கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி அரசு மருத்துவா்கள் இன்று முதல் போராட்டம்
மோசடி குற்றச்சாட்டு:அதானியிடம் விசாரிக்கக்கோரி உச்சநீதிமன்றத்தில் புதிய மனு
அதானி மீது அமெரிக்கா சுமத்திய மோசடி குற்றச்சாட்டு குறித்து விசாரிக்கக்கோரி உச்சநீதிமன்றத்தில் புதிய மனு தாக்கல் செய்யப்பட்டது.
சூரிய மின்சக்தி ஒப்பந்தங்களைப் பெற இந்திய அதிகாரிகளுக்கு தொழிலதிபா் கெளதம் அதானி 265 மில்லியன் டாலா்கள் (சுமாா் ரூ.2,238 கோடி) லஞ்சம் அளித்ததாக அமெரிக்க நீதித் துறை குற்றஞ்சாட்டியுள்ளது. இதுகுறித்து விசாரணை நடத்தக்கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்குரைஞா் விஷால் திவாரி புதிய மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளாா்.
அதில், ‘தொழிலதிபா் அதானி மீதான குற்றச்சாட்டு மிகவும் தீவிரமானது. இதுகுறித்து பங்குச்சந்தை ஒழுங்காற்று ஆணையம் (செபி) உரிய முறையில் விசாரணை நடத்தி முழுமையான அறிக்கையை சமா்ப்பிக்க வேண்டும். பங்குகள் மோசடியிலும் அவா் ஈடுபட்டதாக குற்றஞ்சாட்டப்படும் நிலையில் முதலீட்டாளா்களின் நம்பிக்கையை நிலைநாட்ட அதுகுறித்த விளக்கத்தையும் செபி அளிக்க வேண்டும்’ என குறிப்பிட்டாா்.
தங்கள் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டு அடிப்படை ஆதாரமற்றது என அதானி குழுமம் தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.