செய்திகள் :

Kerala GST Raid: 104 கிலோ தங்கம் பறிமுதல்; திருச்சூர் அதிரடி ரெய்டில் 640 அதிகாரிகள்.. பின்னணி என்ன?

post image

கேரளாவில் நகைத் தொழிலில் மிகப்பெரிய அளவில் விற்பனை நடப்பது திருச்சூர் ஆகும். கேரளா மட்டும் அல்லாமல் பிற மாநிலங்களுக்கும் இங்கிருந்து தங்க நகைகளை செய்து அனுப்பி வைக்கின்றனர். இதனால் கேரளாவில் தங்க நகைகள் தயாரிக்கும் தலைநகராக கருதப்படுகிறது திருச்சூர்.

ஆனால், கடந்த ஆறு மாதமாக திருச்சூரில் நகை விற்பனை குறைந்ததாக வியாபாரிகள் கூறி ஜி.எஸ்.டி செலுத்தாமல் இருந்து வந்துள்ளனர்.

ட்ரெய்னிங் என்ற போர்வையில் அதிகாரிகள் திருச்சூருக்கு சென்ற பஸ்கள்

திடீரென நகைகள் விற்பனை ஆகாமல் இருப்பதன் காரணம் என்னவென்று ஜி.எஸ்.டி உயர் அதிகாரிகள் இருவர் திருச்சூரில் ரகசியமாக கண்காணித்தனர். அப்போதுதான் நகை தொழில் ஈடுபடுவோர் தங்கத்துக்கு ஜி.எஸ்.டி செலுத்தாமல் டிமிக்கி கொடுத்துவிட்டு கள்ள மார்க்கெட்டில் நகைகளை விற்பனை செய்தது தெரியவந்தது. இதையடுத்து திருச்சூரில் பெரிய அளவில் ரெய்டு நடத்த ஜி.எஸ்.டி அமைப்பு முடிவு செய்தது.

இதற்காக 500-க்கும் மேற்பட்ட ஜி.எஸ்.டி ஊழியர்கள் தேவைப்பட்டனர். மாநிலம் முழுவதும் உள்ள ஊழியர்களை ரெய்டு என அழைத்தால் நகை தயாரிப்பாளர்களுக்கு தகவல் கசிந்துவிடும் என்பதால் திருச்சூரில் ட்ரைனிங் கேம்ப் உள்ளதாக கீழ்மட்ட அதிகாரிகளை அழைத்தனர். இதையடுத்து சுமார் 640 ஜி.எஸ்.டி அதிகாரிகள் திருச்சூருக்கு சென்றுள்ளனர். அங்கு சென்றபிறகுதான் அதிரடி ரெய்டு குறித்து அவர்களுக்கு தகவல் சொல்லப்பட்டுள்ளது. சுமார் 74 நகை தயாரிக்கும் நிறுவனங்களில் அதிகாரிகள் ரெய்டு நடத்தினர். அதில் கணக்கில் வராத 104 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. இது கேரளாவில் நடந்த மிகப்பெரிய ரெய்டு என்கிறார்கள்.

ஜி.எஸ்.டி

தங்க கோபுரம் என்ற பெயரில் இந்த ரெய்டை கீழ்மட்ட அதிகாரிகளுக்கே தெரியாமல் கச்சிதமாக செய்து முடித்துள்ளனர் உயர்மட்ட அதிகாரிகள் இரண்டுபேர். 640 ஜி.எஸ்.டி அதிகாரிகளும் நகை தயாரிப்பு நிறுவனங்களுக்கு சாதாரண உடையில் நகை வாங்குவதுபோன்று சென்றுள்ளனர். அங்கு பில் இல்லாமல், ஜி.எஸ்.டி கணக்கு காட்டாமல் நகைகள் விற்பனை செய்யபட்டதை கையும் களவுமாக பிடித்தார்.

