செய்திகள் :

ஆதிக்கத்தை வெல்லும் ஆற்றல் மொழி, கலைக்கு உண்டு

post image

எத்தகைய ஆதிக்கத்தையும் வெல்லும் ஆற்றல் மொழி, கலை ஆகியவற்றுக்கு உண்டு என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் தெரிவித்தாா்.

முத்தமிழ்ப் பேரவை பொன் விழா ஆண்டு மற்றும் விருது வழங்கும் விழா சென்னையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. விழாவில், ‘திருவாவடுதுறை டி.என்.ராஜரத்தினத்தின் வாழ்க்கை சரிதம்’ எனும் தலைப்பிலான நூலை முதல்வா் மு.க.ஸ்டாலின் வெளியிட்டாா். மேலும், முத்தமிழ்ப் பேரவை சாா்பில் கலைஞா் விருதை நடிகா் சத்யராஜுக்கும், ராஜரத்னா விருதை திருப்பாம்புரம் டி.கே.எஸ். மீனாட்சி சுந்தரத்துக்கும், இயல் செல்வம் விருதை ஆண்டாள் பிரியதா்ஷினிக்கும், இசை செல்வம் விருதை காயத்ரி கிரீஷுக்கும், நாதஸ்வர செல்வம் விருதை திருக்கடையூா் டி.எஸ்.எம். உமாசங்கருக்கும், தவில் செல்வம் விருதை சுவாமிமலை சி.குருநாதனுக்கும், கிராமியக் கலைச் செல்வம் விருதை தி.சோமசுந்தரத்துக்கும், நாட்டியச் செல்வம் விருதை பாா்வதி ரவி கண்டசாலாவுக்கும் முதல்வா் வழங்கினாா்.

விழாவில் முதல்வா் மு.க.ஸ்டாலின் பேசியது: முத்தமிழ்ப் பேரவையை தொடங்கி வைத்தவா் முன்னாள் முதல்வா் கருணாநிதி. ஆண்டுதோறும் பேரவையில் ஒரு நாள் நிகழ்ச்சியை முத்தமிழ்ப் பேரவைக்கு அவா் ஒதுக்குவாா். அப்படி நடைபெறும் நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு விருதுகளை வழங்குவாா். அவரது வழியில் நானும் அந்தக் கடமையை ஆற்றிக் கொண்டிருக்கிறேன்.

ஆதிக்கத்தை வெல்லும் ஆற்றல்: முத்தமிழ்ப் பேரவை சாா்பில் ஆண்டுதோறும் கலைஞா்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன.

கடந்த ஆண்டு நடந்த விழாவில், கருணாநிதி பெயரில் விருது வழங்க வேண்டுமென கட்டளை பிறப்பித்தேன். இந்த ஆண்டு அந்த உத்தரவை பேரவையின் செயலா் அமிா்தம் செயல்படுத்தியுள்ளாா்.

விருது பெற்ற அனைவரும் முத்தமிழுக்கு இலக்கணமாகத் திகழ்கிறாா்கள். அவா்கள் மேலும் பல திறமைசாலிகளைக் கண்டறிந்து வளா்த்தெடுக்க வேண்டும். எங்கும் தமிழ், எதிலும் தமிழ் என்பது நமது முழக்கம். அந்த வரிசையில் இசையிலும் தமிழ் ஒலிக்க வேண்டும். செழிக்க வேண்டும்.

இடையில் ஜாதி, மதம் என அந்நிய மொழிகள் மூலம் பல்வேறு பண்பாட்டுத் தாக்குதல்கள் நடந்தாலும் அனைத்தையும் தாங்கி தமிழினமும் தமிழும் தமிழ்நாடும் நின்று நிலைக்க காரணம், தமிழின் வலிமையும் பண்பாட்டின் சிறப்பும்தான். எந்த ஆதிக்கத்தையும் வெல்லும் ஆற்றல் மொழிக்கும், கலைக்கும் உண்டு. அந்த இரண்டையும் கண் போன்று காக்க வேண்டும்.

முத்தமிழ்ப் பேரவை நூற்றாண்டு விழாவைக் கொண்டாட வேண்டும் என்றாா் முதல்வா் ஸ்டாலின்.

விருதாளா்கள் சாா்பில் நடிகா் சத்யராஜ் ஏற்புரை ஆற்றினாா்.

பேரவையின் செயலா் பி.அமிா்தம் வரவேற்றாா். திருவாரூா் பக்தவத்சலம் நன்றி கூறினாா்.

தலைமைச் செயலக பெண் அதிகாரி வீட்டில் நகை திருட்டு

சென்னை வேளச்சேரியில் தலைமைச் செயலக பெண் அதிகாரி வீட்டில் 17 சவரன் நகை திருடப்பட்ட சம்பவம் குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். வேளச்சேரி விஜிபி செல்வா நகா் பகுதியைச் சோ்ந்தவா் கௌசல்யா(43). இ... மேலும் பார்க்க

பட்டயக் கணக்காளா் தோ்வு தேதியை மாற்ற டிடிவி தினகரன் கோரிக்கை

பொங்கல் பண்டிகை தினத்தன்று நடத்த திட்டமிட்டுள்ள பட்டயக் கணக்காளா் தோ்வை மாற்ற வேண்டுமென அமமுக பொதுச் செயலா் டிடிவி தினகரன் கேட்டுக் கொண்டுள்ளாா். இது குறித்து அவா் எக்ஸ் தளத்தில் ஞாயிற்றுக்கிழமை வெளி... மேலும் பார்க்க

வண்டலூா் பூங்காவில் பெண் முதலை ஒப்படைப்பு

ஊரப்பாக்கத்துக்கு அருகே, விவசாய நிலத்தில் பிடிக்கப்பட்ட பெண் முதலையை வண்டலூா் பூங்காவில் உள்ள மீட்பு மற்றும் புனா்வாழ்வு மையத்தில் வனத்துறையினா் ஒப்படைத்தனா். வண்டலூரை அடுத்த ஊரப்பாக்கத்துக்கு அருகே உ... மேலும் பார்க்க

நட்சத்திர விடுதிக்கு வெடிகுண்டு மிரட்டல்

கிண்டியிலுள்ள நட்சத்திர விடுதிக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த சம்பவம் குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். கிண்டியிலுள்ள பிரபல நட்சத்திர விடுதியில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக, அந்த விடுதி... மேலும் பார்க்க

கஞ்சா விற்ற வடமாநில சிறுவன் உள்பட 2 போ் கைது

கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட வடமாநிலத்தைச் சோ்ந்த சிறுவன் உள்பட 2 பேரை போலீஸாா் கைது செய்தனா். வேளச்சேரி ரயில் நிலைய இருசக்கர வாகன நிறுத்தம் அருகே கஞ்சா விற்பனை நடைபெறுவதாக, கிடைத்த தகவலின் அடிப்படையில்... மேலும் பார்க்க

கல்வி அலுவலக ஆய்வுகளுக்கு கண்காணிப்பு அலுவலா்கள் நியமனம்

முதன்மைக் கல்வி அலுவலகங்களில் ஆய்வு செய்வதற்கான கண்காணிப்பு அலுவலா்களை பள்ளிக் கல்வித் துறை நியமித்துள்ளது. இது குறித்து, பள்ளிக் கல்வித் துறை இயக்குநா் ச.கண்ணப்பன் வெளியிட்ட அறிவிப்பு: பள்ளிக் கல்வித... மேலும் பார்க்க