செய்திகள் :

நீ நான் காதல் : "அவருக்கும் இந்த முடிவுக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது!" - வதந்தி குறித்து தனுஷிக்

post image
விஜய் டிவியில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் தொடர் `நீ நான் காதல்'.

இந்தத் தொடரில் அஞ்சலி கதாபாத்திரத்தில் நடித்துக் கொண்டிருந்தவர் விஜே தனுஷிக். அவர் திடீரென அந்தத் தொடரில் இருந்து விலகுவதை அவருடைய ரசிகர்களுக்கு அறிவித்திருந்தார். சமீபத்தில் இவருக்கும் மணி என்பவருக்கும் திருமணம் உறுதி செய்யப்பட்டிருந்தது.

இந்நிலையில் அவருடைய விலகலுக்குக் காரணம் இதுதான் என பல்வேறு கருத்துகள் பகிரப்பட்ட நிலையில் உண்மைக்காரணம் குறித்து அவரிடமே கேட்டோம்.

விஜே தனுஷிக்

" டிசம்பர் 27கிட்ட டெங்கு காய்ச்சல் காரணமா ஶ்ரீலங்காவில் மருத்துவமனையில் அட்மிட் ஆகியிருந்தேன். கிட்டத்தட்ட 20 நாட்களுக்கு மேல மருத்துவமனையிலேயே இருக்க வேண்டிய சூழல். சீரியல் புரொடக்‌ஷன் டீம், சேனல் எல்லாரும் எனக்காக வெயிட் பண்ணினாங்க. சீரியல் டிராக்கையும் அஞ்சலி மருத்துவமனையில் இருக்கிற மாதிரி கொண்டு போனாங்க. ஆனா, அதுக்கப்புறமும் சில பர்சனல் காரணங்களால் என்னால வர முடியல.

உடம்பும் முழுசா குணமாகல. அவங்க வெயிட் பண்ண ரெடி ஆனா நான் அவங்களை வெயிட் பண்ண வைக்கிறது சரியா இல்லை. அதனால நானே தொடரில் இருந்து விலகிக்கிறேன்னு சொன்னேன். என்னோட கோரிக்கையை சேனலும் சரி, புரொடக்‌ஷனும் சரி அக்செப்ட் பண்ணிக்கிட்டாங்க. எனக்கு கொஞ்சம் டைம் தேவைப்பட்டது.

விஜே தனுஷிக்

நான் சீரியலில் இருந்து விலகப் போறேன்னு வீடியோ போட்டதுல இருந்து என்னுடைய மேரேஜ் பற்றியும், என் வருங்கால கணவர் பற்றியும் நிறைய நெகட்டிவ் கமென்ட்ஸ் வந்துட்டு இருக்கு. என் கல்யாணத்துக்கும் அவருக்கும் இந்த முடிவுக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. இது முழுக்க முழுக்க என்னுடைய தனிப்பட்ட முடிவு. இப்ப நான் ஶ்ரீலங்காவில் தான் இருக்கேன். என் பர்சனல் கமிட்மெண்ட்ஸ், ஹெல்த் ரெண்டும் சீக்கிரமே சரியாகி நான் மறுபடி சென்னை வந்துடுவேன். வந்ததும் கண்டிப்பா புது புராஜக்ட்ல மறுபடி வருவேன்!" என்றார்.

`அன்று தோத்துப்போன பிசினஸ்மேன்; இப்ப முதல் விருது..!’ - நெகிழும் 'பாண்டியன் ஸ்டோர்ஸ்' ரவிச்சந்திரன்

சீரியல்களில் நடிக்க வந்து பல ஆண்டுகளுக்குப் பிறகு முதல் விருதை வாங்கியிருக்கிரார்நடிகர் ரவிச்சந்திரன். அவரிடம் வாழ்த்துச் சொல்லிப்பேசினோம்.''சொந்த ஊர் கும்பகோணம். அப்பா, தாத்தான்னு எந்தத் தலைமுறையிலயு... மேலும் பார்க்க

Serial Update: 'ரீல் ஜோடி' டு 'ரியல் ஜோடியான' மெளனராகம் பிரபலங்கள்; கர்ப்பமானதை அறிவித்த ஸ்ரித்திகா!

விஜய் டிவியில் ஒளிபரப்பான `மெளனராகம் 2'வில் வருண் கதாபாத்திரத்தில் நடித்திருந்தவர்சல்மானுள்ஃபாரிஸ் (Salmanul Faris). ஜீ கேரளம் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான மிழிஇரண்டிலும் (Mizhirandilum) தொடரில் சஞ்சய்... மேலும் பார்க்க

`பாக்கியலட்சுமி' இனியாவின் டான்ஸ்... உருகிய ரீல் அம்மா.. கடுப்பில் ரியல் அம்மா

'பாக்கியலட்சுமி' சீரியலில்கோபி-பாக்யா தம்பதியின் மகள் இனியாவாக நடித்து வரும் நேகாவின் டான்ஸ் போட்டி கடந்த சில தினங்களாக சமூக வலைதளங்களில் பலத்த ட்ரோலுக்கு ஆளாகியிருப்பதில் ரொம்பவே நொந்து போயிருக்கிறார... மேலும் பார்க்க

Siragadikka aasai : டிராஃபிக் போலீஸ், சீதா இடையே உருவாகும் நட்பு - வம்பு செய்யும் முத்து

சிறகடிக்க ஆசை சீரியலில் நேற்றைய எபிசோடில் ரவி-ஸ்ருதியின் திருமண நாள் கொண்டாட்டம் மகிழ்வுடம் நடந்து முடிந்தது. வீட்டில் நடக்கும் குடும்ப நிகழ்வுகளில் பாட்டு கச்சேரி வைப்பது எதற்காக என்பது நேற்றைய எபிசோ... மேலும் பார்க்க

`ஹேப்பியா இருக்கா புது பாய் ப்ரண்டோடு; தற்குறி நான் அவளின் நினைவோடு'- என்ன சொல்கிறார் தாடி பாலாஜி?

நடிகர் தாடி பாலாஜி வைத்திருக்கும் வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் அவரது நண்பர்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் ஒருவித பரபரப்பைக் கிளப்பிவிட்டிருக்கிறது.திரைப்பட நடிகரும், விஜய் டிவி காமெடி நிகழ்ச்சிகள் மூலம் ரொம்ப... மேலும் பார்க்க

முதல் நாள் ராத்திரி விருது; விடிஞ்சா மகள் பிறக்கிறா... - அஸ்வின் கார்த்திக் செம ஹேப்பி

'சரவணன் மீனாட்சி' 'வானத்தைப் போல' 'அரண்மனைக் கிளி', 'குலதெய்வம்' உள்ளிட்ட பல சீரியல்களில் நடித்தவர் அஸ்வின் கார்த்திக். ஆரம்பத்தில் தொகுப்பாளராக டிவியில் நுழைந்து பிறகு சீரியல் பக்கம் வந்தவர்.சீரியல்க... மேலும் பார்க்க