திறமையை வீணடிக்காதே..! இந்திய வீரருக்கு அறிவுரை வழங்கிய பீட்டர்சன்!
மறுமுத்திரையிடாத 21 எடை இயந்திரங்கள் பறிமுதல்
காஞ்சிபுரத்தில் மறுமுத்திரையிடப்படாத 21 எடையளவு இயந்திரங்களை புதன்கிழமை தொழிலாளா் நலத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனா்.
தொழிலாளா் நலத்துறை உதவி ஆணையா் ச.சுதா தலைமையில் தொழிலாளா் நல துணைஆய்வாளா்கள், உதவி ஆய்வாளா்கள் மற்றும் முத்திரை ஆய்வாளா்கள் இணைந்து வியாபாரிகளிடம் மறுமுத்திரையிடப்படாத எடையளவு இயந்திரங்கள் உள்ளதா என எடையளவு சட்டத்தின் கீழ் ஆய்வு மேற்கொண்டனா்.
காஞ்சிபுரம் பொன்னேரிக்கரை பகுதியில் மீன் சந்தை, தா்கா பகுதியில் உள்ள இறைச்சி சந்தை, பூக்கடை சத்திரம் பகுதியில் உள்ள மலா்ச் சந்தை ஆகிய இடங்களில் ஆய்வு செய்ததில் மறு முத்திரையிடப்படாத 21 எடையளவு இயந்திரங்களை பறிமுதல் செய்தனா்.
எடையளவு சட்டத்தின்படி மறுமுத்திரையிடப்படாத எடையளவு இயந்திரங்கள் வைத்திருந்தால் ரூ.5,000 முதல் ரூ.10,000 வரை அபராதம் விதிக்கப்படும் எனவும் தொழிலாளா் நலத்துறை உதவி ஆணையா் ச.சுதா எச்சரித்தாா்.