செய்திகள் :

"தாத்தா காலத்து அற்ப அரசியலை, பேரன் காலத்திலும் தொடர்வதை, ஸ்டாலின் நிறுத்தணும்" - அண்ணாமலை

post image

பிரதமர் மோடி பீகாரில் பிரச்சாரம் மேற்கொள்ளும்போது தமிழ்நாட்டில், பீகார் மக்கள் துன்புறுத்தப்படுவதாகப் பேசியிருக்கிறார்.

இதற்கு தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், "இந்த நாட்டிலுள்ள அனைவருக்குமான மாண்புமிகு பிரதமர் பொறுப்பில் இருக்கிறோம் என்பதையே திரு. நரேந்திர மோடி அவர்கள் அடிக்கடி மறந்து, இதுபோன்ற பேச்சுகளால் தன்னுடைய பொறுப்புக்குரிய மாண்பை இழந்துவிடக் கூடாது என்று ஒரு தமிழனாக வேதனையுடன் கேட்டுக் கொள்கிறேன்" என்று கண்டனம் தெரிவித்திருந்தார்.

பிரதமர் மோடி
பிரதமர் மோடி

ஸ்டாலினின் இந்த கண்டனத்திற்கு தமிழக முன்னாள் பாஜக தலைவர் அண்ணாமலை எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் பதிவில், " திமுகவின் ஊழலும், போலி வேடமும் மக்கள் மத்தியில் அம்பலப்படும்போதெல்லாம், அதனை மடைமாற்ற, மக்கள் மத்தியில் பிரிவினையைத் தூண்டுவது திமுகவின் வழக்கம்.

நகராட்சி நிர்வாகத் துறையில், ₹888 கோடி ஊழல் நடந்திருப்பது வெளியானவுடன், அதனை மறைக்கும் முயற்சியைத் தொடங்கியிருக்கிறார் முதலமைச்சர் திரு. ஸ்டாலின்.

உழைக்கும் பீகார் மக்களைத் திமுகவினர் துன்புறுத்துகின்றனர் என்று, நமது மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு.நரேந்திர மோடி அவர்கள் கூறியது முழுக்க முழுக்க உண்மை.

தமிழக அமைச்சர்கள் பொன்முடி, டி. ஆர். பி. ராஜா, எம்பி தயாநிதி மாறன், ஆ.ராசா தொடங்கி, கடைக்கோடி திமுக நிர்வாகிகள் வரை, பீகார் மக்களை ஏளனமாகப் பேசியதும், அவர்கள் மீது தாக்குதலுக்குத் தூண்டுவதைப் போல பேசியதும், தமிழக மக்கள் அறிவார்கள்.

முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள இந்த காணொளியிலேயே, நமது மாண்புமிகு பாரதப் பிரதமர் அவர்கள், தமிழகத்தில், பீகார் மக்களை திமுகவினர் துன்புறுத்துகிறார்கள் என்று பேசியிருப்பது தான் இருக்கிறது.

ஸ்டாலின்
ஸ்டாலின்

எப்படி, திமுகவினர் தமிழகத்தின் அவமானச் சின்னமாக இருக்கிறார்களோ, அதே போல, பிரதமர் அவர்கள் திமுகவினரைக் குறிப்பிட்டதை, தமிழக மக்களைக் குறிப்பிட்டதாக மடைமாற்ற முயற்சிப்பது, திரு. ஸ்டாலின் அவர்கள் வகிக்கும் முதலமைச்சர் பதவிக்கே அவமானம்.

தாத்தா காலத்தில் தொடங்கிய இந்த அற்ப அரசியலை, பேரன் காலத்திலும் தொடர்வதை, முதலமைச்சர் நிறுத்திக் கொள்ள வேண்டும்.

`நீக்கப்பட்ட செங்கோட்டையன்' - எடப்பாடி வீட்டில் அதிமுக முக்கிய நிர்வாகிகள் ஆலோசனையில் முடிவு

முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், கடந்த சில நாட்களுக்கு முன்பு அ.தி.மு.க ஒன்றிணைய வேண்டும் என எடப்பாடி பழனிசாமிக்கு பத்து நாள் கெடு விதித்தார். இதை தெரிவித்த 24 மணி நேரத்திற்குள், செங்கோட்டையன் அ.தி.மு... மேலும் பார்க்க

JD Vance: ``எனக்கு அது ஒரு பிரச்னை இல்லை; ஆனால்'' - இந்து மனைவி உஷா குறித்து அமெரிக்க துணை அதிபர்

அமெரிக்காவின் துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் (JD Vance), தனது இந்து மனைவி உஷா ஒருநாளில் கிறிஸ்துவராக மாறுவார் என்று நம்புவதாகவும், தங்கள் குழந்தைகளை கிறிஸ்தவர்களாக வளர்க்க முடிவு செய்திருப்பதாகவும் கூறியிர... மேலும் பார்க்க

SP Lakshmanan Interview | TTV - Vijay கூட்டணி | Amit shah -வின் பிளான் | TVK | Vikatan

பசும்பொன்னில் நடந்த தேவர் ஜெயந்தியில் ஓபிஎஸ், டிடிவி தினகரன், செங்கோட்டையன் ஆகிய மூவரும் ஒன்றாக இணைந்து பசும்பொன் முத்துராமலிங்க தேவருக்கு மரியாதை செலுத்தியது அரசியல் அரங்கில் பேசுபொருளாக மாறியுள்ளது.... மேலும் பார்க்க

செங்கோட்டையன் நீக்கம், சளைக்காத Sasikala, EPS-ன் புது ஆட்டம்! | Elangovan Explains

கட்சிக்குள் மீண்டும் சேர்ந்து விட வேண்டும் என சில முயற்சிகளை முன்னெடுக்கும் வி.கே சசிகலா. அந்த வகையில் எடப்பாடி டீமிடம், சசிகலாவின் தூதுவர்கள் டீல் பேசி வருகின்றனர். மூன்று டிமாண்டுகளை முன்வைக்கின்றனர... மேலும் பார்க்க

``சர்தார் படேல் மீது மரியாதை இருந்தால், மோடி RSS-ஐ தடைசெய்ய வேண்டும்'' - கார்கே காட்டம்

சர்தார் வல்லபாய் படேலின் 150-வது பிறந்தநாளான இன்று பிரதமர் மோடி குஜராத்தில் இன்று (அக்டோபர் 31) அவரது சிலைக்கு மரியாதை செலுத்தினார்.மேலும், தேசிய ஒற்றுமை தினமாகக் கொண்டாடப்படும் படேலின் பிறந்த நாள் உர... மேலும் பார்க்க