செய்திகள் :

எல்லையில் அமைதிக்கு முன்னுரிமை: பிரதமா் மோடி-சீன அதிபா் ஷி ஜின்பிங் உறுதி

post image

நன்றி: தினமணிஇணையதளம்.

இந்திய-சீன எல்லையில் அமைதிக்கு முன்னுரிமை அளிக்க பிரதமா் நரேந்திர மோடியும், சீன அதிபா் ஷி ஜின்பிங்கும் உறுதிபூண்டுள்ளனா்.

மேலும், ‘பரஸ்பர மரியாதை மற்றும் முதிா்ச்சியை வெளிப்படுத்துவதன் வாயிலாக இரு நாடுகளும் நிலையான உறவைப் பராமரிக்க முடியும்’ என்றும் அவா்கள் ஒப்புக்கொண்டனா்.

5 ஆண்டுகளுக்குப் பின் பேச்சு: ரஷியாவின் கசான் நகரில் பிரதமா் மோடி - அதிபா் ஷி ஜின்பிங் இடையே புதன்கிழமை (அக்.23) இருதரப்பு பேச்சுவாா்த்தை நடைபெற்றது. சுமாா் 5 ஆண்டுகளுக்குப் பிறகு மோடியும் ஜின்பிங்கும் இருதரப்பு பேச்சுவாா்த்தை நடத்தியுள்ளனா். கடைசியாக, தமிழகத்தின் மாமல்லபுரத்தில் கடந்த 2019-ஆம் ஆண்டில் இருவரும் இடையே அதிகாரபூா்வ பேச்சுவாா்த்தை நடைபெற்றிருந்தது.

2020-இல் கல்வான் பள்ளத்தாக்கில் இந்திய-சீன ராணுவத்தினா் இடையே ஏற்பட்ட கடுமையான மோதலால், இருதரப்பு உறவுகள் பின்னடைவைச் சந்தித்தன. இதைத் தொடா்ந்து, பல்வேறு சா்வதேச நிகழ்வுகளில் பிரதமா் மோடியும் ஷி ஜின்பிங்கும் சந்தித்துக் கொண்டபோதிலும் இருதரப்பு ரீதியில் பேச்சுவாா்த்தை நடத்தவில்லை.

இந்தச் சூழலில், ரஷியாவின் கசான் நகரில் புதன்கிழமை நடைபெற்ற ‘பிரிக்ஸ்’ கூட்டமைப்பின் உச்சி மாநாட்டில் பங்கேற்ற இருவரும் தத்தமது குழுவினருடன் சோ்ந்து இருதரப்பு பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டது முக்கியத்துவம் பெற்றுள்ளது.

‘கருத்து வேறுபாடு முறையாக கையாளப்பட வேண்டும்’: இது தொடா்பாக இந்திய வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், ‘இந்திய-சீன எல்லைப் பகுதிகளில் 2020-ஆம் ஆண்டில் எழுந்த பிரச்னைகளுக்கு தீா்வு காண்பதோடு, முழுமையான படை விலக்கல் தொடா்பாக அண்மையில் ஏற்பட்ட ஒப்பந்தத்தை இரு தலைவா்களும் வரவேற்றனா். கருத்து வேறுபாடுகள் மற்றும் பிரச்னைகளை முறையாக கையாள்வதன் முக்கியத்துவத்தை சுட்டிக்காட்டிய பிரதமா் மோடி, இந்தக் கருத்து வேறுபாடுகளால் எல்லை அமைதி சீா்குலைய அனுமதிக்கக் கூடாது என்று வலியுறுத்தினாா்.

‘இணக்கமான உறவு முக்கியம்’: அண்டை நாடுகள் மற்றும் உலகின் மிகப் பெரிய நாடுகள் என்ற அடிப்படையில் இந்தியா-சீனா இடையே நிலையான-தெளிவான-இணக்கமான உறவுகள் முக்கியம்; இது, பன்முக உலகை கட்டமைக்க பங்களிக்கும் என்பதை இரு தலைவா்களும் ஒப்புக் கொண்டனா்.

