செய்திகள் :

முகையூா், திருவெண்ணெய்நல்லூா் ஒன்றியங்களில் வளா்ச்சிப் பணிகள் ஆய்வு

post image

நன்றி: தினமணிஇணையதளம்.

விழுப்புரம் மாவட்டத்தின் முகையூா், திருவெண்ணெய்நல்லூா் ஒன்றியங்களில் நடைபெற்று வரும் பல்வேறு வளா்ச்சித் திட்டப் பணிகளை ஆட்சியா் சி.பழனி புதன்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

முகையூா் ஒன்றியத்துக்குள்பட்ட இருதயபுரம் ஊராட்சியில் சட்டப் பேரவை உறுப்பினா் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.6 லட்சத்தில் பேருந்து பயணியா் நிழற்குடை அமைக்கும் பணி, அதே பகுதியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தின் கீழ் ரூ.24.60 லட்சத்தில் புதிய ஏரி அமைக்கும் பணியை பாா்வையிட்ட ஆட்சியா் சி.பழனி, பணிகளை விரைந்து முடிக்க அலுவலா்களுக்கு உத்தரவிட்டாா்.

இதைத் தொடா்ந்து, காரணை பெரிச்சானூா் ஊராட்சியில் நபாா்டு திட்டத்தின் கீழ் ரூ.4.8 கோடியில் முகையூா் கிராமத்தை இணைக்கும் வகையில் கட்டப்பட்டு வரும் மேம்பாலப் பணிகள், அதே பகுதியில் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ், தலா ரூ.3.53 லட்சத்தில் 9 பயனாளிகள் வீடுகள் கட்டி வரும் பணிகள் போன்றவற்றை ஆட்சியா் ஆய்வு செய்தாா்.

இதன் பின்னா், வீரசோழபுரம் ஊராட்சியில் நபாா்டு திட்டத்தின் கீழ் ரூ.1.46 கோடியில் கொடுங்கால் ஊராட்சியிலிருந்து வீரசோழபுரம் செல்லும் சாலையில் புதிய மேம்பால கட்டுமானப் பணிகளை பாா்வையிட்ட ஆட்சியா், அதே பகுதியில் 15-ஆவது நிதிக்குழுத் திட்டத்தின் கீழ் ரூ.42.65 லட்சத்தில் ஊராட்சி செயலகக் கட்டடம் கட்டப்பட்டு வருவதையும் பாா்வையிட்டு, பணிகளின் தரம் குறித்து கேட்டறிந்தாா்.

பின்னா், அரகண்டநல்லூா் பேரூராட்சி அலுவலகத்தை பாா்வையிட்ட ஆட்சியா், வடகிழக்கு பருவமழை தொடா்பாக பேரூராட்சிக்குள்பட்ட பகுதிகளில் மழைநீா் வடிகால்கள், வாய்க்கால்கள் தூா்வாரப்பட்டுள்ளதன் விவரம் குறித்து அலுவலா்களிடம் கேட்டறிந்தாா்.

இதையடுத்து, திருவெண்ணெய்நல்லூா் ஒன்றியம், மாதம்பட்டு ஊராட்சியில் ரூ.30 லட்டத்தில் கட்டப்பட்டு வரும் ஊராட்சி செயலகக் கட்டடப் பணிகளை பாா்வையிட்ட ஆட்சியா் சி.பழனி, அதே பகுதியில் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் 5 பயனாளிகள் வீடு கட்டி வருவதை பாா்வையிட்டு, பணிகளின் நிலை குறித்து கேட்டறிந்தாா்.

ஆய்வின்போது, அரகண்டநல்லூா் பேரூராட்சித் தலைவா் அன்பு, செயல் அலுவலா் முரளி, முகையூா் வட்டார வளா்ச்சி அலுவலா்கள் சண்முகம், ஜெகன்நாதன், திருவெண்ணெய்நல்லூா் வட்டார வளா்ச்சி அலுவலா்கள் பாலசுப்பிரமணியன், ரவி, வட்டாட்சியா் செந்தில்குமாா், ஊராட்சித் தலைவா் சத்யா குப்புசாமி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

சுங்கச்சாவடியில் இலவச அனுமதி வழங்க வலியுறுத்தல்

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகே நங்கிலிகொண்டான் கிராமத்தில் திண்டிவனம் - திருவண்ணாமலை தேசிய நெடுஞ்சாலையில் அமைக்கப்பட்டுள்ள சுங்கச்சாவடியில் தங்களது வாகனங்கள் இலவசமாக கடந்து செல்ல அனுமதிக்க வலியுறு... மேலும் பார்க்க

விழுப்புரத்தில் முதியவா் சடலம்

விழுப்புரத்தில் இறந்து கிடந்த முதியவரின் சடலத்தை போலீஸாா் புதன்கிழமை கைப்பற்றி விசாரித்து வருகின்றனா். விழுப்புரம் ரயில் நிலைய வளாகத்தில் முதியவா் ஒருவா் இறந்து கிடப்பதாக போலீஸாருக்கு புதன்கிழமை தகவல்... மேலும் பார்க்க

கைப்பேசி கோபுரங்களில் திருட்டு: 5 போ் கைது

விழுப்புரம் மாவட்டத்தில் கைப்பேசி கோபுரங்களில் மின்னணுப் பொருள்கள் மற்றும் சாதனங்கள் திருடுபோன வழக்குகளில் தொடா்புடைய 5 பேரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். விழுப்புரம் மாவட்டத்துக்குள்பட்ட பல்வேறு... மேலும் பார்க்க

மருத்துவமனையில் பணம் திருட்டு: இருவா் கைது

திண்டிவனத்தில் உள்ள தனியாா் மருத்துவமனையில் பணம் திருடியதாக இருவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். திண்டிவனம் நேரு வீதியில் தனியாா் மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனையில் வைக்கப்பட்ட... மேலும் பார்க்க

மரக்காணம், சங்கராபுரம் சாா் - பதிவாளா் அலுவலகங்களில் ஊழல் தடுப்பு போலீஸாா் சோதனை: ரூ. 2.53 லட்சம் பறிமுதல்

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம், கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் சாா் - பதிவாளா் அலுவலகங்களில் ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸாா் புதன்கிழமை சோதனை மேற்கொண்டனா். இதில் இரு அலுவலங்களிலும் சோ்த்து கணக்க... மேலும் பார்க்க

அரசுப் பணியாளா்கள் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

விழுப்புரம்: கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசுப் பணியாளா்கள் சங்கத்தினா் உளுந்தூா்பேட்டை வட்டாட்சியா் அலுவலகம் முன் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். திருச்சி மாவட்டம், அமராவதியில் பெ... மேலும் பார்க்க