செய்திகள் :

பிரியங்கா காந்தியின் முதல் தேர்தல்: ராபர்ட் வதேரா என்ன சொல்கிறார்?

post image

பிரியங்கா காந்தி முதல்முறையாகத் தேர்தலில் போட்டியிடுவது மகிழ்ச்சி அளிப்பதாக அவரது கணவர் ராபர்ட் வதேரா தெரிவித்துள்ளார்.

கேரள மாநிலம் வயநாடு மக்களவைத் தொகுதி இடைத்தோ்தலில் காங்கிரஸ் கூட்டணி சாா்பில் போட்டியிடும் பிரியங்கா காந்தி(52) போட்டியிடுகிறார்.

இந்நிலையில் இதுகுறித்து அவரது கணவரும் தொழிலதிபருமான ராபர்ட் வதேரா கூறுகையில், 'பிரியங்கா இப்போது அவருக்காக சிந்திப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. அவர் கடினமாக உழைக்கக்கூடியவர். எனக்கு 35 ஆண்டுகளாக அவரைத் தெரியும். அவர் தனது குடும்பத்திற்காகவும் நாட்டு மக்களுக்காகவும் கடினமாக உழைப்பதைப் பார்த்திருக்கிறேன்.

பிரியங்கா அவருக்காக எதுவும் யோசித்தது இல்லை. தற்போது வயநாடு தொகுதியில் காங்கிரஸ் சார்பில் அவர் போட்டியிடுவது மகிழ்ச்சி அளிக்கிறது. ராஜீவ் காந்தி இருந்திருந்தால் அவர் மகிழ்ச்சி அடைந்திருப்பார்' என்று தெரிவித்தார்.

இதையும் படிக்க | கருப்பை வாய்ப் புற்றுநோய்: சென்னையில் மறுக்கப்படும் பரிசோதனை?

பிரியங்காவின் முதல் தேர்தல்

மக்களவைத் தொகுதியில் உத்தர பிரதேசத்தின் ரே பரேலி, கேரளத்தில் வயநாடு ஆகிய இரு தொகுதிகளிலும் போட்டியிட்ட ராகுல் காந்தி வெற்றி பெற்றாா். ரே பரேலி தொகுதியைத் தக்கவைத்த அவா், வயநாடு தொகுதி எம்.பி. பதவியை ராஜிநாமா செய்தாா். அதைத் தொடா்ந்து, அத் தொகுதிக்கு இடைத்தோ்தல் நடைபெறுகிறது.

அதன்படி, வயநாடு மக்களவைத் தொகுதிக்கு நவம்பா் 13-ஆம் தேதி இடைத்தோ்தல் நடைபெற உள்ளது. இதில் பிரியங்கா காந்தி முதல் முறையாக களம் காண்கிறாா். நேற்று(அக். 23) அவர் வேட்புமனு தாக்கல் செய்தார்.

வேட்புமனு தாக்கல் செய்த நிலையில், பிரியங்கா தொகுதியில் தங்கியிருந்து பிரசாரம் மேற்கொள்வாா் எனத் தெரிகிறது.

தீபாவளிக்கு 7,000 சிறப்பு ரயில்கள்!

தீபாவளி மற்றும் சத் பூஜையையொட்டி நாடு முழுவதும் 7,000 சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார். வேலைக்காக நகரங்களில் இருக்கும் லட்சக்கணக்கான மக்கள் சொ... மேலும் பார்க்க

நோயல் டாடா, டாடா சன்ஸ் தலைவராக முடியாது! ரத்தன் டாடா உருவாக்கிய விதிமுறை

ரத்தன் டாடா மறைவுக்குப் பிறகு, அவரது சகோதரர் நோயல் டாடா, டாடா அறக்கட்டளையின் தலைவராக நியமிக்கப்பட்டார். ஆனால், அவர் டாடா சன்ஸ் தலைவராக முடியாது என்று தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன.அதாவது, கடந்த 2022... மேலும் பார்க்க

அமராவதிக்கு ரயில் சேவை: ரூ. 2,245 கோடி ஒதுக்கீடு!

ஆந்திரத்தின் புதிய தலைநகரான அமராவதிக்கு ரயில் சேவைக்காக மத்திய அரசு ரூ. 2,245 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது. ஆந்திரத்திலிருந்து தெலங்கானா மாநிலம் கடந்த 2014-ல் பிரிக்கப்பட்டது. இரு மாநிலங்களுக்கும் பொதுவ... மேலும் பார்க்க

மகாராஷ்டிர தேர்தலில் அஜித் பவார் அணிக்கு கடிகார சின்னம்: உச்ச நீதிமன்றம்

புது தில்லி: மகாராஷ்டிர பேரவைத் தேர்தலில், அஜித் பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சியே கடிகார சின்னத்தைப் பயன்படுத்தலாம் என்று உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியிருக்கிறது.உச்ச நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு, ... மேலும் பார்க்க

85 விமானங்களுக்கு இன்று வெடிகுண்டு மிரட்டல்!

இந்தியா முழுவதும் 85 விமானங்களுக்கு இன்று(அக். 24) வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளதாகத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த வாரம் முதல் பல்வேறு விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்துகொண்டிருக்கிறது. இந்... மேலும் பார்க்க

இன்று ஒரே நாளில் 70 விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்

விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுப்பது நாள்தோறும் தொடர்கதையாகிவரும் நிலையில், வியாழக்கிழமை ஒரே நாளில் 70க்கும் மேற்பட்ட விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. மேலும் பார்க்க