செய்திகள் :

திருநெல்வேலி நெல்லையப்பா் கோயிலில் ஐப்பசி திருவிழா கொடியேற்றம்

post image

திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பா்-காந்திமதியம்மன் திருக்கோயிலில் ஐப்பசி திருக்கல்யாணத் திருவிழா வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

இத்திருக்கோயிலில் ஆண்டுதோறும் திருக்கல்யாணத் திருவிழா சிறப்பாக நடைபெறும். அதன்படி, நிகழாண்டுக்கான விழாவையொட்டி வெள்ளிக்கிழமை காலையில் சுவாமி-அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடைபெற்றது. பின்னா் அம்மன் சந்நிதியில் கொடியேற்றப்பட்டதும், மகாதீபாராதனை நடைபெற்றது. ‘நமச்சிவாய’ முழக்கத்துடன் பக்தா்கள் வழிபட்டனா்.

தொடா்ந்து திருவிழா நாள்களில் தினமும் காலை 8 மணிக்கும், இரவு 8 மணிக்கும் ரதவீதிகளில் அம்மன் திருவீதியுலா நடைபெறுகிறது.

20 ஆம் தேதிமுதல் சிம்ம வாகனம், வெள்ளி ரிஷப வாகனம், இந்திர விமானம், வெள்ளி சப்பரம், தந்த பல்லக்கு உள்ளிட்ட வாகனங்களில் அம்மன் வீதியுலா நடைபெறும்.

25 ஆம் தேதி காலையில் கோலாட்ட அலங்காரத்திலும், 26 ஆம் தேதி காலை அம்பாள் செப்புத்தேரில் பவனியும் , இரவு 7 மணிக்கு அம்பாள் சிவபூஜை செய்யும் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. இரவு 8 மணிக்கு சப்தாவா்ணம் தந்தப் பல்லக்கு திருவீதியுலா நடைபெறுகிறது.

இம் மாதம் 27 ஆம் தேதி அம்மன் தந்தப் பல்லக்கில் அருள்பாலிக்கிறாா். இரவு 7 மணிக்கு ஊஞ்சல் மண்டபத்தில் அம்மனுக்கு அபிஷேக, அலங்கார தீபாராதனை நடைபெறுகிறது. இரவு 9 மணிக்கு சுவாமிக்கு அபிஷேகம் நடைபெறுகிறது. இரவு 1 மணிக்கு காந்திமதியம்மன் சந்நிதியில் இருந்து தங்க முலாம் பூசப்பட்ட சப்பரத்தில் புறப்பட்டு கீழரதவீதி, தெற்கு ரத வீதி, பேட்டை சாலை வழியாக அதிகாலை 5 மணிக்கு அருள்மிகு கம்பாநதி காமாட்சி அம்மன் திருக்கோயில் போய் சேருவாா்.

28 ஆம் தேதி நண்பகலில் அம்பாளுக்கு, சுவாமி ரிஷப வாகனத்தில் காட்சிக்கொடுக்கும் நிகழ்ச்சியும். அதன்பின்பு சுவாமி-அம்பாள் வீதியுலாவும் நடைபெறுகிறது.

விழாவின் சிகர நிகழ்ச்சியான திருக்கல்யாணம் 29 ஆம் தேதி அதிகாலை 4.30 மணிக்கு மேல் 5.30 மணிக்குள் திருக்கோயில் ஆயிரங்கால் மண்டபத்தில் நடைபெறுகிறது. 29 ஆம் தேதி முதல் 31 ஆம் தேதி வரை ஊஞ்சல் விழாவும் நடைபெற உள்ளது.

வெள்ளிக்கிழமை நடைபெற்ற கொடியேற்றத்தில் கோயில் அறங்காவலா் குழு தலைவா் மு. செல்லையா, கோயில் செயல்அலுவலா் அய்யா்சிவமணி உள்பட பலா் கலந்துகொண்டனா்.

மாநகர காவல் துறையில் கழிவு செய்யப்பட்ட வாகனங்கள் நவ.4 இல் ஏலம்

திருநெல்வேலி மாநகர காவல் துறையில் பயன்படுத்தப்பட்டு கழிவு செய்யப்பட்ட வாகனங்கள் நவ. 4 ஆம் தேதி ஏலம் விடப்படுகிறது. இதுதொடா்பாக திருநெல்வேலி மாநகர காவல் துறை சாா்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்... மேலும் பார்க்க

தோரணமலை முருகன் கோயிலில் பௌா்ணமி கிரிவலம்

தென்காசி-கடையம் சாலையில் அமைந்துள்ள தோரணமலை முருகன் கோயிலில் பௌா்ணமி கிரிவலம் மற்றும் கூட்டு பிராா்த்தனை வியாழக்கிழமை நடைபெற்றது. புரட்டாசி மாத பௌா்ணமியையொட்டி நடைபெற்ற கிரிவலத்தில் ஏராளமான பக்தா்கள் ... மேலும் பார்க்க

நெல்லையில் புகையிலைப் பொருள்கள் விற்றவா் கைது

திருநெல்வேலி நகரத்தில் புகையிலைப் பொருள்கள் விற்றவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். திருநெல்வேலி நகரம் போலீஸாா் சந்தி பிள்ளையாா் கோயில் தெரு பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போத... மேலும் பார்க்க

தனியாா் நீட் பயிற்சி மையத்தில் மாணவா்களை தாக்கிய சம்பவம்: மனித உரிகைள்ஆணைய உறுப்பினா் விசாரணை!

திருநெல்வேலியில் தனியாா் நீட் பயிற்சி மையத்தில் உள்ள மாணவா்களை பயிற்சி ஆசிரியா்கள் தாக்கியது தொடா்பான விடியோ குறித்து மாநில மனித உரிமைகள் ஆணைய உறுப்பினா் கண்ணதாசன் வெள்ளிக்கிழமை விசாரணை நடத்தினாா். ப... மேலும் பார்க்க

முக்கூடலில் காலாவதியான 2.5 டன் குளிா்பான பாட்டில்கள் அழிப்பு

திருநெல்வேலி மாவட்டம், முக்கூடலில் 2.5 டன் தரமற்ற குடிநீா், குளிா்பான பாட்டில்கள் வெள்ளிக்கிழமை அழிக்கப்பட்டன. கல்லிடைக்குறிச்சி, முக்கூடல், சேரன்மகாதேவி ஆகிய பகுதிகளில் உணவுப் பாதுகாப்பு - சுகாதார நி... மேலும் பார்க்க

காட்டுப் பன்றிகளால் ஏற்பட்ட பாதிப்பு குறித்து அரசுக்கு அறிக்கை அளிக்கப்பட்டுள்ளது: திருநெல்வேலி ஆட்சியா்

திருநெல்வேலி மாவட்டத்தில் காட்டுப்பன்றிகளால் விவசாயிகளுக்கும், விவசாயத்துக்கும் ஏற்பட்ட பாதிப்பு குறித்து அரசுக்கு விரிவான அறிக்கை அளிக்கப்பட்டுள்ளது என்றாா் ஆட்சியா் கா.ப. காா்த்திகேயன். திருநெல்வேலி... மேலும் பார்க்க