செய்திகள் :

விழுப்புரம்: `ரேட்டிங் செய்தால் பணம்' - சைபர் க்ரைம் கும்பலிடம் ரூ.6.24 லட்சத்தை ஏமாந்த இளம்பெண்

post image

நன்றி: விகடன்இணையதளம்.

விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த பெண்ணிடம் இணைய வழியாக ரூ.6.24 லட்சத்தை மோசடி செய்த நபரை, இணைய வழி குற்றப்பிரிவு போலீஸார் தேடி வருகின்றனர்.

பணம் தேவை நாள்தோறும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. எளிமையாக வீட்டிலிருந்தே பலரும் வேலை தேடி வருகின்றனர். இதனைச் சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டு மர்ம நபர்கள் சிலர் பண மோசடியில் ஈடுபடுகிறார்கள். நன்கு படித்து வேலையில் இருப்பவர்கள்கூட இது போன்ற மோசடியில் பணத்தை இழக்கிறார்கள். இணையம் வழியாக மக்களை ஏமாற்றி பணம் பறிப்பது இன்றும் தொடர்கதையாக இருந்து வருகிறது.

No Money

இது போன்ற சம்பவம் விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தில் அரங்கேறி உள்ளது. விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்திற்கு அடுத்த மரக்காணத்தில் வசித்து வருபவர் சசி. இவரைக் கடந்த ஆகஸ்ட் 22-ம் தேதி கைப்பேசியில் அடையாளம் தெரியாத நபர் whatsapp மூலம் தொடர்பு கொண்டு பகுதி நேர வேலையாக சில புகைப்படங்களுக்கு லைக் கொடுத்தால் குறிப்பிட்ட தொகை தரப்படும் எனக் கூறியுள்ளார். இதனை நம்பிய சசி, அந்த நபர் அனுப்பிய புகைப்படத்திற்கு லைக் கொடுத்து ரூபாய் 320 பெற்றாராம். இதைத் தொடர்ந்து செப்டம்பர் 24-ம் தேதி அவரை மீண்டும் தொடர்பு கொண்ட மர்ம நபர், மீண்டும் பகுதி நேர வேலை எனக் கூறி, இணைப்பு லிங்க் ஒன்றினை அனுப்பினர்.

அதனை க்ளிக் செய்த சசி, பயனர் முகவரி, உள்நுழைவுக் குறியீடு ஆகியவற்றை உருவாக்கி அந்த அடையாளம் தெரியாத நபர் கூறியவாறு சிறிய தொகையை முதலீடு செய்து, அதற்குரிய வேலையைச் செய்தாராம். இதையடுத்து ரூபாய் 1,000 முதலீடு செய்து ரூபாய் 1,300 திரும்பப் பெற்றார். இதன் பின்னர் தனது வங்கிக் கணக்கு மற்றும் தனது உறவினரின் வங்கிக் கணக்கு எண்ணுடன் இணைக்கப்பட்ட ஜி.பே வழியாக 13 தவணைகளில் ரூபாய் 6.24 லட்சத்தைச் செலுத்தினார். ஆனால் தனக்குரிய வேலை முடிந்த பிறகும் பணம் ஏதும் திரும்பி வராததால் அதிர்ச்சி அடைந்த சசி, விழுப்புரம் இணையவழி குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார் .

இது தொடர்பாக போலீஸார் வழக்கு பதிவுசெய்து, அந்தப் பெண்ணிடம் மோசடியில் ஈடுபட்ட நபரைத் தேடி வருகின்றனர்.

LOAN APP-ல கடன் வாங்கலாமா? Debt Trap-ல மாட்டிக்காம இருக்க என்ன பண்ணனும்? CreditCard | Interest Rate

கடன் பயன்பாடுகள் நிதிகளுக்கு விரைவான அணுகலை வழங்குகின்றன, இது கடன் வாங்கத் தூண்டுகிறது. இருப்பினும், தொடர்வதற்கு முன் உங்கள் நிதி நிலைமையை மதிப்பிடுவது முக்கியம். அதிக வட்டி விகிதங்கள் மற்றும் மறைக்கப... மேலும் பார்க்க

கடன் கொடுத்து கோடிக் கோடியாக சுருட்டல்... சீன கம்பெனிகளின் சித்து விளையாட்டு... உஷார் மக்களே!

ஒரு காலத்தில் சேமிப்புக்குப் பெயர் பெற்று விளங்கிய நம் நாட்டின் நிலைமை, இன்று தலைகீழாக மாறிவிட்டது. கடன் என்றாலே பயந்து ஒதுங்கியவர்கள், இன்று போட்டி போட்டு கடன்களை வாங்கிக் குவிக்கிறார்கள். ஒருபக்கம்,... மேலும் பார்க்க

Scam Alert: நடிகையிடம் பணம் கேட்டு மிரட்டிய ஆன்லைன் மோசடி கும்பல்... அனுபவம் பகிர்ந்த மாலா பார்வதி!

மலையாள திரையுலகில் முன்னணி நடிகை மாலா பார்வதி. பீஷ்ம பர்வம், கோதா, டேக் ஆஃப், மாலிக், நீலதாமரா போன்ற படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து புகழ் பெற்றவர். இவர் சமீபத்தில் தான் டிஜிட்டல் கைது செ... மேலும் பார்க்க

`ரூ.1 கோடி முதலீடு; ரூ.28 கோடி லாபம்' - மோசடிசெய்த வங்கி மேலாளர் & டீம் - சிக்கியது எப்படி?

'ஷேர் மார்க்கெட், ஸ்டாக் மார்க்கெட், ஷேர்ஸ்...' என பங்குச்சந்தை சம்பந்தமான எந்தவொரு வார்த்தையையும் கூகுள், யூடியூப் என எதில் தேடி இருந்தாலும் போதும்...அடுத்த சில நாட்களில் நம் வாட்ஸ் அப்பில் ஷேர் மார்... மேலும் பார்க்க

Financial freedom: சென்னை, புதுச்சேரியில்... முதலீடுகளை கற்றுத் தரும் நிகழ்ச்சி.. அனுமதி இலவசம்!

நிதி சூப்பர் மார்கெட்ஒருவரை வாழ்வின் அடுத்தக் கட்டம் மற்றும் உச்சத்துக்கு கொண்டு செல்வது முதலீடுகள் ஆகும். இந்த முதலீடுகள் பணவீக்க விகிதத்தை விட அதிக வருமானம் கொடுப்பவையாக இருக்க வேண்டும். மேலும் குறை... மேலும் பார்க்க