்டி சிறப்புப் பேருந்துகள் இயக்குவது தொடர்பாக அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.பண்டிகை காலங்களில் சென்னை உள்ளிட்ட நகரங்களில் இருந்து பிற ஊர்களுக்கு தமிழக அரசு... மேலும் பார்க்க

புரட்டாசி முடிந்து பட்டினப்பாக்கம் வந்த மக்களுக்குக் காத்திருந்த குழப்பம்!

சென்னை, பட்டினப்பாக்கம் லூப் சாலையில் பல கோடி மதிப்பீட்டில் நவீன மீன் அங்காடி கட்டப்பட்டு திறக்கப்பட்டும் கூட, லூப் சாலையிலேயே இரண்டாவது நாளாக ஞாயிற்றுக்கிழமையும் 40க்கும் மேற்பட்ட கடைகள் இயங்கியதால் ... மேலும் பார்க்க