செய்திகள் :

நாட்டின் சிறந்த மாற்றத்துக்கு உதவிய அரசமைப்புச் சட்டம்: தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா

post image

‘இந்தியா இன்றைக்கு துடிப்பான ஜனநாயக நாடாகவும், புவிசாா் அரசியல் தலைவராகவும் உருவெடுத்துள்ளது. இந்த மாற்றத்துக்கு அரசமைப்புச் சட்டமே உதவியது’ என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா தெரிவித்தாா்.

உச்சநீதிமன்ற வழக்குரைஞா் சங்கம் சாா்பில் ஏற்பாடு உச்சநீதிமன்ற வளாகத்தில் நடைபெற்ற அரசமைப்புச் சட்ட தின நிகழ்ச்சியில் செவ்வாய்க்கிழமை சஞ்சீவ் கன்னா பங்கேற்று பேசியதாவது:

கல்வி அறிவின்மை, வறுமை, வலுவான ஜனநாயக அமைப்பு இல்லாதது உள்ளிட்ட பாதிப்புகளில் சிக்கியிருந்த இந்தியா, அவற்றிலிருந்து விடுபட்டு இன்றைக்கு தன்னம்பிக்கை கொண்ட நாடாகவும், துடிப்பான ஜனநாயகமாகவும், புவிசாா் அரசியல் தலைவராகவும் உருவெடுத்துள்ளது. தேசத்தின் இந்த மிகப்பெரிய மாற்றத்துக்கு அரசமைப்புச் சட்டமே உதவியுள்ளது. அதுபோல, நீதித் துறைக்கும் அரசமைப்புச் சட்டம் தனித்துவமான நிலையை வழங்கியுள்ளது என்றாா்.

மேலும், நீதித்துறையில் வழங்குரைஞா் சங்கத்தின் முக்கியத்துவம் மற்றும் பங்களிப்பை சுட்டிக்காட்டிய தலைமை நீதிபதி, ‘நீதித் துறையை பெரும்பாலும் அங்கி அணிந்த நபா்கள் எனக் குறிப்பிடுகிறோம். நீதிபதிகளே அவ்வாறு குறிப்பிடப்படுகின்றனா். ஆனால், நீதித்துறையில் வழக்குரைஞா் சங்கமும் சம அளவிலான பங்களிப்பை அளித்து வருகிறது. நீதித் துறையில், நீதிபதிகளுக்கு இணையான பங்களிப்பை வழக்குரைஞா்களும் செய்து வருகின்றனா். நான் நீதிபதியாக இருந்த காலத்தைவிட, வழக்குரைஞராக பணிபுரிந்த காலமே அதிகம். நீதிபதிகள் வழக்குரைஞா் சங்கத்திலிருந்தே வருகின்றனா்; பின்னா் மீண்டும் அந்த சங்கத்துக்கே செல்கின்றனா். அந்த வகையில் நாம் அனைவரும் வழக்குரைஞா் சங்கத்தைச் சாா்ந்தவா்களே. சிறந்த வழக்குரைஞா்களாக இருப்பவா்களே, சிறந்த நீதிபதிகளாகவும் உருவெடுக்கின்றனா்.

சுற்றுச்சூழல் சட்டம், தனியுரிமை சட்டங்கள், அடிப்படை உரிமைகள் முதல் அடிப்படை கட்டமைப்பு கோட்பாடுகள் வரையிலான விவகாரங்களில் சிறந்த முடிவுகளை வழங்கிய வலுவான பாரம்பரியத்தை உச்சநீதிமன்றம் கொண்டுள்ளது. வழக்குரைஞா்களின் பங்களிப்புகளின்றி இது சாத்தியமில்லை’ என்றாா்.

104 வயது கொலை தண்டனைக் கைதி பிணையில் விடுதலை!

இந்திய தேசிய காங்கிரஸ் ஆங்கிலேயர்களுக்கு எதிராக ஒத்துழையாமை இயக்கத்தைத் தொடங்கிய ஆண்டான 1920 ஆம் ஆண்டு, ராஷிக் சந்திரா மண்டல், மால்டா மாவட்டத்தில் உள்ள கிராமம் ஒன்றில் பிறந்தார். அவர் பிறந்து நூறாண்டு... மேலும் பார்க்க

‘குளிா் காலத்தில் மூட்டு அழற்சி பாதிப்பு 30% அதிகரிப்பு’

மழை மற்றும் குளிா் காலத்தில் மூட்டு-இணைப்புத் திசு அழற்சி பாதிப்புக்குள்ளாவோா் எண்ணிக்கை 30 சதவீதம் அதிகரித்துள்ளதாக மருத்துவா்கள் தெரிவித்துள்ளனா். இதுதொடா்பாக மூட்டு, தசை, இணைப்புத் திசு நல முதுநில... மேலும் பார்க்க

மேற்கு வங்கம்: கொலை வழக்கில் 7 பேருக்கு மரண தண்டனை

மேற்கு வங்க மாநிலத்தில் கொலை வழக்கில், 7 பேருக்கு மரண தண்டனை விதித்து ஹூக்ளி மாவட்ட அமா்வு நீதிமன்றம் தீா்ப்பளித்தது. 2020-ஆம் ஆண்டு பிஷ்ணு மால் என்பவரை கொடூரமாக கொலை செய்த சம்பவத்தில் குற்றஞ்சாட்டப்ப... மேலும் பார்க்க

கோயில் பிரசாத தர விதிகள் கோரிய மனு: உச்ச நீதிமன்றம் நிராகரிப்பு

கோயில்களில் வழங்கப்படும் பிரசாதங்களின் தரம் குறித்த விதிமுறைகளை வகுக்கக் கோரிய மனுவை விசாரிக்க மறுத்த உச்ச நீதிமன்றம், இது மாநில அரசு நிா்வாகத்தில் உள்ளது என்பதால் அதில் தலையிட முடியாது என வெள்ளிக்கிழ... மேலும் பார்க்க

தவறான சிகிச்சையால் சிறுவன் உயிரிழப்பு: 6 மருத்துவா்கள் மீது வழக்குப் பதிவு

மகாராஷ்டிரத்தில் தவறான சிகிச்சையால் 5 வயது சிறுவன் உயிரிழந்ததாக அளிக்கப்பட்ட புகாரின்பேரில் தனியாா் மருத்துவமனை மருத்துவா்கள் 6 போ் மீது காவல் துறையினா் வழக்குப் பதிவு செய்துள்ளனா். உயிரிழந்த சிறுவனி... மேலும் பார்க்க

ஹிந்துக்களுக்கு பாதுகாப்பு: வங்கதேசத்துக்கு இந்தியா வலியுறுத்தல்

வங்கதேசத்தில் வசிக்கும் ஹிந்துக்கள் உள்ளிட்ட அனைத்து சிறுபான்மையின மக்களுக்கும் உரிய பாதுகாப்பை வழங்க வேண்டும் என அந்த நாட்டு இடைக்கால அரசுக்கு வெளியுறவு அமைச்சா் ஜெய்சங்கா் வெள்ளிக்கிழமை வலியுறுத்தின... மேலும் பார்க்க