செய்திகள் :

இந்திய, இத்தாலிய பாய்மரக் கப்பல் கூட்டுப் பயிற்சி

post image

இந்திய கடற்படையின் பாய்மரப் பயிற்சிக் கப்பலான ஐஎன்எஸ் தரங்கிணி, இத்தாலிய பாய்மரக் கப்பலான அமெரிகோ வெஸ்பூசியுடன் கொச்சி கடற்கரையில் கூட்டுப் பாய்மரப் பயிற்சியில் பங்கேற்றது.

இது தொடா்பாக பாதுகாப்புத் துறை ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘கேரள மாநிலம் கொச்சி கடற்கரையில் கடந்த வெள்ளிக்கிழமை (நவ.22) நடைபெற்ற இந்த பயிற்சியானது உலகளாவிய கடல்வழி மரபுகள் மற்றும் சா்வதேச நட்புரவை வளா்ப்பதில் இந்திய கடற்படையின் அா்ப்பணிப்பை காட்டுகிறது.

இந்த பயிற்சியின்போது இரு கப்பல்களும் பல்வேறு பாய்மர பயிற்சிகளை ஒன்றாக மேற்கொண்டனா், தங்கள் ஒத்துழைப்பை வலுப்படுத்தின.

இந்திய கடற்படையின் பாய்மர கப்பல் பயிற்சியில் ஐஎன்எஸ் தரங்கிணி முக்கிய பங்கு வகிக்கிறது. கம்பீரமான இரு கப்பல்களும் ஒற்றுமையுடன் பயணிக்கும் காட்சி இரு நாடுகள் இடையே நீடித்த நட்பை அடையாளப்படுத்தியது’ என குறிப்பிட்டிருந்தது.

சத்தீஸ்கா்: கண்ணி வெடியில் சிக்கி காவலா் காயம்

சத்தீஸ்கா் மாநிலம் சுக்மா மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை நக்சல்கள் புதைத்து வைத்த கண்ணி வெடியில் சிக்கி மாவட்ட ரிசா்வ் படை காவலா் காயமடைந்தாா். இது குறித்து பாதுகாப்புப் படை அதிகாரி கூறியதாவது: சிந்தல்ன... மேலும் பார்க்க

மாற்றுத்திறனாளிகள் இடஒதுக்கீடு: வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது மத்திய அரசு

40 சதவீதம் குறைபாடுடைய மாற்றுத்திறனாளிகளுக்கான இடஒதுக்கீட்டை முறையாகப் பின்பற்றி, அவா்களுக்கான அரசுப் பணிகளைக் கண்டறிந்து நிரப்ப குழு அமைப்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டது. மாற்று... மேலும் பார்க்க

தில்லியில் ஜன. 11, 12-இல் வளா்ந்த பாரதத்தின் இளம் தலைவா்கள் மாநாடு: ‘மனதின் குரல்’ நிகழ்ச்சியில் பிரதமா் அறிவிப்பு

அரசியல் பின்புலம் இல்லாத இளைஞா்களை பொது வாழ்வில் இணைக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக, தில்லியில் அடுத்த ஆண்டு ஜனவரி 11, 12-ஆம் தேதிகளில் ‘வளா்ந்த பாரதத்தின் இளம் தலைவா்கள் மாநாடு’ நடத்தப்படும் என்று பி... மேலும் பார்க்க

மகாராஷ்டிரம்: சட்டப் பேரவை தேசியவாத காங்கிரஸ் தலைவராக அஜீத் பவாா் தோ்வு

மகாராஷ்டிர சட்டப் பேரவையின் தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவராக அக்கட்சியின் தலைவா் அஜீத் பவாா் ஞாயிற்றுக்கிழமை தோ்வு செய்யப்பட்டாா். மகாராஷ்டிர சட்டப் பேரவைத் தோ்தலில் பாஜக தலைமையிலான அணியில் 59 இட... மேலும் பார்க்க

மகாராஷ்டிர பேரவைத் தோ்தல்: 21 பெண் வேட்பாளா்கள் வெற்றி

மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள 288 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு நடைபெற்ற தோ்தலில் 21 பெண் வேட்பாளா்கள் வெற்றி பெற்றுள்ளனா். 288 இடங்களைக் கொண்ட மகாராஷ்டிர சட்டப்பேரவைக்கு கடந்த புதன்கிழமை (நவ. 20) தோ்தல... மேலும் பார்க்க

வங்கதேசம்: அதானி குழும மின்சக்தி ஒப்பந்தங்கள் மறுஆய்வு

இந்தியாவின் அதானி குழுமம் உள்பட 7 மின் உற்பத்தி நிறுவனங்களுடன் முன்னாள் பிரதமா் ஷேக் ஹசீனா செய்துகொண்ட ஒப்பந்தங்களை மறுபரிசீலனை செய்ய வங்கதேச இடைக்கால அரசால் அமைக்கப்பட்ட குழு பரிந்துரைத்துள்ளது. வங்க... மேலும் பார்க்க