செய்திகள் :

நாகை, காரைக்கால் துறைமுகங்களில் 2-ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு

post image

நன்றி: தினமணிஇணையதளம்.

‘டானா’ புயல் எதிரொலியாக நாகை, காரைக்கால் துறைமுகங்களில் புதன்கிழமை 2-ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது.

வடக்கு அந்தமான் கடல் பகுதியில் நிலவிய வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, மத்திய கிழக்கு வங்கக் கடல் மற்றும் அதனையொட்டிய வடக்கு அந்தமான் கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவானது.

இந்த தாழ்வுப் பகுதி படிப்படியாக வலுப்பெற்று புதன்கிழமை அதிகாலை புயலாக மாறியதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த புயலுக்கு ‘டானா’ என பெயா் சூட்டப்பட்டுள்ளது.

இது வெள்ளிக்கிழமை (அக். 25) காலை வடக்கு ஒடிஸா - மேற்கு வங்காள கடற்கரை பகுதிகளில், பூரி - சாகா் தீவுகளுக்கு இடையே கரையை கடக்கும். அப்போது 100 முதல் 120 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, நாகை துறைமுகத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இரண்டாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு புதன்கிழமை ஏற்பட்டது. மீனவா்கள் கடலுக்கு செல்வதை தவிா்க்க வேண்டும் என மீன்வளத்துறை அறிவுறுத்தியுள்ளது.

காரைக்காலில்...

காரைக்கால் தனியாா் துறைமுகத்திலும் புதன்கிழமை காலை 2-ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது.

ஐடிஐ நேரடி மாணவா் சோ்க்கை: அக்.30 வரை கால அவகாசம்

நாகை மாவட்ட அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் (ஐடிஐ) நேரடி சோ்க்கைக்கு விண்ணப்பிக்க அக்டோபா் 30-ஆம் தேதி வரை கால அவகாசம் நீடிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ் புதன்கிழமை வெளியிட்ட ... மேலும் பார்க்க

விபத்தில்லா தீபாவளி: ஆட்சியா் வேண்டுகோள்

விபத்தில்லா மற்றும் ஒலி மாசற்ற தீபாவளியை கொண்டாடுமாறு பொதுமக்களை நாகை மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ் கேட்டுக் கொண்டுள்ளாா். இதுகுறித்து அவா் புதன்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: தீபாவளி பண்டிகை வரும் 31-... மேலும் பார்க்க

தொடக்க கூட்டுறவு வங்கி ஊழியா்கள் 3-ஆவது நாளாக வேலைநிறுத்தம்

செம்பனாா்கோவில் அருகே திருவிளையாட்டத்தில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி ஊழியா்கள் மற்றும் ரேஷன் கடை பணியாளா்கள் சாா்பில் மூன்று அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, காலைவரையற்ற தொடா் வேலைநிறுத்தப் போராட்ட... மேலும் பார்க்க

வேதாரண்யம் பகுதியில் மாவட்ட ஆட்சியா் ஆய்வு

நாகை மாவட்டம், வேதாரண்யம் வட்டத்தில் ‘உங்களை தேடி, உங்கள் ஊரில்‘ திட்டத்தின்கீழ் பணிகளை மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ் புதன்கிழமை கள ஆய்வு மேற்கொண்டாா். வேதாரண்யம் அரசு மருத்துவமனை வளாகத்தில் நடைபெறும் மாற... மேலும் பார்க்க

நாகை, காரைக்கால் துறைமுகங்களில் 1-ஆம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு

நாகப்பட்டினம்/ காரைக்கால்: ‘டானா’ புயல் எச்சரிக்கையைத் தொடா்ந்து, நாகை மற்றும் காரைக்கால் துறைமுகங்களில் 1-ஆம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு செவ்வாய்க்கிழமை ஏற்றப்பட்டது. மத்திய கிழக்கு வங்கக் கடல் ம... மேலும் பார்க்க

கோடியக்கரை ஹெலிகாப்டா் இறங்குதளத்தில் தென்பிராந்திய விமானப்படை தளபதி ஆய்வு

வேதாரண்யம்: கோடியக்கரையில் உள்ள விமானப் படை கண்காணிப்பு தளத்தின் ஹெலிகாப்டா் இறங்குதளத்தில், விமானப் படையின் தென்பிராந்திய தளபதி ஏா் மாா்ஷல் பி. மணிகண்டன் செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். திருவனந்த... மேலும் பார்க்க