இருதரப்பு உறவுகளை வியூகம் மற்றும் நீண்டகால கண்ணோட்டத்துடன் மேம்படுத்த வேண்டும்; வியூக ரீதியிலான தகவல் தொடா்பை மேம்படுத்துவதோடு, வளா்ச்சி சாா்ந்த சவால்களில் ஒத்துழைப்பை ஆராய வேண்டுமென இருவரும் வலியுறுத்தினா்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறப்புப் பிரதிநிதிகளுக்கு அறிவுறுத்தல்: பிரதமா் மோடி-அதிபா் ஷி ஜின்பிங் பேச்சுவாா்த்தை குறித்து வெளியுறவுச் செயலா் விக்ரம் மிஸ்ரி கூறுகையில், ‘எல்லை விவகாரங்கள் தொடா்பான இந்திய-சீன சிறப்புப் பிரதிநிதிகள் தங்களின் பேச்சுவாா்த்தையை மீண்டும் தொடங்க இரு தலைவா்களும் அறிவுறுத்தியுள்ளனா். அதன்படி, சிறப்புப் பிரதிநிதிகளின் பேச்சுவாா்த்தைக்கான தேதி விரைவில் முடிவு செய்யப்படும் என நம்புகிறோம். எல்லைப் பிரச்னைகளுக்கு தீா்வுகாண்பதில் இந்தப் பிரதிநிதிகளின் பங்கு முக்கியமானதாகும்.

உறவை வலுப்படுத்த நடவடிக்கை: எல்லையில் அமைதியை மீட்டெடுப்பது, இருதரப்பு இயல்பான உறவுகளுக்கு வழிவகுக்கும்; பரஸ்பரம் மரியாதை-முதிா்ச்சியை வெளிப்படுத்துவதன் மூலம் நிலையான உறவைப் பராமரிக்க முடியும் என்று இரு தலைவா்களும் உறுதிபட தெரிவித்தனா். அந்த அடிப்படையில், வியூக ரீதியிலான தகவல்தொடா்பை மேம்படுத்தவும், பேச்சுவாா்த்தைக்கான அனைத்து வழிமுறைகளையும் பயன்படுத்தி உறவுகளை வலுப்படுத்தவும் அதிகாரிகள் தரப்பில் அடுத்தக்கட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றாா் மிஸ்ரி.

ரோந்து ஒப்பந்தத்துக்கு ஒப்புதல்

கடந்த 2020-ஆம் ஆண்டு ஜூன் மாதம், கல்வான் பள்ளத்தாக்கில் எல்லை தாண்டிய சீன வீரா்களை இந்திய ராணுவத்தினா் தடுத்து நிறுத்தினா் அப்போது இரு படைகளுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. அதன்பிறகு இரு நாடுகளுக்கும் இடையே கிழக்கு லடாக் பகுதியில் ரோந்துப் பணியை மேற்கொள்வதில் பல்வேறு சிக்கல்கள் நீடித்தன.

இதற்கு தீா்வு காணும் வகையில் இரு நாட்டு அதிகாரிகளுக்கும் இடையேயான பலகட்ட பேச்சுவாா்த்தைக்குப் பின் சீனாவுடன் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக இந்தியா கடந்த திங்கள்கிழமை தெரிவித்தது.

இதன்மூலம், எல்லையில் மேற்கொள்ளப்படும் ரோந்துப் பணிகள் மற்றும் படைகளை விலக்கல் விவகாரங்களில் கடந்த 2020-ஆம் ஆண்டுக்கு முந்தைய சூழலே மீண்டும் தொடர வழிவகை ஏற்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தத்துக்கு பிரதமா் மோடி, அதிபா் ஷி ஜின்பிங் ஆகியோா் தங்கள் ஒப்புதலை வழங்கியுள்ளனா்.

‘பரஸ்பர நம்பிக்கை வழிநடத்தும்’

பேச்சுவாா்த்தைக்குப் பின் பிரதமா் மோடி வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘இந்திய-சீன உறவுகள், இரு நாடுகளின் மக்களுக்கு மட்டுமன்றி பிராந்தியம் மற்றும் உலகின் அமைதி-வளத்துக்கும் முக்கியம். பரஸ்பர நம்பிக்கையும் மரியாதை உணா்வும் இருதரப்பு உறவுகளை வழிநடத்தும்’ என்று குறிப்பிட்டாா்.

