செய்திகள் :

`தீபாவளி நேரம் பாஸ்… கண்டுக்காதீங்க!’ - லஞ்ச ஒழிப்பு போலீஸுக்கே `லஞ்சம்' கொடுத்த டாஸ்மாக் மேலாளர்

post image

 டாஸ்மாக் கடைகளில் மதுபானங்கள் கூடுதல் விலை வைத்து விற்கப்படுவதாக தொடர்ச்சியாக புகார்கள் எழுந்தாலும், `மதுபானங்களை கூடுதல் விலை வைத்து விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று அரசு எச்சரித்தாலும், டாஸ்மாக் ஊழியர்கள் அதை ஒரு பொருட்டாகவே எடுத்துக் கொள்வதில்லை. வழக்கம் போல நிர்ணயிக்கப்பட்ட விலையைவிட, கூடுதல் விலை வைத்து விற்று கலெக்‌ஷனை பார்த்து வருகிறார்கள். தீபாவளி, ஆயுதபூஜை மற்றும் பொங்கல் உள்ளிட்ட விசேஷ நாட்களில், அவர்கள் கூறுவதுதான் விலை. அதனால் லஞ்ச ஒழிப்பு போலீஸார், ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி நேரத்தில் டாஸ்மாக் கடைகளை குறி வைத்து சோதனை செய்து வருகின்றனர்.

டாஸ்மாக்

 இந்த ஆண்டு அந்த பொறியில் சிக்கிவிடக் கூடாது என்று நினைத்த கடலூர் மாவட்ட டாஸ்மாக் மேலாளர் செந்தில்குமார், லஞ்ச ஒழிப்பு போலீஸாரை வித்தியாசமாக `டீல்’ செய்ய திட்டமிட்டிருக்கிறார். அதன்படி சில நாள்களுக்கு முன்பு கடலூர் லஞ்ச ஒழிப்பு இன்ஸ்பெக்டர் திருவேங்கடத்தை தொடர்பு கொண்ட மேலாளர் செந்தில்குமார், ``தீபாவளி நேரம் பாஸ். டாஸ்மாக் கடைகள் மற்றும் அலுவலகத்தில் சோதனை செய்ய வேண்டாம். கண்டுக்காதீங்க. ரூ.25,000 கொடுத்தனுப்பறேன்” என்று கூறியதாக கூறப்படுகிறது. அதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த இன்ஸ்பெக்டர் திருவேங்கடம், அந்த `டீல்’ குறித்து தன்னுடைய மேலதிகாரிக்குத் தெரிவித்திருக்கிறார். அதையடுத்து டாஸ்மாக் மேலாளர் செந்தில்குமாரை கையும் களவுமாக பிடிக்க `ஸ்கெட்ச்’ போட்டனர் லஞ்ச ஒழிப்பு போலீஸார்.

இதற்கிடையில், டாஸ்மாக் விற்பனையாளர்கள் மற்றும் மேற்பார்வையாளர்களுக்கான கலந்தாய்வு கூட்டம், சேத்தியாத்தோப்புக்கு அருகில் இருக்கும் சென்னிநத்தம் பகுதியில் நேற்று நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு டாஸ்மாக் விற்பனையாளர்களுக்கும், மேலாளர்களுக்கும் `அறிவுரை?!’ வழங்கிய செந்தில்குமார், இன்ஸ்பெக்டர் திருவேங்கடத்தை தொடர்பு கொண்டு, `சேத்தியாத்தோப்புக்கு வந்து பணத்தை வாங்கிக்கொள்ளுங்கள்’ என்று கூறியிருக்கிறார். அதற்கு சரியென்று கூறிய இன்ஸ்பெக்டர் திருவேங்கடம், சேத்தியாதோப்புக்குச் சென்று செந்தில்குமாருக்குப் போன் செய்து தான் வந்துவிட்டதாக கூறியிருக்கிறார்.

