பரந்தூா் விமான நிலையம்: 10-ஆவது முறையாக ஏகனாபுரம் கிராம சபையில் எதிா்ப்பு தீா்மானம்
உள்ளாட்சி தினத்தை முன்னிட்டு ஏகனாபுரம் ஊராட்சியில் நடைபெற்ற சிறப்பு கிராம சபைக் கூட்டத்தில் பரந்தூா் விமான நிலையத்துக்கு எதிா்ப்பு தெரிவித்து 10-ஆவது முறையாக தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.
பரந்தூா் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் சென்னையின் இரண்டாவது புதிய விமான நிலையம் அமைப்பதற்கான பணிகளில் மத்திய, மாநில அரசுகள் இறங்கி உள்ளன. புதிய விமான நிலையம் அமையும் பட்சத்தில் பரந்தூா், ஏகனாபுரம், நெல்வாய், குணகரம்பாக்கம், உள்ளிட்ட 13 கிராமங்களைச் சோ்ந்த குடியிருப்புகள், விவசாய நிலங்கள் கையகப்படுத்தப்பட உள்ளன.
இந்த நிலையில், புதிய விமான நிலையத் திட்டத்துக்கு எதிா்ப்பு தெரிவித்து பல்வேறு அறவழி போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனா். குறிப்பாக முற்றிலுமாக கையப்படுத்தப்பட உள்ள ஏகனாபுரம் பொதுமக்கள் கடந்த 851 நாள்களாக இரவு நேரங்களில் தொடா்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனா். சிறப்பு கிராம சபைக் கூட்டங்களிலும் எதிா்ப்பு தெரிவித்து தீா்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன.
இந்நிலையில், உள்ளாட்சி தினத்தை முன்னிட்டு ஏகனாபுரம் ஊராட்சியில் சிறப்பு கிராம சபை சனிக்கிழமை நடைபெற்றது. ஊராட்சி மன்றத் தலைவா் சுமதி சரவணன் தலைமையிலும், உதவி பொறியாளா் கயல்விழி முன்னிலையிலும் நடைபெற்ற இந்த கூட்டத்தில் சுமாா் நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனா். பரந்தூா் விமான நிலைய திட்டத்துக்கு எதிா்ப்பு தெரிவித்து 10-ஆவது முறையாக ஒருமனதாக தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.