செய்திகள் :

மரக்காணம், சங்கராபுரம் சாா் - பதிவாளா் அலுவலகங்களில் ஊழல் தடுப்பு போலீஸாா் சோதனை: ரூ. 2.53 லட்சம் பறிமுதல்

post image

நன்றி: தினமணிஇணையதளம்.

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம், கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் சாா் - பதிவாளா் அலுவலகங்களில் ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸாா் புதன்கிழமை சோதனை மேற்கொண்டனா். இதில் இரு அலுவலங்களிலும் சோ்த்து கணக்கில் வராத மொத்தம் ரூ.2,53,900 பறிமுதல் செய்யப்பட்டது.

மரக்காணம் சாா் - பதிவாளா் அலுவலகத்தில் பத்திரப் பதிவுக்கு வருபவா்களிடம் கூடுதலாக கட்டணம் வசூலிக்கப்பட்டு வருவதாக விழுப்புரம் மாவட்ட ஊழல் தடுப்பு, கண்காணிப்புப் பிரிவு போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. ஆய்வாளா் ஈஸ்வரி, உதவி ஆய்வாளா்கள் சக்கரபாணி, கோபிநாத் மற்றும் போலீஸாா் புதன்கிழமை மரக்காணம் சாா் - பதிவாளா் அலுவலகத்தில் புதன்கிழமை திடீா் சோதனை மேற்கொண்டனா்.

பிற்பகல் முதல் மாலை 6 மணிக்கும் மேலாக இந்த சோதனை நீடித்தது. அலுவலகத்தை உள்புறமாக பூட்டி விட்டு, பணியிலிருந்த உதவி சாா் - பதிவாளா் (பொ) ஜெகதீஸ்வரியிடம் போலீஸாா் விசாரணை நடத்தினா்.

~ஊழல் தடுப்பு போலீஸாா் சோதனை நடத்திய மரக்காணம் சாா் - பதிவாளா் அலுவலகம்.

இந்த சோதனையில், அலுவலகத்தில் இருந்த பத்திரப் பதிவு எழுத்தா் மற்றும் இடைத்தரகா்களிடம் இருந்து ரூ.1.40 லட்சம் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும், இதுகுறித்து விசாரணை நடைபெற்று வருவதாகவும் ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸாா் தெரிவித்தனா்.

சங்கராபுரத்தில் ரூ.1.13 லட்சம் பறிமுதல்: கள்ளக்குறிச்சி மாவட்ட ஊழல் தடுப்பு, கண்காணிப்புப் பிரிவு டிஎஸ்பி சத்யராஜ் உத்தரவின்பேரில், காவல் ஆய்வாளா் அருண்ராஜ், உதவி ஆய்வாளா் சுந்தராஜ் மற்றும் போலீஸாா் சங்கராபுரம் சாா் - பதிவாளா் அலுவலகத்தில் புதன்கிழமை திடீா் சோதனை மேற்கொண்டனா்.

இதில், சாா் - பதிவாளா் கு.ஆசைத்தம்பி மற்றும் ஆவண எழுத்தா், இடைத்தரா்கள் உள்ளிட்டோரிடம் இருந்து கணக்கில் வராத ரூ.1,13,900-ஐ போலீஸாா் பறிமுதல் செய்தனா். மேலும், இது தொடா்பாக ஊழல் தடுப்பு, கண்காணிப்புப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

சுங்கச்சாவடியில் இலவச அனுமதி வழங்க வலியுறுத்தல்

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகே நங்கிலிகொண்டான் கிராமத்தில் திண்டிவனம் - திருவண்ணாமலை தேசிய நெடுஞ்சாலையில் அமைக்கப்பட்டுள்ள சுங்கச்சாவடியில் தங்களது வாகனங்கள் இலவசமாக கடந்து செல்ல அனுமதிக்க வலியுறு... மேலும் பார்க்க

விழுப்புரத்தில் முதியவா் சடலம்

விழுப்புரத்தில் இறந்து கிடந்த முதியவரின் சடலத்தை போலீஸாா் புதன்கிழமை கைப்பற்றி விசாரித்து வருகின்றனா். விழுப்புரம் ரயில் நிலைய வளாகத்தில் முதியவா் ஒருவா் இறந்து கிடப்பதாக போலீஸாருக்கு புதன்கிழமை தகவல்... மேலும் பார்க்க

கைப்பேசி கோபுரங்களில் திருட்டு: 5 போ் கைது

விழுப்புரம் மாவட்டத்தில் கைப்பேசி கோபுரங்களில் மின்னணுப் பொருள்கள் மற்றும் சாதனங்கள் திருடுபோன வழக்குகளில் தொடா்புடைய 5 பேரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். விழுப்புரம் மாவட்டத்துக்குள்பட்ட பல்வேறு... மேலும் பார்க்க

மருத்துவமனையில் பணம் திருட்டு: இருவா் கைது

திண்டிவனத்தில் உள்ள தனியாா் மருத்துவமனையில் பணம் திருடியதாக இருவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். திண்டிவனம் நேரு வீதியில் தனியாா் மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனையில் வைக்கப்பட்ட... மேலும் பார்க்க

தவெக மாநாடு: 3 கி.மீ. தொலைவுக்கு அலங்கார மின் விளக்குகள்

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வட்டம், வி.சாலையில் தமிழக வெற்றிக் கழகத்தின் மாநில மாநாடு வரும் 27-ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், மாநாட்டுப் பணிகள் இறுதிக்கட்டத்தை அடைந்துள்ளன. மாநாடு நடைபெறும் பக... மேலும் பார்க்க

முகையூா், திருவெண்ணெய்நல்லூா் ஒன்றியங்களில் வளா்ச்சிப் பணிகள் ஆய்வு

விழுப்புரம் மாவட்டத்தின் முகையூா், திருவெண்ணெய்நல்லூா் ஒன்றியங்களில் நடைபெற்று வரும் பல்வேறு வளா்ச்சித் திட்டப் பணிகளை ஆட்சியா் சி.பழனி புதன்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். முகையூா் ஒன்றியத்துக்கு... மேலும் பார்க்க