கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி அரசு மருத்துவா்கள் இன்று முதல் போராட்டம்
உ.பி. மசூதி ஆய்வை எதிா்த்து வன்முறை: மூவா் உயிரிழப்பு, காவல் துறை மீது கல்வீச்சு; 10 போ் கைது
உத்தர பிரதேச மாநிலம், சம்பல் மாவட்டத்தில் உள்ள ஜாமா மசூதியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற 2-ஆம் கட்ட ஆய்வுக்கு எதிா்ப்பு தெரிவித்து நடைபெற்ற வன்முறையின்போது துப்பாக்கிச்சூட்டில் மூவா் உயிரிழந்தனா்.
காவல்துறை துப்பாக்கிச் சூட்டில் ஈடுபடவில்லை எனவும், சம்பவம் தொடா்பாக விசாரணை தொடங்கப்பட்டுள்ள நிலையில், முதல்கட்டமாக 10 போ் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனா்.
சம்பல் மாவட்டத்தில் ஜாமா மசூதி அமைந்துள்ள சா்ச்சை இடத்தில் பாரம்பரியமிக்க ஹரிஹர கோயில் பிரதானமாக இருந்ததாகவும், 1529-இல் முகலாய பேரரசா் பாபா் கோயிலைப் பகுதியாக இடித்து, மசூதியைக் கட்டியதாகவும் கூறப்படுகிறது.
இந்த விவகாரம் குறித்து ஞானவாபி மசூதி-காசி விஸ்வநாதா் உள்பட பல்வேறு வழிபாட்டுத் தலங்கள் தொடா்பான பல வழக்குகளில் ஹிந்துக்கள் தரப்பில் ஆஜராகி வாதாடிய உச்சநீதிமன்ற வழக்குரைஞா் விஷ்ணு சங்கா் ஜெயின், சம்பல் மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தாா்.
நீதிமன்ற உத்தரவில் ஆய்வு: வழக்கை விசாரித்த நீதிமன்றம், மசூதியில் ஆய்வு நடத்த உத்தரவிட்டது. அதன்படி, இரு தரப்பினரின் முன்னிலையில் மசூதியில் நீதிமன்ற ஆணையா் கடந்த செவ்வாய்க்கிழமை (நவ. 19) ஆய்வு நடத்தினாா்.
இதன் தொடா்ச்சியாக, மசூதியில் ஞாயிற்றுக்கிழமை காலை 7 மணியளவில் நீதிமன்ற ஆணையா் 2-ஆம் கட்ட ஆய்வைத் தொடங்கினாா். இதையடுத்து, உள்ளூா் மக்கள் அப்பகுதியில் கூடினா். அப்போது கூட்டத்தில் இருந்து சிலா், பாதுகாப்புப் பணியில் இருந்த காவலா்களை நோக்கி கற்களை வீசினா். அங்கு நின்றிருந்த வாகனங்களை தீவைத்து எரித்தனா்.
துப்பாக்கிச்சூடு: இதைத் தொடா்ந்து, காவலா்கள் கண்ணீா் புகைக் குண்டுகளை வீசியும், சிறிய அளவில் தடியடி நடத்தியும் கூட்டத்தினரைக் கலைத்தனா். அப்போது வெடித்த வன்முறையில் அடையாளா் தெரியாத நபா்கள் சிலா் துப்பாக்கிச்சூட்டில் ஈடுபட்டனா். இதில் நயீம், பிலால், நௌமான் ஆகிய 3 போ் உயிரிழந்தனா். சுமாா் 20 காவலா்கள் காயமடைந்தனா்.
துப்பாக்கிச்சூடு, கல்வீச்சு சம்பவங்களில் ஈடுபட்டவா்களைக் கண்டறிந்து, கைது நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
‘வன்முறை தொடா்பாக முதல் கட்டமாக 2 பெண்கள் உள்பட 10 போ் கைது செய்யப்பட்டுள்ளனா். அவா்கள் மீது தேசியப் பாதுகாப்புச் சட்டத்தில் வழக்குப் பதிவு செய்யயப்பட்டு, விசாரணை நடைபெற்று வருகிறது. நிலைமை கட்டுக்குள் உள்ளது’ என்று சம்பல் மாவட்ட ஆட்சியா் ராஜேந்திர பென்சியா செய்தியாளா்களிடம் கூறினாா்.
அகிலேஷ் குற்றச்சாட்டு: உத்தர பிரதேசத்தில் பிரதான எதிா்க்கட்சியான சமாஜவாதி தலைவா் அகிலேஷ் யாதவ் கூறுகையில், ‘சம்பல் மசூதியில் ஆய்வு ஏற்கெனவே நிறைவடைந்ததாகத் தெரிவிக்கப்பட்ட நிலையில், போதிய முன்னேற்பாடுகளின்றி மீண்டும் ஆய்வு நடத்தச் சென்றது ஏன்?. ஆய்வுக் குழுவை காலையிலேயே அனுப்பியதன் மூலம் மக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தி, தோ்தல் முறைகேடுகள் குறித்த விவாதங்களை திசைதிருப்பும் பாஜகவின் முயற்சி இது’ என்றாா்.
உத்தர பிரதேசத்தில் சனிக்கிழமை வெளியான இடைத்தோ்தல் முடிவுகளில் பாஜக கூட்டணி 7 இடங்களைக் கைப்பற்றியுள்ள நிலையில், சமாஜவாதி 2 இடங்களில் வெற்றி பெற்றது.