செய்திகள் :

கள்ளக்குறிச்சி: சிறுமிகள் பாலியல் வன்கொடுமை... கர்ப்பம்! - தலைமை ஆசிரியர் உட்பட இருவர் மீது குண்டாஸ்

post image

கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு கிராமத்தில் செயல்பட்டு வரும் அரசு ஆதி திராவிடர் நல ஆரம்பப் பள்ளியில், R.R குப்பத்தைச் சேர்ந்த 52 வயதான துரை அரசன் என்பவர் தலைமை ஆசிரியராக பணியாற்றி வந்தார். அதே பள்ளியில் படித்த சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டு, பாலியல் வன்கொடுமை செய்திருக்கிறார். அதையடுத்து கடந்த செப்டம்பர் மாதம் போக்சோ வழக்கின் கீழ் அவரை கைதுசெய்த அனைத்து மகளிர் காவல் நிலைய போலீஸார், நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர்.

அதேபோல... கள்ளக்குறிச்சி மாவட்டம், வாணாபுரம் வட்டம், கடுவனூர் கிராமத்தைச் சேர்ந்த 23 வயது பாலசக்தி என்பவர், 14 வயது சிறுமியை காதலிப்பதாகக் கூறி தொடர்ச்சியாக பாலியல் வன்கொடுமை செய்திருக்கிறார். ஒருநாள் அந்த சிறுமி வயிறு வலியால் துடித்தபோது, மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றிருக்கிறார் அவரது தாய்.

கைது செய்யப்பட்ட துரை அரசன், பாலசக்தி

அப்போது சிறுமியை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்திருக்கின்றனர். அதைக் கேட்டு அதிர்ந்து போன சிறுமியின் தாய், திருக்கோயிலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகாரளித்திருக்கின்றனர். அதையடுத்து போக்சோ வழக்கின் கீழ் பாலசக்தியை கைது செய்த போலீஸார், அவரையும் நீதிமன்றக் காவலுக்கு அனுப்பி வைத்தனர். இந்த இருவரும் தொடர் குற்றங்களில் ஈடுபட வாய்ப்பிருக்கிறது என்பதால், இவர்களை குண்டாஸ் பிரிவில் சிறையில் அடைக்க வேண்டும் என்று, கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரைத்தார் எஸ்.பி ரஜத் சதுர்வேதி. அதனடிப்படையில் இருவரையும் குண்டாஸ் பிரிவில் ஒரு வருடம் சிறையில் அடைக்க உத்தரவிட்டிருக்கிறார் கள்ளக்குறிச்சி ஆட்சியர் எம்.எஸ். பிரசாந்த்.

Fake Website: `99% ஆஃபரில் ஆப்பிள், சாம்சங் கேட்ஜெட்கள்' - மோசடியில் சிக்காமல் தப்புவது எப்படி?

ஆண்டுதோறூம் கிரேட் இண்டியன் ஃபெஸ்டிவல், பிக் பில்லியன் டேஸ் என்று ஆன்லைன் தளங்கள் ஆஃபர் அறிவிக்கும் சில தினங்கள் இருக்கின்றன. தீபாவளி, பொங்கல் என விழாக்காலங்களில் சில தள்ளுபடிகள் இருப்பது வழக்கம்தான்.... மேலும் பார்க்க

மூணாறுக்குப் பள்ளிச் சுற்றுலா; காவல் நிலையத்தில் கஞ்சா புகைக்க தீப்பெட்டி கேட்ட மாணவர்கள்!

கேரளாவில் ஆசிரியர்களுடன் சுற்றுலா சென்ற பள்ளி மாணவர்கள், கஞ்சா பீடி பற்றவைக்கத் தீப்பெட்டிக்காக ஒர்க ஷாப் கட்டடம் என்று நினைத்து உள்ளூர் காவல் நிலையத்துக்குள் நுழைந்த சம்பவம், வெளியில் தெரியவந்திருக்க... மேலும் பார்க்க

சென்னை: வீட்டிலேயே போதைப்பொருள் தயாரித்த மாணவர்கள் - சிக்கியது எப்படி?

போதைப்பொருள் விற்பனைக்கு எதிராக தமிழக காவல்துறை கடும் நடவடிக்கை எடுத்து வந்தாலும், அதைக் கட்டுப்படுத்த முடியவில்லை என எதிர்க்கட்சிகள் தொடர்ந்து விமர்சித்து வருகின்றன. இந்தச் சூழலில் சென்னையில் கல்லூரி... மேலும் பார்க்க

அரசு வேலை; போலி பணி நியமன ஆணை வழங்கி மோசடி... சாத்தான்குளம் இன்ஸ்பெக்டர் மீது நடவடிக்கை..!

தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் காவல் நிலைய ஆய்வாளாராக ஏசு ராஜசேகரன், கடந்த 8 மாதங்களாக பணியில் இருந்தவர். இவர், கன்னியாகுமரி மாவட்டம், புதுக்கடை காவல் நிலையத்தில் ஆய்வாளராகப் பணிபுரிந்த போது அரச... மேலும் பார்க்க

மது போதையில் பேருந்தின் ஸ்டியரிங்கில் அமர்ந்து ரகளை; திருப்பூர் இளைஞர் கைது; வைரலாகும் வீடியோ

கோவையிலிருந்து திருப்பூர் நோக்கி அரசுப் பேருந்து கடந்த 21-ஆம் தேதி வந்து கொண்டிருந்தது. இந்தப் பேருந்தை ஓட்டுநர் ரகுராம் என்பவர் ஓட்டி வந்தார். திருப்பூர் காந்தி நகர் சிக்னல் அருகே வந்தபோது, அவ்வழியே ... மேலும் பார்க்க

Irfan issue: இர்ஃபான் வீடியோ விவகாரம்; மருத்துவமனை மீது அதிரடி நடவடிக்கை..!

வெவ்வேறு சர்ச்சைகளில் தொடர்ந்து சிக்கி வருகிறார் யூடியூபர் இர்ஃபான்.சில மாதங்களுக்கு தனக்கு என்ன குழந்தை பிறக்கப்போகிறது என்பதை வெளிநாட்டுக்குச் சென்று அறிந்துக் கொண்ட இர்ஃபான் அதனை `Gender Reveal' என... மேலும் பார்க்க