செய்திகள் :

Surya: `சூப்பர் ஸ்டார்' என அழைத்த தொகுப்பாளர்; சூர்யா அளித்த பதில்; கொண்டாடும் ரசிகர்கள்!

post image
தொகுப்பாளர் ஒருவர் சூப்பர் ஸ்டார் என அழைக்கப்பட்டதற்கு சூர்யா அளித்துள்ள பதில் இணையத்தில் வைரலாகி வருகிறது.

சூர்யா நடிப்பில் `சிறுத்தை' சிவா இயக்கத்தில் உருவாகி இருக்கும் திரைப்படம் `கங்குவா'. மிகப் பிரமாண்டமான பொருள்செலவில் வரலாற்றுப் புனைவாக உருவாகியுள்ள 'கங்குவா' திரைப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி உள்பட 10 மொழிகளில் வெளியாக இருக்கிறது. இந்தப் படத்தில் நடிகர் சூர்யாவுடன் இணைந்து திஷா பதானி, பாபி தியோல் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர்.

Kanguva

வரலாற்றுப் பின்னணியுடன் நிகழ்காலச் சம்பவங்களை இணைத்து வித்தியாசமான படைப்பை இயக்குநர் சிவா உருவாக்கியிருக்கிறார். இத்திரைப்படம் நவம்பர் 14 ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் படக்குழுவினர் புரொமோஷன் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

அந்தவகையில் புரொமோஷன் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டிருந்த சூர்யாவை சூப்பர் ஸ்டார்’ என நிகழ்ச்சி தொகுப்பாளர் அழைத்திருக்கிறார். அதற்கு உடனடியாக சூர்யா, “சூப்பர் ஸ்டார் எப்போதுமே ரஜினி சார் மட்டுமே. அவர் ஒருவரே சூப்பர் ஸ்டார்.

surya

அவருடைய பெயரை எடுத்து நான் பேட்ஜ் போன்று அணிந்துக் கொள்ள முடியாது” என்று பதிலளித்திருக்கிறார். இதே போன்று வேறொரு பேட்டியில் சூப்பர் ஸ்டார் என்று அழைத்தப்போதும் இதே பதிலை சூர்யா அளித்திருக்கிறார். இந்த இரண்டையும் வைத்து சூர்யாவை இணையத்தில் கொண்டாடி வருகிறார்கள் ரசிகர்கள்.

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...

https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX

Lucky Baskhar: "4 மொழி, 40 நாள் டப்பிங், ராம்கியுடனான அனுபவம்" - சுவாரஸ்யம் பகிரும் துல்கர் சல்மான்

வெங்கி அட்லூரி இயக்கத்தில் துல்கர் சல்மான், மீனாட்சி சௌத்ரி, ராம்கி நடிப்பில், ஜீவி பிரகாஷ்குமார் இசையில் உருவாகி உள்ள திரைப்படம் 'லக்கி பாஸ்கர்'.இப்படம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வரும் அக்டோபர் 31... மேலும் பார்க்க

Vettaiyan: "ஹீரோ என்றால் சரியாகத்தான் செய்வார் என்ற பிம்பம் உடைந்தது" - பிரின்ஸ் கஜேந்திரபாபு

"நீட் அட்டூழியத்திற்கு எதிராக ரஜினிகாந்த், அமிதாப் பச்சன் தெருவில் இறங்கி போராடாமல் இருந்திருக்கலாம். வீதியில் இறங்கிப் போராடிய திரை நட்சத்திரம் ரோகிணி வேட்டையன் மூலம் அவர்களுடன் இணைந்து நீட்-க்கு எதி... மேலும் பார்க்க

Kanguva: `ஒவ்வொரு காட்சியையும் 100 முறைக்கு மேல் பார்த்தேன்!' - மதன் கார்க்கியின் கங்குவா விமர்சனம்!

அடுத்த மாதம் பிரமாண்டமான முறையில் வெளியாகவிருக்கிறது `கங்குவா'.சூர்யாவுடன் திஷா பதானி, பாபி தியோல் ஆகியோர் நடித்திருக்கிறார்கள். இதுதான் திஷா பதானி மற்றும் பாபி தியோலின் தமிழ் டெபுட்! அதிகப்படியான பொர... மேலும் பார்க்க