செய்திகள் :

நெல்லை: ஸ்கூட்டி மீது பாய்ந்த மாடு; கல்லூரி மாணவி படுகாயம்... சாலையில் தொடரும் சம்பவங்கள்..!

post image

நெல்லை மாநகராட்சி பகுதிகளில் சர்வசாதாரணமாக மாடுகள் சுற்றித் திரிகின்றன. நகரின் மையப்பகுதிகளில் கூட மாடுகள், ஆடுகள் போன்றவை நடமாடுகின்றன. குறிப்பாக நெல்லை-தூத்துக்குடி மற்றும் நெல்லை-கன்னியாகுமரி நான்குவழிச் சாலைகளில் கால்நடைகள் படுத்துக் கிடப்பதால் அடிக்கடி மாடு முட்டி விபத்து ஏற்படுகிறது.

மாடு முட்டி விபத்து

சில மாதங்களுக்கு முன்பு நெல்லை வண்ணார்பேட்டை பகுதியில் சாலையில் சண்டையிட்டுக் கொண்டிருந்த இரு மாடுகள், அந்த வழியாக சென்ற இரு சக்கர வாகனத்தை முட்டித் தள்ளியதில் நீதிமன்ற ஊழியரான வேலாயுதராஜ் என்பவர் கீழே விழுந்தார். அப்போது அந்த வழியாகச் சென்ற அரசுப் பேருந்து அவர் மீது ஏறி இறங்கியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அதே போல, மேலப்பாளையம் பகுதியில் நடந்த சம்பவங்களில் இருவர் உயிரிழந்தனர்.

மாநகர சாலைகளில் சுற்றித் திரியும் மாடுகள் அடிக்கடி கலைந்து ஓடுவதால் அந்த வழியாகச் செல்லும் பாதசாரிகளும் கீழே விழுந்து காயமடைகின்றனர். குறிப்பாக, பள்ளி மற்றும் கல்லூரி செல்லும் மாணவ-மாணவியரும் மாடுகளால் விபத்துகளில் சிக்குகின்றனர். அதனால் பொதுமக்கள் சாலையில் நடமாடவே அச்சப்படும் சூழல் நிலவுகிறது.

நிலைதடுமாறி கீழே விழும் மாணவி சுவாதிகா

இந்த நிலையில், நெல்லை திருமால் நகர் பகுதியில் இருந்து இரு சக்கர வாகனத்தில் கல்லூரிக்குச் சென்ற சுவாதிகா என்ற மூன்றாம் ஆண்டு படிக்கும் மாணவி மாடு முட்டியதில் படுகாயம் அடைந்துள்ளார். அவர் வாகனத்தின் மீது மாடு ஓடிச் சென்று முட்டியதில் நிலைதடுமாறி கீழே விழுந்தார். அவரது தலை மற்றும் உடலில் பலத்த காயம் ஏற்பட்டது. அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

நெல்லை மாநகராட்சி நிர்வாகத்திடம், மாடுகளை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு பலமுறை கோரிக்கை வைத்தும் எந்த நடவடிக்கையும் இல்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். சாலையில் சுற்றித் திரியும் மாடுகளை அவ்வப்போது சிறை பிடித்து அதன் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிப்பதுடன், கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளனர்.

சாலையில் திரியும் மாடுகள்

இது குறித்து மாநகராட்சி நிர்வாகத்திடம் கேட்டதற்கு, “சாலைகளில் சுற்றித் திரியும் மாடுகளைப் பிடித்து அபராதம் விதிப்பது வாடிக்கையாக நடந்து வருகிறது. ஆனாலும் கூட சிலர் தொடர்ந்து மாடுகளை சாலையிலேயே விட்டுவிடுகிறார்கள். அத்தகைய மாடுகளைப் பிடித்து கோசாலைகளுக்கு அனுப்ப ஏற்பாடு செய்துள்ளோம். அத்துடன், மாடுகளின் உரிமையாளர்கள் மீது வழக்கு தொடரவும் நடவடிக்கை எடுப்போம்” என்கிறார்கள்.

மாணவி மீது மாடு முட்டி விபத்து ஏற்பட்ட காட்சி, அப்பகுதியில் உள்ள ஒரு கடையின் சிசிடிவி. கேமராவில் பதிவாகியுள்ளது. அது தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. அதனைப் பார்க்கும் பலரும் நெல்லை மாநகராட்சியின் மெத்தனப் போக்கைக் கண்டித்து வருகிறார்கள்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/2b963ppb

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...https://tinyurl.com/2b963ppb

பரமக்குடி: இருசக்கர வாகனத்தில் ராங் ரூட்டில் வந்த இளைஞர்கள்; கார் மோதி பலியான சோகம்

ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் மருத்துவராகப் பணிபுரிபவர் வினோதினி பிரியா. இவர் கோவையில் உள்ள தனது குடும்பத்தினரைப் பார்த்துவிட்டு, சனிக்கிழமை இரவு மதுரை - ராமேஸ்வரம் நான்குவழிச் சா... மேலும் பார்க்க

இந்தியாவில் தொடரும் ரயில் விபத்துகள் - உண்மையான குற்றவாளி யார் தெரியுமா?

இந்தியாவில் அன்றாட நிகழ்வுகளில் ஒன்றாக ரயில் விபத்துகள் மாறிவிட்டன. சமீபத்தில் சென்னை அருகே கவரப்பேட்டையில் நிகழ்ந்த ரயில் விபத்துக்குப் பிறகு, அஸ்ஸாமிலும், மும்பையிலும் ரயில்கள் தடம்புரண்டிருக்கின்றன... மேலும் பார்க்க