செய்திகள் :

ஓடிடியில் கடைசி உலகப் போர், கோழிப்பண்ணை செல்லதுரை!

post image

கடைசி உலகப் போர் மற்றும் கோழிப்பண்ணை செல்லதுரை திரைப்படங்கள் ஓடிடியில் வெளியாகியுள்ளன.

மீசைய முருக்கு, சிவகாமியின் சபதம், நட்பே துணை, நான் சிரித்தால், அன்பறிவு உள்ளிட்ட படங்களில் நாயகனாக நடித்து பிரபலமானவர் இசையமைப்பாளர் ஹிப்ஹாப் ஆதி.

இறுதியாக, இவரே நடித்து இயக்கிய திரைப்படம் கடைசி உலகப் போர். இப்படம் கடந்த செ. 20 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றது. படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்கும் திட்டமிருப்பதாக ஹிப் ஹாப் ஆதி தெரிவித்திருக்கிறார்.

அதே நாளில், இயக்குநர் சீனு ராமசாமி இயக்கிய ‘கோழிப்பண்ணை செல்லதுரை’ திரையரங்குகளில் வெளியாகி கலவையான விமர்சனங்களையே பெற்றது.

இப்படத்தில் அறிமுக நாயகன் ஏகன், யோகி பாபு மற்றும் புதுமுகங்கள் நடித்திருந்தனர். திரைவெளியீட்டு முன்பாகவே, ஆக்லாந்து சர்வதேச திரைப்பட விழாவில் தேர்வான முதல் தமிழ்ப்படம் என்கிற பெயரையும் பெற்றது.

இதையும் படிக்க: கஜினி - 2: சூர்யா, அமீர் கான் தயார்?

இந்த நிலையில், கடைசி உலகப் போர் திரைப்படம் அமேசான் பிரைம் ஓடிடி தளத்திலும் கோழிப்பண்ணை செல்லதுரை திரைப்படம் சிம்பிளி சௌத் ஓடிடியிலும் இன்று வெளியாகியுள்ளன.

கஜினி - 2: சூர்யா, அமீர் கான் தயார்?

கஜினி படத்தின் இரண்டாம் பாகத்திற்கான பேச்சுவார்த்தைகள் துவங்கியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. ஏ. ஆர். முருகதாஸ் இயக்கத்தில் கடந்த 2005 வெளியான திரைப்படம் கஜினி. இதில், நாயகனாக சூர்யாவும் நாயகியாக அச... மேலும் பார்க்க

ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்ற சொர்கவாசல் டீசர்!

நடிகர் ஆர்ஜே பாலாஜியின் சொர்கவாசல் படத்தின் டீசர் ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றுள்ளது.ஆர்ஜேவாக இருந்து நடிகராக மாறியவர் ஆர்ஜே பாலாஜி. நடிகராக மட்டுமில்லாமல் இயக்குநராகவும் இருக்கிறார். நயன்தாராவை வைத்... மேலும் பார்க்க

தினப்பலன்கள்: 12 ராசிகளுக்கும்!

12 ராசிக்கான தினப்பலன்களை தினமணி இணையதளத்தின் ஜோதிடர் பெருங்குளம் ராமகிருஷ்ணன் துல்லியமாகக் கணித்து வழங்கியுள்ளார்.24/10/2024 (வியாழக்கிழமை)மேஷம்:இன்று தொழில் வியாபாரத்தில் இருந்த முட்டு கட்டைகள் நீங்... மேலும் பார்க்க

தண்டகாரண்யம் முதல் பாடல்!

இயக்குநர் பா.ரஞ்சித் தனது நீலம் புரொடக்சன்ஸ் தயாரிப்பு நிறுவனம் மூலம் படங்கள் தயாரித்து வருகிறார். பரியேறும் பெருமாள் படத்தின் மூலம் தயாரிப்பாளராக துவங்கி பல்வேறு படங்கள் அவரது நீலம் தயாரிப்பு நிறுவனம... மேலும் பார்க்க

பிரதர் படத்தின் புதிய பாடல் விடியோ..!

ஜெயம் ரவி - எம். ராஜேஷ் கூட்டணியில் உருவான பிரதர் திரைப்படம் விரைவில் வெளியாகவுள்ளது.இயக்குநர் எம். ராஜேஷ், ‘சிவா மனசுல சக்தி’, ‘ஒரு கல் ஒரு கண்ணாடி’, ‘பாஸ் என்கிற பாஸ்கரன்’, ’ஆல் இன் ஆல் அழகுராஜா’ உள... மேலும் பார்க்க