Afghanistan: ``பெண்களுக்கு மருத்துவக் கல்வி கூடாதா?” - தாலிபான்களுக்கு எதிராக ரஷ...
தெலங்கானாவில் 55 ஆண்டுகளில் இரண்டாவது பெரிய நிலநடுக்கம்!
தெலங்கானாவில் புதன்கிழமை காலை ஏற்பட்ட நிலநடுக்கமானது கடந்த 55 ஆண்டுகளில் அப்பகுதியில் 5 ரிக்டர் அளவில் ஏற்பட்ட இரண்டாவது பெரிய நிலநடுக்கமாகும்.
தேசிய நிலஅதிர்வு மையத்தின்படி, தெலங்கானாவின் முலுகு மாவட்டத்தில் உள்ள மேடாரம் மையப்பகுதியில் காலை 7.27 மணியளவில் 5.3 ரிக்டர் அளவுகோலில் நிலநடுக்கம் உணரப்பட்டது. முன்னதாக கடந்த 1969 ஏப்ரலில் பத்ராசலத்தை மையமாகக் கொண்ட பகுதியில் 5.7 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.
விஞ்ஞானிகளின் கூற்றுப்படி,
இரண்டு நிலநடுக்கங்களும் கோதாவரி பிளவு பள்ளத்தாக்குடன் இணைக்கப்பட்டுள்ளன. இன்று காலை ஏற்பட்ட நிலநடுக்கமானது தெலங்கானா, ஆந்திரம், சத்தீஸ்கர் மற்றும் மகாராஷ்டிரத்திலும் உணரப்பட்டது. ஹைதராபாத் மற்றும் அதைச் சுற்றியுள்ள மாவட்டங்களிலும் நிலநடுக்கம் உணரப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
நிலநடுக்கத்தின் மையம் ஆப்கானிஸ்தானில் 36.49 டிகிரி வடக்கு அட்சரேகையிலும், கிழக்கே 71.27 டிகிரி தீர்க்க ரேகையிலும், 165 கி.மீ ஆழத்திலிருந்ததாக அதிகாரிகள் தெரிவித்திருந்தனர். நிலநடுக்கத்தால் சேதமோ, பொருள் சேதமோ ஏற்பட்டதாக தகவல் இல்லை.
1969 பத்ராசலம் நிலநடுக்கத்தைப் போலவே, இந்த நிலநடுக்கமும் கோதாவரி பள்ளத்தாக்கு மண்டலத்திற்குக் காரணம். குறைந்த தீவிரம் கொண்ட நில அதிர்வு மண்டலம் என வகைப்படுத்தப்பட்டுள்ள நில அதிர்வு மண்டலம் II-க்குள் தெலங்கானா வருவதால், பீதியடையத் தேவையில்லை என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.