லஞ்சம்

அதையடுத்து தன்னுடைய அலுவலகத்தில் இளநிலை உதவியாளராக பணியாற்றும் ராதாகிருஷ்ணன் என்பவரிடம், ரூ.25,000  கொடுத்தனுப்பியிருக்கிறார் செந்தில்குமார். அப்போது அவர்களுக்காகவே காத்திருந்த லஞ்ச ஒழிப்பு டி.எஸ்.பி சத்தியராஜ் தலைமையிலான போலீஸார், செந்தில்குமாரையும், ராதாகிருஷ்ணனையும் அதிரடியாக கைது செய்திருக்கின்றனர். அப்போதுகூட, `பணம் பத்தவில்லை என்றால் கூடுதலாக தருகிறோம். எங்களை விட்டுவிடுங்கள்’ என்று பேரம் பேசினார்களாம்.

Vijay : `எங்கள் தளபதிக்கு நல்ல பெயர் கிடைக்க வேண்டும்..!' - தவெக மாநாடு குறித்து S.A.சந்திரசேகர்

அக்டோபர் 27-ம் தேதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டியில் தனது முதல் அரசியல் மாநாட்டை பிரமாண்டமாக நடத்தி தனது கட்சிக் கொள்கைகளை அறிவிக்க விஜய் திட்டமிட்டிருக்கிறார்.தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மா... மேலும் பார்க்க

Elon Musk vs Ambani: சாட்டிலைட் பிராட்பேண்ட் யுத்தத்தில் வெல்லப் போவது யார்?!

இந்தியாவில் பிராட்பேண்ட் சேவைக்கான செயற்கைக்கோள் அலைக்கற்றை ஏலத்தில் விடப்படாமல் நிர்வாக ரீதியாக ஒதுக்கப்படும் என்று மத்திய அரசு சமீபத்தில் அறிவித்தது. இதனையடுத்து இந்தியாவில் சாட்டிலைட் பிராட்பேண்ட் ... மேலும் பார்க்க

`அடையாளமும் இல்லை… அங்கீகாரமும் இல்லை…!’ - 12 ஆண்டுகளாகப் போராடும் 12,000 பகுதி நேர ஆசிரியர்கள்

``2021 சட்டப்பேரவை தேர்தலின்போது, ` பள்ளிக்கல்வித்துறையில் தற்போது பகுதி நேர ஆசிரியர்களாகப் பணியாற்றி வரும் ஓவிய ஆசிரியர்கள், இசை ஆசிரியர்கள், உடற்பயிற்சி ஆசிரியர்கள் ஆகியோரை பணி நிரந்தரம் செய்ய நடவட... மேலும் பார்க்க

தலைமைச் செயலக கட்டடத்தில் விரிசலா... பதறி வெளியேறிய ஊழியர்கள்; அமைச்சர் சொல்வதென்ன?

சென்னையிலுள்ள தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலகத்தில், நாமக்கல் கவிஞர் மாளிகைக் கட்டத்தில் விரிசல் ஏற்பட்டிருப்பதாக உள்ளிருந்த அரசு அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் பதறிய வெளியேறிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்த... மேலும் பார்க்க

கழுகார்: `சைலன்ட் மோடு மாண்புமிகு; வேலையைத் தொடங்கிய கம்பெனி டு அண்ணன் வந்ததும் மாநாடு?’

வேலையைத் தொடங்கிய கம்பெனி!சைலன்ட் மோடில் மாண்புமிகு...மிக நீண்ட போராட்டத்துக்குப் பிறகு சுதந்திரக் காற்றைச் சுவாசிக்கும் அந்த மாண்புமிகு, இனிமேல் எந்த வம்பு தும்பிலும் சிக்கிவிடக் கூடாது, யார் கண்ணையு... மேலும் பார்க்க

வயநாடு இடைத்தேர்தல்: "என்னை ஏற்றது போல பிரியங்காவையும் ஏற்றுக் கொள்ளுங்கள்" - ராகுல் காந்தி பிரசாரம்

நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் வயநாடு மற்றும் ரேபரேலி ஆகிய இரண்டு தொகுதிகளிலும் ஒரே சமயத்தில் போட்டியிட்டார் ராகுல் காந்தி. இரண்டு தொகுதிகளிலும் வெற்றி பெற்றதைத் தொடர்ந... மேலும் பார்க்க