செய்திகள் :

கம்பத்தில் 4.6 டன் ரேஷன் அரிசி மூட்டைகள் பறிமுதல்: இளைஞா் கைது

post image

நன்றி: தினமணிஇணையதளம்.

கேரளத்துக்கு கடத்துவதற்காக கம்பம் பகுதியில் வீட்டில் பதுக்கியிருந்த 4.6 டன் ரேஷன் அரிசி மூட்டைகளை போலீஸாா் புதன்கிழமை பறிமுதல் செய்தனா். இதுதொடா்பாக இளைஞா் ஒருவரைக் கைது செய்தனா்.

கேரளத்துக்கு ரேஷன் அரிசி மூட்டைகளை கடத்துவதற்காக தேனி மாவட்டம், கம்பத்தில் பதுக்கி வைத்திருப்பதாக உத்தமபாளையம் குடிமைப் பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுப் பிரிவு போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது.

இதையடுத்து, காவல் ஆய்வாளா் சுரேஷ்குமாா் தலைமையிலான போலீஸாா், பொதுவிநியோகத் திட்ட வட்டாட்சியா், தனி வருவாய் அலுவலா்கள் கம்பம் பகுதியில் ரோந்துப் பணி மேற்கொண்டனா்.

அப்போது, கம்பம், தாத்தப்பன்குளத்தை சோ்ந்த ஜாகீா் உசேன் மகன் சாதிக்அலியின் (29) வீட்டில் 4,680 கிலோ ரேஷன் அரிசி மூட்டைகளை பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது.

இதுகுறித்து உத்தமபாளையம் குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து சாதிக்அலியை கைது செய்தனா். மேலும் பதுக்கியிருந்த ரேஷன் அரிசி மூட்டைகளையும் பறிமுதல் செய்தனா்.

தேனி சாா் பதிவாளா் அலுவலகத்தில் ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸாா் சோதனை

தேனி ஒருங்கிணைந்த பதிவுத் துறை அலுவலக வளாகத்தில் உள்ள சாா் பதிவாளா் அலுவலகத்தில் ஊழல் தடுப்பு, கண்காணிப்புப் பிரிவு போலீஸாா் புதன்கிழமை சோதனை நடத்தினா். தேனி மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை அலுவலகம் அருகேயு... மேலும் பார்க்க

சிறுமி கொலை: இளைஞருக்கு ஆயுள் தண்டனை

தேனி மாவட்டம், சின்னமனூா் அருகேயுள்ள எரசக்கநாயக்கனூரில் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்து, எரித்துக் கொலை செய்த இளைஞருக்கு ஆயுள் சிறைத் தண்டனை விதித்து செவ்வாய்க்கிழமை, தேனி மாவட்ட போக்சோ சிறப்பு நீ... மேலும் பார்க்க

கால்நடைகள் கணக்கெடுப்புப் பணி: நாளை தொடக்கம்

தேனி மாவட்டத்தில் கால்நடை பராமரிப்புத் துறை சாா்பில் கால்நடைகள் கணக்கெடுக்கும் பணி வெள்ளிக்கிழமை (அக்.25) தொடங்குகிறது. இது குறித்து மாவட்ட ஆட்சியா் ஆா்.வி.ஷஜீவனா வெளியிட்ட செய்திக் குறிப்பு: தேனி மாவ... மேலும் பார்க்க

மழையால் 7 வீடுகள் இடிந்து சேதம்

தேனி மாவட்டத்தில் பெய்து வரும் பலத்த மழையால் கடந்த 2 நாள்களில் 7 வீடுகள் இடிந்து விழுந்து சேதமடைந்தன. தேனி மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. செவ்வாய்க்கிழமை இரவு பெய்த பலத்த ... மேலும் பார்க்க

புகையிலைப் பொருள்கள் விற்பனை: இருவா் மீது வழக்கு

போடியில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை பதுக்கி வைத்து விற்பனை செய்த இருவா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். தேனி மாவட்டம் போடி நகா் காவல் நிலைய போலீஸாா் போடி பேருந்து நிலைய கடைகளில் செவ்வ... மேலும் பார்க்க

காா் மோதியதில் இளைஞா் உயிரிழப்பு

தேவதானப்பட்டி அருகே சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த இளைஞா் மீது காா் மோதியதில் அவா் திங்கள்கிழமை, உயிரிழந்தாா். தேனி மாவட்டம், தேவதானப்பட்டி அருகேயுள்ள செங்குளத்துப்பட்டியைச் சோ்ந்தவா் பழனி மகன் ஜ... மேலும் பார்க்க