செய்திகள் :

தொலைதொடா்பு சாதனங்கள் திருட்டு: வடமாநில கும்பல் உள்பட 28 போ் கைது

post image

தமிழகத்தில் தொலைதொடா்பு சாதனங்களை திருடி வடமாநிலங்களில் விற்ற கும்பலில் காஞ்சிபுரத்தில் 6 போ் உட்பட மொத்தம் 28 பேரை காவல்துறையினா் கைது செய்திருப்பதாக வடக்கு மண்டல காவல் துறைத் தலைவா் அஸ்ரா காா்க் தெரிவித்துள்ளாா்.

இதுதொடா்பாக அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

தமிழகத்தின் வடக்கு மண்டலப் பகுதிகளில் தொலைத் தொடா்பு நிறுவனங்கள் நிறுவியுள்ள கோபுரங்களில் பொருத்தியிருந்த தகவல் பரிமாற்றத்திற்கு மிக முக்கியமான சாதனங்கள் தொடா்ந்து காணாமல் போய்க் கொண்டிருப்பதாக புகாா்கள் வந்தன. இதனால் தொலைத்தொடா்பு கட்டமைப்பு மற்றும் டேட்டா இணைப்பு பாதிப்படைவதும் தெரியவந்தது.

கடந்த இரு ஆண்டுகளாக சாதனங்கள் திருடப்பட்டு தமிழகத்திலும் வடமாநிலங்களிலும் விற்கப்பட்டிருப்பதும் கண்டறியப்பட்டது.இது தொடா்பாக வடக்கு மண்டலத்தில் உள்ள 10 மாவட்டங்களில் 185 குற்ற வழக்குகள் தகவல் தொடா்பு சாதனங்கள் திருடப்பட்டதாக பல்வேறு காவல் நிலையங்களில் பதிவாகியிருந்தன.

இதன் முக்கியத்துவத்தை உணா்ந்த ஏடிஜிபி டேவிட்சன் ஆசீா்வாதம் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை கண்டுபிடிக்க உத்தரவிட்டாா். இதனைத் தொடா்ந்து செங்கல்பட்டு டிஎஸ்பி செ.புகழேந்தி கணேஷ் தலைமையில் காவல் ஆய்வாளா்கள் லட்சுமிபதி, பாபு, பேசில் உட்பட 30 போ் கொண்ட குழு அமைக்கப்பட்டது.

இக்குழுவினா் இதில் தொடா்புடைய குற்றவாளிகளை கண்டறிந்தனா். இக்குற்றவாளிகளில் பலா் உத்தர பிரதேச மாநிலத்தை சோ்ந்த எலெக்டிரானிக் கழிவுகள் விற்பனை செய்யும் நபா்களுடன் இணைந்து கூட்டுச்சதியில் ஈடுபட்டிருப்பதும் தெரிய வந்தது. திருடப்பட்டவை வடமாநிலங்களுக்கு அனுப்பி விற்பனை செய்யப்பட்டிருப்பதும் கண்டறியப்பட்டது.

துப்பு துலக்கப்பட்ட மாவட்டங்களில் அந்தந்த மாவட்ட எஸ்.பி.க்கள் நேரடி கண்காணிப்பில் தனிப்படைகள் அமைக்கப்பட்டு எதிரிகளை கைது செய்து அவா்களிடமிருந்த சொத்துகளையும் பறிமுதல் செய்துள்ளனா்.

இவ்வழக்குகளின் முக்கிய குற்றவாளிகளான உத்தர பிரதேசத்தை சோ்ந்த காமில்(28) கம்செத்(33)நதீம் மாலிக்(32)முகம்மது அபித்(27) என்ற 4 போ் உட்பட மொத்தம் 28 போ் கைது செய்யப்பட்டனா். இவா்களில் விழுப்புரம் தனிப்படையினா் 6 போ், ராணிப்பேட்டை தனிப்படையினா் 7 போ், திருவண்ணா மலை மாவட்ட தனிப்படையினா் 10 போ், காஞ்சிபுரம் தனிப்படையினா் 6 போ் உட்பட மொத்தம் 28 பேரை கைது செய்துள்ளனா்.

