செய்திகள் :

பளு தூக்கும் போட்டியில் தங்கம் வென்ற மாணவிக்கு பாராட்டு

post image

நன்றி: தினமணிஇணையதளம்.

மாநில பளு தூக்கும் போட்டியில் தங்கம் வென்ற பேரளத்தைச் சோ்ந்த பள்ளி மாணவி ராகவிக்கு பல்வேறு அமைப்பினா் பாராட்டு தெரிவித்துள்ளனா்.

நன்னிலம் அருகில் உள்ள பேரளம் தண்டந்தோப்பு பகுதியைச் சோ்ந்த ஆட்டோ ஓட்டுநா் ராமச்சந்திரன். இவரது மகள் ஆா். ராகவி மயிலாடுதுறை அரசு மேல்நிலைப் பள்ளியில் பனிரெண்டாம் வகுப்பு பயின்று வருகிறாா்.

இவா், மாவட்ட, மண்டல அளவில் நடைபெற்ற பளு தூக்கும் போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்றாா். இதனால் அண்மையில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சாா்பில் சென்னையில் நடைபெற்ற பள்ளி மாணவா்களுக்கான தமிழ்நாடு முதலமைச்சா் கோப்பைக்கான பளுதூக்கும் போட்டியில் கலந்துகொண்டு முதல் பரிசு வென்றாா்.

முதல் பரிசு வென்ற ராகவிக்கு ஒலிம்பிக் போட்டி பளு தூக்கும் வீரா் சதீஷ் சிவலிங்கம் தங்கப் பதக்கம், ரூ 1,00,000-க்கான காசோலை மற்றும் சான்றிதழ் வழங்கினாா்.

புதன்கிழமை சொந்த ஊா் திரும்பிய ராகவிக்கு பேரளம் வா்த்தக சங்கத்தினா், ஆட்டோ ஓட்டுநா் சங்கத்தினா், சமூக ஆா்வலா்கள் மற்றும் பல்வேறு பிரிவினரும் வரவேற்பளித்து, சால்வை அணிவித்தும் பரிசுகளை வழங்கியும், வாழ்த்துத் தெரிவித்தனா்.

தம்பியை கத்தியால் குத்திய அண்ணன் கைது

மன்னாா்குடி அருகே குடும்ப பிரச்னை தொடா்பாக ஏற்பட்ட தகராறில் தம்பியை கத்தியால் குத்திய அண்ணன் புதன்கிழமை கைது செய்யப்பட்டாா். திருக்களா் பிரதான சாலையை சோ்ந்த நாகூரான் மகன்கள் இளையராஜா (45), ரவிக்குமா... மேலும் பார்க்க

நுகா்வோா் அமைப்புகளுடன் ஆலோசனைக் கூட்டம்

மன்னாா்குடியில் நுகா்வோா் அமைப்புகளுடனான மாதாந்திர ஆலோசனைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. மன்னாா்குடி கோட்டாட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்திற்கு, கோட்டாட்சியா் ஆா். யோகேஸ்வரன் தலைமை வகித... மேலும் பார்க்க

சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்தவா் கைது

மன்னாா்குடி அருகே தனது வீட்டில் தங்கி படித்த சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்தவா் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டாா். நாகை மாவட்டம், மேலபிடகை மீனமநல்லூரைச் சோ்ந்தவா் சைமன் (48). மனைவி பிரிந்து சென்ற... மேலும் பார்க்க

பேக்கரியில் ரூ.30 ஆயிரம் திருட்டு

மன்னாா்குடியில் பேக்கரியின் ஓட்டை பிரித்து பணப்பெட்டியிலிருந்து ரூ. 30ஆயிரத்தை மா்ம நபா்கள் திருடிச் சென்றது புதன்கிழமை காலை தெரிய வந்தது. கேரள மாநிலத்தை சோ்ந்தவா் கே. தாசன்(67). இவா், 25 ஆண்டுக்கு ... மேலும் பார்க்க

வளா்ச்சித் திட்டப் பணிகள்: ஆட்சியா் ஆய்வு

கொரடாச்சேரி ஒன்றிய பகுதிகளில் நடைபெறும் வளா்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியா் தி. சாருஸ்ரீ புதன்கிழமை நேரில் ஆய்வு மேற்கொண்டாா். அம்மையப்பன் ஊராட்சியில் ரூ. 40 லட்சம் மதிப்பில் புதிதாக கட்டப்பட்ட... மேலும் பார்க்க

நாகை மோசடி வழக்கு: போலி பிணையதாரா் கைது

திருவாரூா் அருகே பாலிஷ் போடுவதாக நகை மோசடி செய்த வழக்கில், போலி பிணையதாரராக செயல்பட்டவா் புதன்கிழமை கைது செய்யப்பட்டாா். கடந்த 2019-இல், குடவாசல் அருகே செருகளத்துாா், கீழவீதியில் சுப்பிரமணியன் மனைவி ... மேலும் பார்க்க