Good Bad Ugly: `இன்னும் 7 நாள்கள்தான்...' - தயாரிப்பாளர் கொடுத்த ̀குட் பேட் அக்...
பாகிஸ்தானில் கலவரம்: கடந்த 3 நாள்களில் 82 பேர் பலி!
இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் இரு சமூகப் பிரிவினருக்கு இடையே மூண்ட துப்பாக்கிச் சண்டையில் 82 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.150-க்கும் மேற்பட்டோர் காயமுற்றுள்ளனர்.
வட மேற்கு பாகிஸ்தானின் பல்வேறு பகுதிகளில் கடந்த 3 நாள்களாக அரங்கேறி வரும் வன்முறை சம்பவங்களில் இதுவரை 82 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் இன்று(நவ. 24) தெரிவித்துள்ளனர்.
சன்னி பிரிவு முஸ்லிம் மக்கள் பெரும்பான்மையாகக் கொண்ட பாகிஸ்தானில், ஆப்கானிஸ்தான் எல்லையையொட்டி அமைந்துள்ள கைபர் ஃபக்துன்க்வா மாகாணத்தின் குர்ராம் மாவட்டத்தில் ஷிஇட் பிரிவு முஸ்லிம் மக்கள்தொகையே அதிகம். இந்த நிலையில், இரு பிரிவினருக்கும் இடையே பல ஆண்டுகளாக மோதல் போக்கு நிலவி வருவதால், அடிக்கடி கலவரம் ஏற்படுவதும் அதிகரித்துள்ளது.
இந்த நிலையில் குர்ராம் மாவட்டத்தில் கடந்த வியாழக்கிழமை ஷிஇட் பிரிவு மக்கள் சென்ற வாகனத்தை குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதல்களில் 43 பேர் கொல்லப்பட்டனர். இதன் தொடர்ச்சியாக, மேற்கண்ட இரு பிரிவினருக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை மூண்டுள்ளது.
குர்ராம் மாவட்டத்தில் நிகழ்ந்த வன்முறை சம்பவங்களில் 156 பேருக்கு காயம் ஏற்பட்டுள்ளதாகவும் அவர்கள் சிகிச்சை பெற்று வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். வன்முறை சம்பவங்களில் உயிரிழந்தோரில் சன்னி சமூகப் பிரிவினர் 16 பேர் என்றும், ஷியா பிரிவினர் 66 பேர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், இருதரப்பினருடனும் பேச்சுவார்த்தை நடத்தி வரும் அதிகாரிகள் அமைதி திரும்ப முயற்சி மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிக்க: பாகிஸ்தானில் மொபைல், இணைய சேவைகள் முடக்கம்!