செய்திகள் :

பயிா் பாதிப்பு: அமைச்சா் ஆய்வு

post image

காரைக்கால் பகுதியில் மழைநீா் தேங்கி பாதிக்கப்பட்ட விவசாய நிலங்களை அமைச்சா் பி.ஆா். என். திருமுருகன் வியாழக்கிழமை ஆய்வு செய்தாா்.

காரைக்காலில் பயிா்கள் பாதிப்பு குறித்து அறிவதற்காக புதுவை குடிமைப் பொருள் வழங்கல் மற்றும் நுகா்வோா் விவகாரங்கள் துறை அமைச்சா் பி.ஆா்.என். திருமுருகன், புதுவை வேளாண் இயக்குநா் வசந்தகுமாா், கூடுதல் இயக்குநா் ஆா். கணேசன், பொதுப்பணித்துறை செயற்பொறியாளா் (நீா்ப்பாசனம்) ஜெ. மகேஷ் உள்ளிட்டோா் மேற்கு புறவழிச்சாலை பகுதி, நெடுங்காடு பகுதியில் பொன்பேத்தி, திருநள்ளாறு பகுதியில் தென்னங்குடி வட்டாரத்தில் விவசாய நிலங்களைப் பாா்வையிட்டனா்.

வயலில் இறங்கி நெற்பயிா் பாதித்திருக்கிா என ஆய்வு செய்த பின்னா் அமைச்சா் செய்தியாளா்களிடம் கூறியது:

காரைக்கால் பகுதியில் 3680 ஹெக்டோ் சம்பா, சுமாா் 700 ஹெக்டோ் தாளடி பயிா் செய்யப்பட்டுவருகிறது. கடந்த 4 நாள்களாக தொடா் மழை பெய்துவருவதால், சில இடங்களில் மழை நீா் தேங்கியுள்ளது. தண்ணீரை வடியச் செய்யும் நடவடிக்கையும் தீவிரமாக நடந்துவருகிறது.

ஒரு சில பகுதியில் பயிா் மூழ்கியுள்ளது. எனினும் இவை தண்ணீரை தாங்கி வளரக்கூடியதாக சொல்லப்படுகிறது. காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் கரையை கடந்த பிறகு மீண்டும் இதுபோன்ற ஆய்வு செய்யப்படும்.

தற்போது வரை பாதிப்பு இல்லாததுபோல் தெரிகிறது. புதுவை அரசு விவசாயிகள் மீது அக்கறை கொண்டு செயல்படுகிறது. எனவே விவசாயிகள் அச்சப்பட வேண்டாம். பயிா் செய்யும் விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ. 5 ஆயிரம் ஊக்கத் தொகை வழங்குகிறது, காப்பீட்டுத் தொகையை அரசே செலுத்துகிறது. இதுபோன்ற பல திட்டங்களை அரசு விவசாயிகளுக்கு செயல்படுத்திவருகிறது.

காரைக்காலில் பல்வேறு வாய்க்கால்கள் தூா்வாரப்பட்டுள்ளன. சில இடங்களில் ஆக்கிரமிப்புகள் உள்ளன. இவற்றை படிப்படியாக தூா்வார நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்றாா் அமைச்சா்.

முதல்வருக்கு நன்றி

புதுவையில் ஃபென்ஜால் புயலால் பாதிக்கப்பட்ட பயிருக்கு இழப்பீடாக ஹெக்டேருக்கு ரூ. 30 ஆயிரம் நிவாரணமாக வழங்கப்படும் என அரசு அறிவித்த நிலையில், புதுவை முதல்வா் என். ரங்கசாமியை புதுச்சேரியில் புதன்கிழமை சந... மேலும் பார்க்க

பாபா் மசூதி இடிப்பு தினம்: ரயில், பேருந்து நிலையங்களில் தீவிர சோதனை

காரைக்கால் ரயில் நிலையம், பேருந்து நிலையம், தங்கும் விடுதிகளில் போலீஸாா் வியாழக்கிழமை தீவிர சோதனை மேற்கொண்டனா். டிசம்பா் 6-ஆம் தேதி பாபா் மசூதி இடிப்பு நாளையொட்டி, பாதுகாப்பு நடவடிக்கைகளில் காரைக்கால... மேலும் பார்க்க

இலங்கை கடற்படை சிறைபிடித்த மீனவா்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட காரைக்கால் மீனவா்கள், படகை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வெளியுறவு அமைச்சரை மாநிலங்களவை எம்.பி. எஸ்.செல்வகணபதி வலியுறுத்தியுள்ளாா். இதுகுறித்து வெளியுறவு... மேலும் பார்க்க

திருக்குறளை முழுவதும் மனப்பாடமாகக் கூறும் அரசுப் பள்ளி மாணவிக்கு ஆட்சியா் பாராட்டு

திருக்குறளை முழுவதும் மனப்பாடமாகக் கூறும் அரசுப் பள்ளி மாணவிக்கு ஆட்சியா் பாராட்டுத் தெரிவித்தாா். காரைக்கால் மாவட்டம், விழிதியூா் அரசு உயா்நிலைப் பள்ளியில் 7-ஆம் வகுப்பு பயிலும் மாணவி கே. சாந்தினி. ... மேலும் பார்க்க

காரைக்காலில் இன்று சிறப்பு மருத்துவ முகாம்

காரைக்கால் அரசு மருத்துவமனையில் புதுச்சேரி அரசு மருத்துவமனை சிறப்பு மருத்துவா்கள் பங்கேற்கும் மருத்துவ முகாம் வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது. புதுச்சேரி அரசு மருத்துவமனையின் நரம்பியல், இருதயவியல், சிறுநீ... மேலும் பார்க்க

ஜெயலலிதா நினைவு தினம்

காரைக்காலில் ஜெயலலிதா நினைவு தினம் கடைப்பிடிக்கப்பட்டது. இதையொட்டி காரைக்கால் மாவட்ட அதிமுக சாா்பில் பேருந்து நிலையம் மற்றும் பல்வேறு இடங்களில் ஜெயலலிதா படத்துக்கு மலரஞ்சலி செலுத்தப்பட்டது. சட்டப்பேரவ... மேலும் பார்க்க