செய்திகள் :

Lucky Baskhar: "4 மொழி, 40 நாள் டப்பிங், ராம்கியுடனான அனுபவம்" - சுவாரஸ்யம் பகிரும் துல்கர் சல்மான்

post image
வெங்கி அட்லூரி இயக்கத்தில் துல்கர் சல்மான், மீனாட்சி சௌத்ரி, ராம்கி நடிப்பில், ஜீவி பிரகாஷ்குமார் இசையில் உருவாகி உள்ள திரைப்படம் 'லக்கி பாஸ்கர்'.

இப்படம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வரும் அக்டோபர் 31ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இந்நிலையில் படத்தின் புரொமோஷன் பணிகளில் படக்குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர். அவ்வகையில் நேற்று (அக்டோபர் 23) சென்னையில் நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது. அந்நிகழ்ச்சியில் பேசிய துல்கர் சல்மான், "நீண்ட நாட்களுக்குப் பிறகு என்னுடைய படம் திரைக்கு வருகிறது. இந்த படத்தில் வரும் பாஸ்கர் கதாபாத்திரம் அனைவரின் வாழ்க்கையிலும் பொருந்தும்.

துல்கர் சல்மான்

நான்கு மொழிகளிலும் டப்பிங் செய்வதற்கு 40 நாள் ஆகும். ஒவ்வொரு மொழிக்கும் 10 நாட்கள் எடுக்கும், 40 நாட்களும் இருட்டில் அமர்ந்தே பேசினேன். அது நான்கு முறை நடித்தது போன்ற ஒரு அனுபவத்தை எனக்குக் கொடுத்தது. டிரைலரில் வருவது என்னுடைய குரல் இல்லை. ஆனால் படம் வெளியாகும் போது படத்தில் என்னுடைய குரல்தான் இருக்கும் அதற்கு நான் கேரன்டி.

நான் ரசித்த பிடித்த நடிகர்கள் உடன் நடிப்பது எனக்குப் பாக்கியம். அப்படி ஒருவர்தான் ராம்கி. அவருடைய ஹேர் ஸ்டைலுக்கு நான் மிகப் பெரிய ரசிகன். தற்போது நீண்ட இடைவெளிக்குப் பிறகு 'காந்தா' என்ற நேரடி தமிழ்ப் படத்தில் நடித்து வருகிறேன். இதுவும் ஒரு பீரியட் திரைப்படம்தான். இப்படத்தில் நடித்திருக்கும் மீனாட்சி சௌவுத்ரி இரவு ஒரு படம், காலையில் ஒரு படம் என்று நடித்து வருகிறார். அதனால் இங்கு வர முடியவில்லை. ஒரு நடிகனாக எனக்கு இதைப் புரிந்துகொள்ள முடிகிறது" என்று கூறியிருக்கிறார்.

துல்கர் சல்மான்

"இந்த படத்திற்கு 'லக்கி பாஸ்கர்' என்ற பெயர் வைத்துள்ளீர்கள், உங்கள் வாழ்க்கையில் லக்கி என்றால் எதைக் கூறுவீர்கள்" என்ற கேள்விக்கு, "என் வாழ்க்கையில் நான் லக்கிதான், பிறந்த வீடும் லக்கிதான் என்றிருக்கிறார். மேலும் நான் நடிகர் அஜித்குமாரின் மிகப் பெரிய ரசிகன். அவரை நான் மதிக்கிறேன் அவர் போல் யாரும் இருக்க முடியாது." என்று தெரிவித்திருக்கிறார்.

மேலும், "அக்டோபர் 31ம் தேதி வெளியாகும் அமரன், பிரதர், பிளடி பெக்கர் ஆகிய படங்களும் வருகிறது. அனைத்து படங்களும் வெற்றி பெற வேண்டும். லக்கி பாஸ்கர் படத்துக்கும் வாய்ப்பு கொடுங்கள்” என்று பேசியிருக்கிறார்.

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...

https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX

Vettaiyan: "ஹீரோ என்றால் சரியாகத்தான் செய்வார் என்ற பிம்பம் உடைந்தது" - பிரின்ஸ் கஜேந்திரபாபு

"நீட் அட்டூழியத்திற்கு எதிராக ரஜினிகாந்த், அமிதாப் பச்சன் தெருவில் இறங்கி போராடாமல் இருந்திருக்கலாம். வீதியில் இறங்கிப் போராடிய திரை நட்சத்திரம் ரோகிணி வேட்டையன் மூலம் அவர்களுடன் இணைந்து நீட்-க்கு எதி... மேலும் பார்க்க

Kanguva: `ஒவ்வொரு காட்சியையும் 100 முறைக்கு மேல் பார்த்தேன்!' - மதன் கார்க்கியின் கங்குவா விமர்சனம்!

அடுத்த மாதம் பிரமாண்டமான முறையில் வெளியாகவிருக்கிறது `கங்குவா'.சூர்யாவுடன் திஷா பதானி, பாபி தியோல் ஆகியோர் நடித்திருக்கிறார்கள். இதுதான் திஷா பதானி மற்றும் பாபி தியோலின் தமிழ் டெபுட்! அதிகப்படியான பொர... மேலும் பார்க்க

Kanguva Vs Francis : ரெண்டு பேருக்கும் இருக்கிற வித்தியாசம் இது தான்! -Director Siva | Suriya | DSP

விகடன் குழுவினருக்கு அளித்த பிரத்யேகப் பேட்டியில், கங்குவா பற்றிய விவரங்களை முதன்முறையாகப் பகிர்ந்துள்ளார் இயக்குநர் சிவா. அவர் சூர்யாவுடன் இணைந்து பணியாற்றுவது, தயாரிப்புக்கு முந்தைய பணிகள் மற்றும் ப... மேலும் பார்க்க

Suriya: `சில்லுனு ஒரு காதல்' ; சூர்யாவும் ஜோதிகாவும் மீண்டும் திரையில்? - சூர்யாவின் பதில்!

பிரமாண்டமான முறையில் வெளியாகிறது `கங்குவா'.சூர்யாவின் கரியரில் மிக முக்கியமான திரைப்படமாக கருதப்படும் இத்திரைப்படத்தின் மூலம் தமிழில் பாபி தியோலும் திஷா பதானியும் அறிமுகமாகிறார்கள். கங்குவா திரைப்படத்... மேலும் பார்க்க