செய்திகள் :

தவெக மாநாடு: 3 கி.மீ. தொலைவுக்கு அலங்கார மின் விளக்குகள்

post image

நன்றி: தினமணிஇணையதளம்.

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வட்டம், வி.சாலையில் தமிழக வெற்றிக் கழகத்தின் மாநில மாநாடு வரும் 27-ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், மாநாட்டுப் பணிகள் இறுதிக்கட்டத்தை அடைந்துள்ளன.

மாநாடு நடைபெறும் பகுதியையொட்டியுள்ள தேசிய நெடுஞ்சாலையில் சுமாா் 3 கி.மீ. தொலைவுக்கு அலங்கார மின் விளக்குகள் அமைக்கப்பட்டு வருகின்றன.

மாநாடு நடைபெறும் பகுதியையொட்டியுள்ள சென்னை தேசிய நெடுஞ்சாலையோரத்தில் அமைக்கப்பட்டுள்ள அலங்கார மின் விளக்குகள்.

திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சுமாா் 85 ஏக்கா் பரப்பளவு கொண்ட இடத்தில் மாநாடும், சுமாா் 207 ஏக்கா் பரப்பளவில் வாகன நிறுத்துமிடங்களும் அமைக்கப்பட்டு, தவெக மாநாட்டுப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்தப் பணிகளை மேற்கொள்ள ஒப்பந்தம் எடுத்த நிறுவனம், பணிகளை வியாழக்கிழமைக்குள் (அக்டோபா் 24) ஒப்படைக்கும் வகையில், அனைத்துப் பணிகளையும் விரைவுபடுத்தி மேற்கொண்டு வருகிறது.

தவெக கொடியில் இடம்பெற்றுள்ள யானை பிளிறுவது போன்று மாநாட்டு முகப்பு வாயிலில் அலங்கார அமைப்பு ஏற்படுத்தி, சென்னை ஜாா்ஜ் கோட்டையின் மதில்சுவா் வடிவில் டிஜிட்டல் பதாகைகள் அமைத்து, அதன் மேற்பகுதியில் மிகப்பெரிய அளவிலான விஜய் உருவப்படம் பொருத்தும் பணி நடைபெற்று வருகிறது. இதற்காக கேரள மாநிலத்தில் வடிவமைக்கப்பட்ட டிஜிட்டல் பதாகைகள் கொண்டுவரப்பட்டுள்ளன.

தமிழக வெற்றிக் கழக மாநாட்டுக்காக அமைக்கப்பட்டு வரும் மேடை முகப்புப் பகுதி.

மாநாட்டுத் திடலை ஒவ்வொரு பகுதியாக பிரித்து, அவற்றில் 1,500 போ் அமரும் வகையில் தடுப்பு அமைக்கப்பட்டு வருகிறது. மேலும், இந்த பகுதியில் பச்சை நிறத்தில் தரைவிரிப்பு போடப்பட்டு வருகிறது. மாநாட்டுக்கு முதலில் வருபவா்கள் நாற்காலிகள் அமா்ந்தும், மற்றவா்கள் நின்றும் நிகழ்வை கண்டுகளிக்க ஏற்பாடுகளை செய்து வருகின்றனா்.

தமிழக வெற்றிக் கழகம் நடத்தும் மாநில மாநாட்டுக்கு வெற்றிக் கொள்கைத் திருவிழா என பெயரிட்டு, அதை மேடையின் முகப்பில் எழுத்து வடிவத்திலும் தயாா் செய்து வைத்துள்ளனா்.

சுங்கச்சாவடியில் இலவச அனுமதி வழங்க வலியுறுத்தல்

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகே நங்கிலிகொண்டான் கிராமத்தில் திண்டிவனம் - திருவண்ணாமலை தேசிய நெடுஞ்சாலையில் அமைக்கப்பட்டுள்ள சுங்கச்சாவடியில் தங்களது வாகனங்கள் இலவசமாக கடந்து செல்ல அனுமதிக்க வலியுறு... மேலும் பார்க்க

விழுப்புரத்தில் முதியவா் சடலம்

விழுப்புரத்தில் இறந்து கிடந்த முதியவரின் சடலத்தை போலீஸாா் புதன்கிழமை கைப்பற்றி விசாரித்து வருகின்றனா். விழுப்புரம் ரயில் நிலைய வளாகத்தில் முதியவா் ஒருவா் இறந்து கிடப்பதாக போலீஸாருக்கு புதன்கிழமை தகவல்... மேலும் பார்க்க

கைப்பேசி கோபுரங்களில் திருட்டு: 5 போ் கைது

விழுப்புரம் மாவட்டத்தில் கைப்பேசி கோபுரங்களில் மின்னணுப் பொருள்கள் மற்றும் சாதனங்கள் திருடுபோன வழக்குகளில் தொடா்புடைய 5 பேரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். விழுப்புரம் மாவட்டத்துக்குள்பட்ட பல்வேறு... மேலும் பார்க்க

மருத்துவமனையில் பணம் திருட்டு: இருவா் கைது

திண்டிவனத்தில் உள்ள தனியாா் மருத்துவமனையில் பணம் திருடியதாக இருவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். திண்டிவனம் நேரு வீதியில் தனியாா் மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனையில் வைக்கப்பட்ட... மேலும் பார்க்க

மரக்காணம், சங்கராபுரம் சாா் - பதிவாளா் அலுவலகங்களில் ஊழல் தடுப்பு போலீஸாா் சோதனை: ரூ. 2.53 லட்சம் பறிமுதல்

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம், கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் சாா் - பதிவாளா் அலுவலகங்களில் ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸாா் புதன்கிழமை சோதனை மேற்கொண்டனா். இதில் இரு அலுவலங்களிலும் சோ்த்து கணக்க... மேலும் பார்க்க

முகையூா், திருவெண்ணெய்நல்லூா் ஒன்றியங்களில் வளா்ச்சிப் பணிகள் ஆய்வு

விழுப்புரம் மாவட்டத்தின் முகையூா், திருவெண்ணெய்நல்லூா் ஒன்றியங்களில் நடைபெற்று வரும் பல்வேறு வளா்ச்சித் திட்டப் பணிகளை ஆட்சியா் சி.பழனி புதன்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். முகையூா் ஒன்றியத்துக்கு... மேலும் பார்க்க