"பிடிபட்ட 104 கிலோ தங்க நகைகளுக்கு 5 சதவிகிதம் ஜி.எஸ்.டி செலுத்தினால், அவை மீண்டும் உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்படும்" எனத் தெரிவித்துள்ளனர். இது மிகப்பெரிய தொகையாக இருக்கும் எனவும் கூறப்படுகிறது. மேலும், பறிமுதல் செய்யப்பட்டதில் கடத்தல் தங்கம் உள்ளதா என விசாரணை செய்து வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்https://bit.ly/3OITqxs

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs

LOAN APP-ல கடன் வாங்கலாமா? Debt Trap-ல மாட்டிக்காம இருக்க என்ன பண்ணனும்? CreditCard | Interest Rate

கடன் பயன்பாடுகள் நிதிகளுக்கு விரைவான அணுகலை வழங்குகின்றன, இது கடன் வாங்கத் தூண்டுகிறது. இருப்பினும், தொடர்வதற்கு முன் உங்கள் நிதி நிலைமையை மதிப்பிடுவது முக்கியம். அதிக வட்டி விகிதங்கள் மற்றும் மறைக்கப... மேலும் பார்க்க

கடன் கொடுத்து கோடிக் கோடியாக சுருட்டல்... சீன கம்பெனிகளின் சித்து விளையாட்டு... உஷார் மக்களே!

ஒரு காலத்தில் சேமிப்புக்குப் பெயர் பெற்று விளங்கிய நம் நாட்டின் நிலைமை, இன்று தலைகீழாக மாறிவிட்டது. கடன் என்றாலே பயந்து ஒதுங்கியவர்கள், இன்று போட்டி போட்டு கடன்களை வாங்கிக் குவிக்கிறார்கள். ஒருபக்கம்,... மேலும் பார்க்க

விழுப்புரம்: `ரேட்டிங் செய்தால் பணம்' - சைபர் க்ரைம் கும்பலிடம் ரூ.6.24 லட்சத்தை ஏமாந்த இளம்பெண்

விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த பெண்ணிடம் இணைய வழியாக ரூ.6.24 லட்சத்தை மோசடி செய்த நபரை, இணைய வழி குற்றப்பிரிவு போலீஸார் தேடி வருகின்றனர்.பணம் தேவை நாள்தோறும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. எளிமையாக வ... மேலும் பார்க்க

Scam Alert: நடிகையிடம் பணம் கேட்டு மிரட்டிய ஆன்லைன் மோசடி கும்பல்... அனுபவம் பகிர்ந்த மாலா பார்வதி!

மலையாள திரையுலகில் முன்னணி நடிகை மாலா பார்வதி. பீஷ்ம பர்வம், கோதா, டேக் ஆஃப், மாலிக், நீலதாமரா போன்ற படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து புகழ் பெற்றவர். இவர் சமீபத்தில் தான் டிஜிட்டல் கைது செ... மேலும் பார்க்க

`ரூ.1 கோடி முதலீடு; ரூ.28 கோடி லாபம்' - மோசடிசெய்த வங்கி மேலாளர் & டீம் - சிக்கியது எப்படி?

'ஷேர் மார்க்கெட், ஸ்டாக் மார்க்கெட், ஷேர்ஸ்...' என பங்குச்சந்தை சம்பந்தமான எந்தவொரு வார்த்தையையும் கூகுள், யூடியூப் என எதில் தேடி இருந்தாலும் போதும்...அடுத்த சில நாட்களில் நம் வாட்ஸ் அப்பில் ஷேர் மார்... மேலும் பார்க்க

Financial freedom: சென்னை, புதுச்சேரியில்... முதலீடுகளை கற்றுத் தரும் நிகழ்ச்சி.. அனுமதி இலவசம்!

நிதி சூப்பர் மார்கெட்ஒருவரை வாழ்வின் அடுத்தக் கட்டம் மற்றும் உச்சத்துக்கு கொண்டு செல்வது முதலீடுகள் ஆகும். இந்த முதலீடுகள் பணவீக்க விகிதத்தை விட அதிக வருமானம் கொடுப்பவையாக இருக்க வேண்டும். மேலும் குறை... மேலும் பார்க்க