செய்திகள் :

சென்னை: வீட்டிலேயே போதைப்பொருள் தயாரித்த மாணவர்கள் - சிக்கியது எப்படி?

post image

போதைப்பொருள் விற்பனைக்கு எதிராக தமிழக காவல்துறை கடும் நடவடிக்கை எடுத்து வந்தாலும், அதைக் கட்டுப்படுத்த முடியவில்லை என எதிர்க்கட்சிகள் தொடர்ந்து விமர்சித்து வருகின்றன. இந்தச் சூழலில் சென்னையில் கல்லூரி மாணவர்கள் சிலர் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபடும் ரகசிய தகவல் போதைப்பொருள் தடுப்பு நுண்ணறிவு பிரிவு போலீஸாருக்கு கிடைத்தது. இதையடுத்து அந்தப் பிரிவின் போலீஸார் கொடுங்கையூர் பகுதியில் உள்ள ஒரு வீட்டை கண்காணித்தனர். அப்போது அந்த வீட்டில் போதைப்பொருள் விற்கும் கும்பல் இருப்பது தெரியவந்தது.

போதைப்பொருள்

இதையடுத்து கொடுங்கையூர் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக அந்த வீட்டை சுற்றி வளைத்த போலீஸார் அங்கிருந்த ஏழு பேரை சுற்றி வளைத்துப் பிடித்தனர். அவர்களிடம் 250 கிராம் எடையுள்ள போதைப்பொருள், ஆறு செல்போன்கள், எடைபோடும் சிறிய மெஷின், கார் ஆகியவற்றை போலீஸார் பறிமுதல் செய்தனர். அவர்களிடம் விசாரித்தபோது பிடிபட்டவர்களில் 5 பேர் கல்லூரி மாணவர்கள் எனத் தெரியவந்தது. விசாரணைக்குப் பிறகு அவர்களை போலீஸார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

இது குறித்து கொடுங்கையூர் போலீஸார் கூறுகையில், ``கைதுசெய்யப்பட்ட மாணவர்கள், போதைப்பொருளுக்கு அடிமையானவர்கள். அதனால் போதைப்பொருளை விலைக்கு வாங்கி வந்த இவர்கள், ஒன்று சேர்ந்து வீட்டிலேயே அதை தயாரிக்க திட்டமிட்டுள்ளனர். அதற்காக அந்த வகை போதைப்பொருளை எப்படி தயாரிப்பது என இணையதளத்தில் தகவல்களை சேகரித்திருக்கிறார்கள். பின்னர் அதற்குரிய மூலப் பொருள்களை பாரிமுனையில் உள்ள கடைகளில் ஆய்வக ஆராய்ச்சிக்கு வேண்டும் எனக் கூறி வாங்கியிருக்கிறார்கள்.

கைது

இதையடுத்து வீட்டிலேயே போதைப்பொருளை தயாரித்துள்ளனர். வீட்டில் உள்ளவர்களும் மாணவர்கள் ஆராய்ச்சி செய்கிறார்கள் எனக் கருதி அவர்களைக் கண்டுக்கொள்ளவில்லை. வீட்டிலேயே தயாரிக்கப்பட்ட போதைப்பொருளை இந்தக் கும்பல் விற்க முடிவு செய்திருக்கிறார்கள். ஆனால் அதற்குள் எங்களிடம் சிக்கிக் கொண்டனர். கைதானவர்கள் அளித்த தகவலின்படி இந்தக் குற்றச் சம்பவத்தில் தொடர்புடையவர்களைத் தேடிவருகிறோம்" என்றனர்.

Fake Website: `99% ஆஃபரில் ஆப்பிள், சாம்சங் கேட்ஜெட்கள்' - மோசடியில் சிக்காமல் தப்புவது எப்படி?

ஆண்டுதோறூம் கிரேட் இண்டியன் ஃபெஸ்டிவல், பிக் பில்லியன் டேஸ் என்று ஆன்லைன் தளங்கள் ஆஃபர் அறிவிக்கும் சில தினங்கள் இருக்கின்றன. தீபாவளி, பொங்கல் என விழாக்காலங்களில் சில தள்ளுபடிகள் இருப்பது வழக்கம்தான்.... மேலும் பார்க்க

மூணாறுக்குப் பள்ளிச் சுற்றுலா; காவல் நிலையத்தில் கஞ்சா புகைக்க தீப்பெட்டி கேட்ட மாணவர்கள்!

கேரளாவில் ஆசிரியர்களுடன் சுற்றுலா சென்ற பள்ளி மாணவர்கள், கஞ்சா பீடி பற்றவைக்கத் தீப்பெட்டிக்காக ஒர்க ஷாப் கட்டடம் என்று நினைத்து உள்ளூர் காவல் நிலையத்துக்குள் நுழைந்த சம்பவம், வெளியில் தெரியவந்திருக்க... மேலும் பார்க்க

அரசு வேலை; போலி பணி நியமன ஆணை வழங்கி மோசடி... சாத்தான்குளம் இன்ஸ்பெக்டர் மீது நடவடிக்கை..!

தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் காவல் நிலைய ஆய்வாளாராக ஏசு ராஜசேகரன், கடந்த 8 மாதங்களாக பணியில் இருந்தவர். இவர், கன்னியாகுமரி மாவட்டம், புதுக்கடை காவல் நிலையத்தில் ஆய்வாளராகப் பணிபுரிந்த போது அரச... மேலும் பார்க்க

மது போதையில் பேருந்தின் ஸ்டியரிங்கில் அமர்ந்து ரகளை; திருப்பூர் இளைஞர் கைது; வைரலாகும் வீடியோ

கோவையிலிருந்து திருப்பூர் நோக்கி அரசுப் பேருந்து கடந்த 21-ஆம் தேதி வந்து கொண்டிருந்தது. இந்தப் பேருந்தை ஓட்டுநர் ரகுராம் என்பவர் ஓட்டி வந்தார். திருப்பூர் காந்தி நகர் சிக்னல் அருகே வந்தபோது, அவ்வழியே ... மேலும் பார்க்க

Irfan issue: இர்ஃபான் வீடியோ விவகாரம்; மருத்துவமனை மீது அதிரடி நடவடிக்கை..!

வெவ்வேறு சர்ச்சைகளில் தொடர்ந்து சிக்கி வருகிறார் யூடியூபர் இர்ஃபான்.சில மாதங்களுக்கு தனக்கு என்ன குழந்தை பிறக்கப்போகிறது என்பதை வெளிநாட்டுக்குச் சென்று அறிந்துக் கொண்ட இர்ஃபான் அதனை `Gender Reveal' என... மேலும் பார்க்க

வேலூர் சிறையில் கைதி சித்ரவதை... சிறைத்துறை டி.ஐ.ஜி ராஜலட்சுமி, 2 உயரதிகாரிகள் சஸ்பெண்ட்!

கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அருகேயுள்ள மாணிக்கம் கோட்டை பகுதியைச் சேர்ந்தவர் சிவக்குமார். கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு, ஆயுள் தண்டனை கைதியாக வேலூர் சிறையில் தண்டனை பெற்று வந்த சிவக்குமாரை சி... மேலும் பார்க்க