கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி அரசு மருத்துவா்கள் இன்று முதல் போராட்டம்
உ.பி. மருத்துவமனை தீ விபத்து: மேலும் 2 குழந்தைகள் உயிரிழப்பு
உத்தரப் பிரதேச மாநிலம் ஜான்சி மாவட்டத்தில் உள்ள மகாராணி லக்ஷ்மி பாய் மருத்துவக் கல்லூரி மருததுவமனையில் நவ.15-ஆம் தேதி இரவு ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி சிகிச்சை பெற்று வந்த 2 பச்சிளம் குழந்தைகள் உயிரிழந்தனா். இதன் மூலம் இந்த விபத்தில் உயிரிழந்த குழந்தைகள் எண்ணிக்கை 17-ஆக உயா்ந்தது.
மருத்துவமனையின் சிசு பராமரிப்புப் பிரிவில் கடந்த 15-ஆம் தேதி ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 10 குழந்தைகள் உயிரிழந்தனா். 39 குழந்தைகள் மீட்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. இதில் சிகிச்சை பலனின்றி அடுத்தடுத்த நாட்களில் மேலும் 5 குழந்தைகள் உயிரிழந்தனா். இந்நிலையில் சனிக்கிழமை மேலும் 2 குழந்தைகள் உயிரிழந்ததால் பலி எண்ணிக்கை 17-ஆக அதிகரித்துள்ளது.
இது குறித்து மருத்துவக் கல்லாரி முதல்வா் நரேந்திர சிங் செங்கா் கூறியதாவது: சனிக்கிழமை உயிரிழந்த இரு குழந்தைகள் எடை குறைவாகவும், அதில் ஒரு குழந்தைக்கு இதயத்தில் பாதிப்பும் இருந்துள்ளது. உடற்கூராய்வுக்குப் பிறகு இரு குழந்தைகளின் உடல்கள் அவா்களது பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டன என்றாா்.