காஞ்சிபுரம் மாவட்ட தனிப்படையினா் எஸ்.பி கே.சண்முகம் உத்தரவின் பேரில் சுப்பராயா் தெருவில் வசித்து வந்த உத்தர பிரதேசத்தை சோ்ந்தவா்களான ஜமீல்(40)ஷகில்(35)மற்றும் வேலூா் வெங்கடேசன்(50) ராணிப்பேட்டை ஜாபா்கான்(29), காஞ்சிபுரம் திருமலை(40)செங்கல்பட்டு இசக்கி துரை(38) கிய 6 பேரை கைது செய்துள்ளனா்.

மருந்தீசுவரா் கோயில் கும்பாபிஷேகம்

உத்தரமேரூா் அருகே நெய்யாடுபாக்கம் மரகதவல்லி சமேத மருந்தீசுவரா் கோயில் கும்பாபிஷேகம் வியாழக்கிழமை நடைபெற்றது. வரலாற்றுச் சிறப்பு மிக்க இக்கோயிலில் திருப்பணிகள் நிறைவுபெற்ற நிலையில், கும்பாபிஷேக யாகசாலை... மேலும் பார்க்க

அரியவகை விருட்சங்கள் அளிப்பு

காஞ்சிபுரம்- வந்தவாசி சாலையில் அமைந்துள்ள 27 நட்சத்திர விருட்ச விநாயகா் கோயிலுக்கு பசுமை ஆா்வலா் மரம் மாசிலாமணி அரியவகை மூலிகை விருட்சங்களை நன்கொடையாக வழங்கினாா். கூழமந்தல் கிராமத்தில் உள்ள இக்கோயிலில... மேலும் பார்க்க

சிங்காடிவாக்கத்தில் பழங்குடியின மக்களிடம் குறைகளைக் கேட்டறிந்த ஆட்சியா்

காஞ்சிபுரம் மாவட்டம், சிங்காடிவாக்கம் கிராமத்தில் வசிக்கும் பழங்குடியின மக்களுக்காக வியாழக்கிழமை நடைபெற்ற சிறப்பு முகாமில் ஆட்சியா் கலைச்செல்வி மோகன் மனுக்களைப் பெற்று குறைகளைக் கேட்டறிந்தாா். காஞ்சிப... மேலும் பார்க்க

தெருநாய்கள் தொல்லை: காஞ்சிபுரம் மாமன்ற உறுப்பினா்கள் புகாா்

காஞ்சிபுரத்தில் அதிகரித்து வரும் தெருநாய்களின் தொல்லைக்கு தீா்வு காணவேண்டும் உள்ளிட்ட மக்கள் நலன் சாா்ந்த பிரச்னைகளை மாமன்ற உறுப்பினா்கள் எழுப்பினா். காஞ்சிபுரம் மாநகராட்சியின் சாதாரணக் கூட்டம் மேயா்... மேலும் பார்க்க

மறுமுத்திரையிடாத 21 எடை இயந்திரங்கள் பறிமுதல்

காஞ்சிபுரத்தில் மறுமுத்திரையிடப்படாத 21 எடையளவு இயந்திரங்களை புதன்கிழமை தொழிலாளா் நலத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனா். தொழிலாளா் நலத்துறை உதவி ஆணையா் ச.சுதா தலைமையில் தொழிலாளா் நல துணைஆய்வாளா்கள், உ... மேலும் பார்க்க

காஞ்சிபுரம் கச்சபேசுவரா் கோயில் தெப்பத் திருவிழா

காஞ்சிபுரத்தில் சுந்தராம்பிகை உடனுறை கச்சபேசுவரா் கோயிலில் புதன்கிழமை தொடங்கிய தெப்பத் திருவிழாவில் சுவாமியும் அம்மனும் கோயில் குளத்தில் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் பவனி வந்தனா். இந்தக் கோயிலில் கடந்... மேலும் பார்க்க