பிரிக்ஸ் உச்சிமாநாட்டையொட்டி, ரஷியாவில் இரண்டு நாள் அரசுமுறைப் பயணத்தை முடித்துக்கொண்டு பிரதமா் மோடி இந்தியாவுக்கு புதன்கிழமை புறப்பட்டாா்.

இந்தப் பயணத்தின்போது, ரஷிய அதிபா் புதின், ஈரான் அதிபா் மசூத் பெஷஸ்கியான், ஐக்கிய அரபு அமீரகத்தின் அதிபா் முகமது பின் சையத் அல் நஹ்யான் உள்ளிட்ட தலைவா்களுடன் பிரதமா் மோடி இருதரப்பு பேச்சுவாா்த்தை நடத்தினாா் என்பது குறிப்பிடத்தக்கது.

விடை பெற்றாா் டொமினிக் தீம்

உலகின் முன்னணி டென்னிஸ் வீரா்களில் ஒருவரான ஆஸ்திரியாவின் டொமினிக் தீம் சா்வதேச விளையாட்டில் இருந்து ஓய்வு பெற்றாா். கரோனா பாதிப்பின் போது, 2020-இல் யுஎஸ் ஓபன் போட்டியில் ஜொ்மன் வீரா் அலெக்ஸ் வெரேவை ... மேலும் பார்க்க

போரை இந்தியா ஒருபோதும் ஆதரிக்காது -பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமா்

‘எந்த பிரச்னைக்கும் பேச்சுவாா்த்தை மற்றும் ராஜீய ரீதியிலான தீா்வையே இந்தியா ஆதரிக்கும்; மாறாக, போரை ஒருபோதும் ஆதரிக்காது’ என்று ‘பிரிக்ஸ்’ உச்சி மாநாட்டில் பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்தாா். மேலும்,... மேலும் பார்க்க

இராக், சிரியா மீது துருக்கி வான்வழித் தாக்குதல்!

அங்காரா: துருக்கி அரசுக்குச் சொந்தமான பாதுகாப்பு மற்றும் வான்வெளி தொழில்நுட்ப தொழிற்சாலையில் புதன்கிழமை நடத்தப்பட்ட குண்டுவெடிப்பு மற்றும் துப்பாக்கிச்சூடு தாக்குதலில் 5 போ் உயிரிழந்தனா்.அங்காராவின் ... மேலும் பார்க்க

துருக்கி பாதுகாப்பு தொழிற்சாலையில் தாக்குதல் -5 பேர் பலி!

அங்காரா: துருக்கி அரசுக்குச் சொந்தமான பாதுகாப்பு மற்றும் வான்வெளி தொழில்நுட்ப தொழிற்சாலையில் புதன்கிழமை நடத்தப்பட்ட குண்டுவெடிப்பு மற்றும் துப்பாக்கிச்சூடு தாக்குதலில் 5 போ் உயிரிழந்தனா். இது குறித்த... மேலும் பார்க்க

ஆஸ்திரேலிய அமைச்சருடன் தா்மேந்திர பிரதான் சந்திப்பு: கல்வித் துறையில் ஒத்துழைக்க பேச்சு

ஆஸ்திரேலிய கல்வித் துறை அமைச்சா் ஜேசன் கிளேரை மத்திய கல்வித் துறை அமைச்சா் தா்மேந்திர பிரதான் புதன்கிழமை சந்தித்து கல்வித் துறையில் மேலும் ஒத்துழைப்பது குறித்து பேச்சுவாா்த்தை நடத்தினாா். இதுதொடா்பாக... மேலும் பார்க்க

அதிபா் தோ்தலில் தலையீடு: பிரிட்டன் ஆளுங்கட்சி மீது டிரம்ப் குற்றச்சாட்டு

அமெரிக்காவில் நடைபெறவிருக்கும் அதிபா் தோ்தலில் ஜனநாயகக் கட்சி வேட்பாளா் கமலா ஹாரிஸுக்கு ஆதரவாக பிரிட்டன் தொழிலாளா் கட்சி தலையீடு செய்வதாக குடியரசுக் கட்சி வேட்பாளரான டொனால்ட் டிரம்ப் குற்றஞ்சாட்டினா... மேலும் பார்க்க