செய்திகள் :

பாகிஸ்தான் கடுமையான இழப்புகளை சந்தித்துள்ளது- விங் கமாண்டர் வியோமிகா சிங்

post image

பாகிஸ்தான் கடுமையான இழப்புகளை சந்தித்துள்ளது என்று விங் கமாண்டர் வியோமிகா சிங் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து தில்லியில் சனிக்கிழமை செய்தியாளர்கள் சந்திப்பின்போது அளித்த விளக்கத்தில், இந்தியா எந்தவொரு வழிபாட்டுத் தலங்களையும் குறிவைத்து தாக்குதல் நடத்தவில்லை. இந்தியாவுக்கு எதிரான நடவடிக்கைகளை எடுத்து வந்த முகாம்களை மட்டுமே தாக்கினோம்.

இந்திய தாக்குதல்களால் பாகிஸ்தானின் முக்கிய விமானப்படை தளங்களில் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது. இவ்வாறு அவர் குறிப்பிட்டார். பஹல்காம் பள்ளத்தாக்கில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி நடத்திய தாக்குதலில் சுற்றுலா பயணிகள் 26 பேர் பலியாகினர். இதற்கு கடந்த 7-ஆம் தேதி இந்தியா பதில் தாக்குதல் நடத்தியது.

இந்த ராணுவத் தாக்குதலில் நூற்றுக்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் பலியானதாக மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்திருந்தார். இதைத்தொடர்ந்து இந்தியாவின் எல்லையோர மாநிலங்களை குறிவைத்து பாகிஸ்தான் கடந்த 3 நாள்களாக ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதலில் ஈடுபட்டது.

ஆனால், இந்திய வான் பாதுகாப்பு அமைப்பால் அந்த முயற்சி திறம்பட முறியடிக்கப்பட்டது. இருப்பினும் பாகிஸ்தான் ராணுவத்தின் தொடர் அத்துமீறலால் எல்லையோர மாநிலங்களில் பதற்றம் நிலவி வந்தது. இந்தச் சூழலில் போரை நிறுத்த இந்தியா- பாகிஸ்தான் சம்மதம் தெரிவித்துள்ளதாக அமெரிக்க அதிக்க அதிபர் டிரம்ப் சனிக்கிழமை அறிவித்தார்.

அதனை இந்திய தரப்பும் பாகிஸ்தான் தரப்பும் உறுதி செய்துள்ளது.

ராணுவ நடவடிக்கையை நிறுத்த இந்தியா-பாகிஸ்தான் ஒப்புதல்: ஜெய்சங்கர்

இந்தியாவும் பாகிஸ்தானும் போரை நிறுத்த சம்மதம் தெரிவித்திருப்பது குறித்து வெளியுறவுச் செயலர் மிஸ்ரி புது தில்லியில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் விளக்கமளித்தார். அதேபோல் பாகிஸ்தான் துணைப் பிரதமர் இஷாக் தாரும், உடனடியாக போர் நிறுத்தத்திற்கு இந்தியாவும்-பாகிஸ்தானும் ஒப்புக்கொண்டுள்ளனர் என்று தெரிவித்தார்.

இதைத்தொடர்ந்து கடந்த 3 நாள்களாக எல்லையில் நிலவி வந்த பதற்றம் தற்போது முடிவுக்கு வந்துள்ளது.

சிந்து நதிநீா் ஒப்பந்தம் நிறுத்திவைப்பு தொடரும்: மத்திய அரசு வட்டாரங்கள்

பாகிஸ்தானுடனான சண்டை நிறுத்தத்துக்கு ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளபோதிலும், சிந்து நதிநீா் ஒப்பந்தம் நிறுத்தம் உள்ளிட்ட அந்த நாட்டுக்கு எதிரான கடுமையான நடவடிக்கைகள் தொடரும் என்று மத்திய அரசு வட்டாரங்கள் சனிக... மேலும் பார்க்க

கேரளத்தில் மே 27-இல் தென்மேற்கு பருவமழை தொடங்கும்!

நிகழாண்டில் தென்மேற்கு பருவமழை மே 27-ஆம் தேதி கேரளத்தில் தொடங்க வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் தென்மேற்கு பருவமழை ஆண்டுதோறும் கேரளத்தில் ஜூன் 1-இல் தொடங்கும். நி... மேலும் பார்க்க

பாகிஸ்தான் தாக்குதலில் மேலும் 7 போ் உயிரிழப்பு: 4 நாள்களில் 20 கிராமவாசிகள் மரணம்

பாகிஸ்தானின் கடுமையான குண்டுவீச்சு மற்றும் துப்பாக்கிச்சூட்டில், ஜம்மு-காஷ்மீரில் மேலும் 7 போ் சனிக்கிழமை உயிரிழந்தனா். பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடியாக பாகிஸ்தான் பயங்கரவாத முகாம்களைக் குறிவைத்து ... மேலும் பார்க்க

பாகிஸ்தானிலுள்ள நன்கானா சாஹிப் குருத்வாரா மீது தாக்குதல்: மத்திய அரசு மறுப்பு

பாகிஸ்தானில் உள்ள நன்கானா சாஹிப் குருத்வாரா மீது இந்தியா தாக்குதல் மேற்கொண்டதாக வெளியான தகவலை மத்திய அரசு மறுத்துள்ளது. இதுபோன்ற தகவல்கள் இந்தியாவில் வகுப்புவாத வெறுப்புணா்வை உருவாக்கப் பரப்பப்படுகிறத... மேலும் பார்க்க

ஜம்மு - காஷ்மீரில் பயங்கரவாதி துப்பாக்கிச் சூடு: இந்திய வீரர் காயம்!

ஜம்மு - காஷ்மீர் எல்லையில் ஊடுருவ முயன்ற பயங்கரவாதி நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இந்திய வீரர் காயமடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்தியா - பாகிஸ்தான் இடையே கடந்த ஒரு வாரமாக நடைபெற்று வரும் மோதலை நிறு... மேலும் பார்க்க

அஜித் தோவலுடன் சீன அமைச்சர் பேச்சு!

இந்திய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலுடன் சீன வெளியுறவுத் துறை அமைச்சர் வாங் யி ஆலோசனை நடத்தியுள்ளார்.மேலும், பஹல்காம் தாக்குதலை கண்டிப்பதாகவும் பயங்கரவாதத்தை எதிர்ப்பதாகவும் அஜித் தோவலிடம் வாங் யி தெர... மேலும் பார்க்க