செய்திகள் :

தில்லி மின் உற்பத்தி நிலையங்களை அதானியிடம் ஒப்படைக்க அழுத்தம்! கேஜரிவால்

post image

தில்லி முதல்வராக இருந்தபோது, மின் உற்பத்தி நிலையங்களை அதானியிடம் ஒப்படைக்க தனக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டதாக அரவிந்த் கேஜரிவால் குற்றம்சாட்டியுள்ளார்.

அடுத்தாண்டு பிப்ரவரி மாதத்தில் தில்லி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், சட்டப்பேரவையில் குளிர்காலக் கூட்டத்தொடர் நடைபெற்று வருகின்றன.

இந்த கூட்டத்தில் அதானி தொடர்புடைய குற்றச்சாட்டை முன்னாள் முதல்வரும் ஆம் ஆத்மி தலைவருமான அரவிந்த் கேஜரிவால் புதன்கிழமை முன்வைத்துள்ளார்.

சட்டப்பேரவையில் கேஜரிவால் பேசியதாவது:

“நான் முதல்வராக இருந்தபோது, தில்லி மின் உற்பத்தி நிலையங்களை அதானிக்கு ஒப்படைக்க அழுத்தம் கொடுத்தார்கள். நான் மறுத்துவிட்டேன். சிறைக்கு சென்றதற்கு அதுவும் காரணமாக இருக்கக்கூடும் என்று நான் எண்ணினேன்.

ஆட்சிக்கு வந்தால் அதானிக்கு மின் உற்பத்தி நிலையங்களை கொடுக்க மாட்டோம் என்று பாஜக அறிவிக்க வேண்டும் என்று நான் சவால் விடுகிறேன்.

தில்லியில் பெருமளவில் வாக்குகளை குறைக்கும் சதிச் செயலில் ஈடுபட்டுள்ளனர். இரண்டு நாள்கள் காத்திருங்கள். நான் அவர்களை அம்பலப்படுத்துகிறேன்.

மகாராஷ்டிரம் மற்றும் ஹரியாணாவில் பாஜக எப்படி வெற்றி பெற்றது என்பதை நாட்டு மக்களுக்கு நான் சொல்கிறேன். நீங்கள் நேர்மையாக தேர்தலில் வெற்றி பெறவில்லை” எனத் தெரிவித்தார்.

இதையும் படிக்க : ரூபாய் மதிப்பு கடும் சரிவு!

ஏற்கெனவே, நாட்டில் ‘அதானி கிரீன் எனா்ஜி’ நிறுவனம் விநியோகித்த சூரிய மின்சக்தியை வாங்க பல்வேறு மாநில மின்பகிா்மான நிறுவன அதிகாரிகளுக்கு 265 மில்லியன் டாலா் (சுமாா் ரூ.2,239 கோடி) லஞ்சம் அளிக்கப்பட்டதாக அமெரிக்க நீதிமன்றத்தில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

விவசாயிகள் பலர் காயம்: பேரணி தற்காலிக நிறுத்தம்!

தில்லி நோக்கிச் சென்ற விவசாயிகளின் பேரணி தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. மேலும் பார்க்க

நக்ஸல்கள் அட்டூழியம்: பெண் கழுத்தறுத்துக் கொலை!

சத்தீஸ்கரில் காவல்துறை உளவாளி என்ற சந்தேகத்தின்பேரில் பெண் ஒருவர் கழுத்தறுத்துக் கொல்லப்பட்ட சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.நக்ஸலைட் பயங்கரவாதிகள் ஆதிக்கம் நிறைந்த சத்தீஸ்கர் மாநிலத்தில் 40 வ... மேலும் பார்க்க

வாட்ஸ்ஆப்பில் புதிய அம்சங்கள்!

வாட்ஸ்ஆப்பில் 3 புதிய அம்சங்கள் விரைவில் பயன்பாட்டுக்கு வர உள்ளன. வாட்ஸ்ஆப் பயன்படுத்துவோரின் வசதிக்காக சாட் செய்யும்போது கூடுதல் அம்சமாக ‘டைப்பிங் இண்டிகேட்டர்’ என்ற வசதியை மெட்டா நிறுவனம் தனது வாட்ஸ... மேலும் பார்க்க

ம.பி.யில் காவல்துறையின் ஆயுதக் கிடங்கில் இருந்து 200 தோட்டாக்கள் திருட்டு

மத்தியப் பிரதேசத்தில் காவல்துறையின் ஆயுதக் கிடங்கில் இருந்து 200 தோட்டாக்கள் திருட்டப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மத்தியப் பிரதேச மாநிலம், மொரீனா மாவட்டத்தில் மாநில காவல்துறையின் சிறப்பு ... மேலும் பார்க்க

மகாயுதி கூட்டணி பதவியேற்பு விழாவில் பணம், தங்க நகைகள் திருட்டு!

மகாராஷ்டிரத்தில் மகாயுதி கூட்டணியின் பதவியேற்பு விழாவில், பணம், தங்கநகைகள், மொபைல் போன்கள் உள்பட ரூ. 12 மதிப்பிலான பொருள்கள் திருடு போனதாகக் காவல்துறையினர் தெரிவித்தனர். மகாராஷ்டிர சட்டப்பேரவைத் தேர்த... மேலும் பார்க்க

ஜெய்ப்பூரில் குடியிருப்பு பகுதியில் புகுந்து 3 பேரைத் தாக்கிய சிறுத்தையால் பரபரப்பு

ஜெய்ப்பூரில் குடியிருப்பு பகுதியில் புகுந்து 3 பேரைத் தாக்கிய சிறுத்தையால் பரபரப்பு நிலவியது. ராஜஸ்தான் மாநிலம், வித்யாதர் நகர் பகுதியில் உள்ள குடியிருப்பு காலனிக்குள் சனிக்கிழமை புகுந்த சிறுத்தை திடீ... மேலும் பார்க்க