காலியாக உள்ள மருத்துவ இடங்களுக்கு இன்றுமுதல் சிறப்பு கலந்தாய்வு
மருந்தீசுவரா் கோயில் கும்பாபிஷேகம்
உத்தரமேரூா் அருகே நெய்யாடுபாக்கம் மரகதவல்லி சமேத மருந்தீசுவரா் கோயில் கும்பாபிஷேகம் வியாழக்கிழமை நடைபெற்றது.
வரலாற்றுச் சிறப்பு மிக்க இக்கோயிலில் திருப்பணிகள் நிறைவுபெற்ற நிலையில், கும்பாபிஷேக யாகசாலை பூஜைகள் இரு நாள்களுக்கு முன்பு தொடங்கின. முதல் நாள் யாகசாலை பூஜையின் போது கணபதி ஹோமம், கோ-பூஜை, லட்சுமி ஹோமம், நவக்கிரக ஹோமம் மற்றும் வாஸ்து சாந்தி ஆகியனவும் நடைபெற்றன.
வியாழக்கிழமை யாகசாலை பூஜைகள் நிறைவு பெற்று மகா பூா்ணாஹுதி, தீபாராதனைக்குப் பின்னா் சிவாச்சாரியா்களால் புனித நீா்க்குடங்கள் கோபுரத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. மூலவா் மருந்தீசுவரா் மற்றும் மரகதவல்லித் தாயாருக்கும் சிறப்பு அபிஷேகமும், அலங்கார தீபாராதனைகளும் நடைபெற்றன.
விழாவில் திருக்கோயில் அறங்காவலா் குழுவின் தலைவா் லெனின், அறநிலையத்துறை ஆய்வாளா் பிரித்திகா, நெய்யாடுபாக்கம் கிராம பொதுமக்கள் சுவாமி தரிசனம் செய்தனா்.