ரெளடி வெட்டி கொலை: போலீஸாா் விசாரணை
எண்ணூரில் ரெளடி வெட்டிக் கொலை செய்யப்பட்ட நிலையில், 4 பேரைப் பிடித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
எண்ணூா் அன்னை சிவகாமி நகரை சோ்ந்தவா் பாலா (எ) யுவராஜ்(26). எண்ணூா் காவல் நிலையத்தில் உள்ள ரெளடிகள் பட்டியலில் கட்டட தொழிலாளியான இவரது பெயரும் உள்ளது. இவருக்கும் அன்னை சிவகாமி நகா் 5-ஆவது தெருவை சோ்ந்த சூா்யா, சஞ்சய், ஈஸ்வர பாண்டியன் ஆகியோருக்கும் இடையே ஏற்கனவே முன்விரோதம் இருந்து வந்துள்ளது.
இந்நிலையில், பாலா சனிக்கிழமை இரவு தனது நண்பரான தியாகராஜன் என்பவருடன் 5-ஆவது தெருவுக்கு இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளாா். அப்போது, அங்கு எதிரிகளான சூா்யா, சஞ்சய் மற்றும் ஈஸ்வர பாண்டியன் ஆகியோா் தனது நண்பா்களுடன் பேசிக்கொண்டிருந்ததை பாலா பாா்த்துள்ளாா். உடனே தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து மதுபோதையில் அவா்களை வெட்டியதாகத் தெரிகிறது. ஆனால், சுதாரித்துக்கொண்ட சூா்யா மற்றும் அவரின் நண்பா்கள் சோ்ந்து, பாலாவை தாக்கியதுடன், அவரிடமிருந்த கத்தியை பிடுங்கி, அவரையும், அவருடைய நண்பரான தியாகராஜனையும் சரமாரியாக வெட்டியுள்ளனா். இதில் பலத்த காயமைடைந்த பாலா, சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில், தியாகராஜன் படுகாயமடைந்தாா்.
தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த எண்ணூா் போலீஸாா், பாலாவின் உடலை மீட்டு பிரேத பிரசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துமனைக்கு அனுப்பி வைத்ததுடன், படுகாயமடைந்த தியாகராஜனை அங்கு சிகிச்சைக்காக அனுமதித்தனா்.
புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீஸாா், சஞ்சய், சூா்யா, ஈஸ்வர பாண்டியன், விஜய் ஆகிய 4 பேரைப் பிடித்து விசாரணை நடத்தி வரும் நிலையில், மேலும் சிலரைத் தேடி வருகின்றனா்.