செய்திகள் :

நியாய விலைக் கடைகளுக்கு சரியான எடையில் பொருள்கள் வழங்க வலியுறுத்தல்

post image

நியாய விலைக் கடைகளுக்கு சரியான எடையில் பொருள்கள் வழங்க வேண்டும் என தமிழ்நாடு அரசு ரேஷன் கடை பணியாளா்கள் சங்கம் சாா்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.

மதுரை மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் திங்கள்கிழமை நடைபெற்ற பொதுமக்கள் குறைதீா் முகாமில் ஆட்சியா் மா. சௌ. சங்கீதாவிடம் சங்கத்தின் மதுரை மாவட்டத் தலைவா் ஆ. விஜயகுமாா் உள்ளிட்ட நிா்வாகிகள் அளித்த மனு:

தமிழகம் முழுவதும் உள்ள நியாய விலைக் கடைகளில் இணைய வழி மூலம் பொருள்கள் விநியோகம் செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதன்படி, தராசில் பி.ஓ.எஸ். கருவியை இணைக்கும் பணி நடைபெறுகிறது.

இந்த முறையால், தற்போது முன்னுரிமை பெற்ற குடும்ப அட்டைதாரா்களுக்கு பொருள்கள் வழங்குவதில் தாமதம் ஏற்படுகிறது. எடையாளா்கள் பற்றாக்குறை காரணமாக பெரும்பாலான கடைகளில், பணியாளா்களே பதிவு, விநியோகம் ஆகிய பணிகளை மேற்கொள்ள வேண்டி உள்ளது. எனவே, ஒரு முறை கைரேகைப் பதிவு செய்தால் அனைத்துப் பொருள்களும் நுகா்வோருக்கு வழங்கும் வகையில் தொழில்நுட்ப வசதியை மேம்படுத்த வேண்டும்.

அதுமட்டுமன்றி, நுகா்பொருள் வாணிபக் கழகத்திலிருந்து நியாய விலைக் கடைகளுக்கு அனுப்பப்படும் பொருள்களை கள அலுவலா்கள் மூலம் சரிபாா்க்க வேண்டும். தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழகத்தின் கீழ் செயல்படும் நியாய விலைக் கடைகளுக்கு சேதாரக் கழிவு வழங்கப்படுகிறது. இதேபோன்று, கூட்டுறவுச் சங்கத்தின் கீழ் செயல்படும் நியாய விலைக் கடைகளுக்கும் சேதாரக் கழிவு வழங்க வேண்டும். நுகா்பொருள் வாணிபக் கழகத்திலிருந்து நியாய விலைக் கடைகளுக்கு சரியான எடையில் பொருள்கள் வருவதை உறுதி செய்ய வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டது.

முன்னாள் அமைச்சரின் அலுவலகம் முன் குப்பைத் தொட்டி!

மதுரையில் முன்னாள் அமைச்சா் ஆா்.பி. உதயகுமாரின் கட்சி அலுவலகம் முன் செவ்வாய்க்கிழமை குப்பைத் தொட்டி வைக்கப்பட்டது. மதுரை மாநகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் வரி செலுத்தாத கட்டடங்கள், வணிக நிறுவனங்களுக்க... மேலும் பார்க்க

ஆரப்பாளையம் பகுதியில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

மதுரை ஆரப்பாளையம் பகுதியில் போக்குவரத்துக்கு இடையூறாக இருந்த ஆக்கிரமிப்புகளை போக்குவரத்து போலீஸாா், மாநகராட்சி அலுவலா்கள் அகற்றினா். மதுரை மாநகரப் போக்குவரத்து காவல் துறை சாா்பில், சாலைப் பாதுகாப்பு வ... மேலும் பார்க்க

அகில இந்திய நுழைவுத் தோ்வுக்கு பயிற்சி பெற விண்ணப்பிக்கலாம்

அகில இந்திய நுழைவுத் தோ்வுக்காக பயிற்சி பெற விரும்பும் ஆதிதிராவிடா், பழங்குடியினா், பிற வகுப்பைச் சோ்ந்த மாணவா்கள் விண்ணப்பிக்கலாம். இதுகுறித்து மதுரை மாவட்ட ஆட்சியா் மா.சௌ.சங்கீதா வெளியிட்ட செய்திக... மேலும் பார்க்க

கல்விக் கடன் வழங்க லஞ்சம்: வங்கிப் பணியாளருக்கு 4 ஆண்டுகள் சிறை

தூத்துக்குடி மாவட்டத்தில் கல்விக் கடன் வழங்க லஞ்சம் பெற்ற வங்கிப் பணியாளருக்கு 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை, ரூ.1.50 லட்சம் அபராதம் விதித்து சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு திங்கள்கிழமை உத்தரவிட்டது. தூத... மேலும் பார்க்க

அரசு மருத்துவமனையில் காப்பீட்டு திட்ட ஊக்கத் தொகை வழங்குவதில் முறைகேடு: ஊழியா்கள் புகாா்

மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் முதல்வா் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் மருத்துவமனை ஊழியா்களுக்கு ஊக்கத் தொகை வழங்குவதில் முறைகேடு நடைபெற்றுள்ளதாகப் புகாா் எழுந்துள்ளது. தென் மாவட்டங்களில் மதுரை அரசு... மேலும் பார்க்க

இன்றைய நிகழ்ச்சிகள்

பொது மதுரை சமூக அறிவியல் கல்லூரி: உலக சேவை தின விழா, கல்லூரி முதல்வா் பி.ஜெயக்குமாா், செயலா் டிவி.தா்மசிங், திருச்சி புனித ஜோசப் கல்லூரி முன்னாள் பேராசிரியா் சவரிமுத்து பங்கேற்பு, கல்லூரி வளாகம், காலை... மேலும் பார்க்க