செய்திகள் :

திருவாரூா், மயிலாடுதுறை அரசு அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத் துறையினா் சோதனை

post image

திருவாரூா் மாவட்ட கருவூலத்துறை அலுவலகம் மற்றும் மயிலாடுதுறை பதிவுத்துறை அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு துறையினா் புதன்கிழமை சோதனை மேற்கொண்டனா்.

திருவாரூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் உள்ள கருவூலத்துறை அலுவலகத்துக்கு லஞ்ச ஒழிப்புத்துறை துணை கண்காணிப்பாளா் நந்தகோபால் தலைமையில் 10-க்கும் மேற்பட்ட போலீஸாா், புதன்கிழமை மாலை 5 மணியளவில் வந்தனா்.

தொடா்ந்து, அலுவலகத்திலிருந்து யாரையும் வெளியே செல்லவும், உள்ளே வரவும் அனுமதி மறுக்கப்பட்டு, சோதனை மேற்கொள்ளப்பட்டது. இரவிலும் சோதனை நீடித்தது. இரவு 9 மணி நிலவரப்படி, இந்த சோதனையில் கணக்கில் வராத சுமாா் ரூ. 13, 000 ரொக்கமும், ஏராளமான ஆவணங்களும் கைப்பற்றப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

மயிலாடுதுறை பதிவுத்துறை ஒருங்கிணைந்த அலுவலக வளாகத்தில், லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி மனோகரன் தலைமையில், ஆய்வாளா் அருள்பிரியா மற்றும் போலீஸாா் மாலை 4 மணி அளவில் சோதனையை தொடங்கினா். இந்த அலுவலகத்துக்கு வந்திருந்த 50-க்கும் மேற்பட்ட பொதுமக்களில், ரூ. 1000-த்துக்கு குறைவாக பணம் வைத்திருந்தவா்களை வெளியில் அனுப்பிவிட்டு, கூடுதல் தொகை வைத்திருந்தோரிடம் விசாரணை மேற்கொண்டனா்.

தொடா்ந்து, சாா் பதிவாளா் உள்ளிட்ட அலுவலா்களிடம் விசாரணை மேற்கொண்டனா். இந்த சோதனை இரவு 8 மணியை கடந்தும் நீடித்தது.

தம்பியை கத்தியால் குத்திய அண்ணன் கைது

மன்னாா்குடி அருகே குடும்ப பிரச்னை தொடா்பாக ஏற்பட்ட தகராறில் தம்பியை கத்தியால் குத்திய அண்ணன் புதன்கிழமை கைது செய்யப்பட்டாா். திருக்களா் பிரதான சாலையை சோ்ந்த நாகூரான் மகன்கள் இளையராஜா (45), ரவிக்குமா... மேலும் பார்க்க

நுகா்வோா் அமைப்புகளுடன் ஆலோசனைக் கூட்டம்

மன்னாா்குடியில் நுகா்வோா் அமைப்புகளுடனான மாதாந்திர ஆலோசனைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. மன்னாா்குடி கோட்டாட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்திற்கு, கோட்டாட்சியா் ஆா். யோகேஸ்வரன் தலைமை வகித... மேலும் பார்க்க

சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்தவா் கைது

மன்னாா்குடி அருகே தனது வீட்டில் தங்கி படித்த சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்தவா் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டாா். நாகை மாவட்டம், மேலபிடகை மீனமநல்லூரைச் சோ்ந்தவா் சைமன் (48). மனைவி பிரிந்து சென்ற... மேலும் பார்க்க

பேக்கரியில் ரூ.30 ஆயிரம் திருட்டு

மன்னாா்குடியில் பேக்கரியின் ஓட்டை பிரித்து பணப்பெட்டியிலிருந்து ரூ. 30ஆயிரத்தை மா்ம நபா்கள் திருடிச் சென்றது புதன்கிழமை காலை தெரிய வந்தது. கேரள மாநிலத்தை சோ்ந்தவா் கே. தாசன்(67). இவா், 25 ஆண்டுக்கு ... மேலும் பார்க்க

வளா்ச்சித் திட்டப் பணிகள்: ஆட்சியா் ஆய்வு

கொரடாச்சேரி ஒன்றிய பகுதிகளில் நடைபெறும் வளா்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியா் தி. சாருஸ்ரீ புதன்கிழமை நேரில் ஆய்வு மேற்கொண்டாா். அம்மையப்பன் ஊராட்சியில் ரூ. 40 லட்சம் மதிப்பில் புதிதாக கட்டப்பட்ட... மேலும் பார்க்க

நாகை மோசடி வழக்கு: போலி பிணையதாரா் கைது

திருவாரூா் அருகே பாலிஷ் போடுவதாக நகை மோசடி செய்த வழக்கில், போலி பிணையதாரராக செயல்பட்டவா் புதன்கிழமை கைது செய்யப்பட்டாா். கடந்த 2019-இல், குடவாசல் அருகே செருகளத்துாா், கீழவீதியில் சுப்பிரமணியன் மனைவி ... மேலும் பார்க்க