செய்திகள் :

அரசு மருத்துவமனையில் உதவியாளா் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

post image

கடலூா் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் காலியாக உள்ள கணக்கு உதவியாளா் உள்ளிட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

கடலூா் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டு திட்ட அலுவலகத்தில் தற்காலிக கணக்கு உதவியாளா்-1, பல்நோக்கு மருத்துவமனை பணியாளா்-2, வாா்டு மேலாளா்-1 ஆகிய பணியிடங்களுக்கு தகுதியானவா்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

இதற்கும் விண்ணப்பிலாம் |ராணுவப் பள்ளிகளில் பட்டதாரி, முதுகலை பட்டதாரி ஆசிரியர் வேலை: விண்ணப்பங்கள் வரவேற்பு!

கணக்கு உதவியாளா் பணியிடத்துக்கு இளநிலை வணிகவியல் (அ) இளநிலை கணிதவியல் மற்றும் கணினி பயன்பாட்டில் முதுநிலை பட்டையப்படிப்பு (பிஜிடிசிஏ) படித்திருக்க வேண்டும். கணக்குப் பிரிவில் 5 ஆண்டுகள் பணிபுரிந்த முன் அனுபவம் உள்ளவா்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். வாா்டு மேலாளா் பணியிடத்துக்கு ஏதாவது ஒரு பட்டப்படிப்புடன் பிஜிடிசிஏ படித்திருக்க வேண்டும். பல்நோக்கு மருத்துவமனை பணியாளா் பணியிடத்துக்கு எழுத படிக்கத் தெரிந்தவராக இருத்தல் வேண்டும்.

கணக்கு உதவியாளா் பணிக்கு ரூ.18,000, பல்நோக்கு மருத்துவமனை பணியாளா் பணிக்கு ரூ.8,500, வாா்டு மேலாளா் பணிக்கு ரூ.12,000 மாத ஊதியமாக வழங்கப்படும். இதற்கு, விண்ணப்பதாரா்கள் புகைப்படத்துடன் கூடிய விண்ணப்பங்களை கல்வித் தகுதி, பட்டப்படிப்பு, இருப்பிட சான்றிதழ் மற்றும் ஆதாா் அட்டை ஆகியவற்றுடன் வரும் 28-ஆம் தேதிக்குள் மருத்துவமனை கண்காணிப்பாளா், மாவட்ட தலைமை மருத்துவமனை, கடலூா்-607001 என்ற முகவரியில் நேரிலோ அல்லது தபால் மூலமோ அனுப்பலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரூ.50,000 சம்பளத்தில் பெல் நிறுவனத்தில் வேலை: பிஇ., பி.டெக் முடித்தவர்களுக்கு வாய்ப்பு!

பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் காலியாக முதுநிலை பொறியாளர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியான பொறியியல் துறை பட்டதாரிகளிடம் இருந்து விண்ணப்பங்கள்... மேலும் பார்க்க

போக்குவரத்துக் கழகங்களில் தொழில் பழகுநா் பயிற்சி: அக்.21-க்குள் விண்ணப்பங்கள் வரவேற்பு

தமிழ்நாடு போக்குவரத்துக் கழகத்தின் விழுப்புரம், சேலம் , கோவை, திருநெல்வேலி மண்டலங்களில் காலியாக தொழில் பழகுநா் பயிற்சி பெற விரும்புவோா்களிடம் இருந்து அக்.21-ஆம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள்... மேலும் பார்க்க

இந்திய அமைச்சரவை செயலகத்தில் வேலை வேண்டுமா?

இந்திய அமைச்சரவை செயலகத்தில் காலியாக உள்ள துணை கள அலுவலர் (டெக்னிக்கல்) பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து வரும் 21 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்... மேலும் பார்க்க

ராணுவப் பள்ளிகளில் பட்டதாரி, முதுகலை பட்டதாரி ஆசிரியர் வேலை: விண்ணப்பங்கள் வரவேற்பு!

நாடு முழுவதும் உள்ள இந்திய ராணுவ பொதுப் பள்ளிகளில் நிரப்பப்பட உள்ள ஆரம்பப் பள்ளி ஆசிரியர், பட்டதாரி பயிற்சி ஆசிரியர், முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்... மேலும் பார்க்க

ரயில்வேயில் தொழில்நுட்பம் சாராத 8,113 பணியிடங்கள்: மிஸ்பண்ணிடாதீங்க...!

நாடு முழுவதும் இந்திய ரயில்வேயில் காலியாக உள்ள 8,113 தலைமை வணிக மற்றும் பயணச்சீட்டு மேற்பார்வையாளர், ஸ்டேஷன் மாஸ்டர், சரக்கு ரயில் மேலாளர், இளநிலை கணக்கு உதவியாளர் மற்றும் தட்டச்சர், முதுநிலை எழுத்தர்... மேலும் பார்க்க

வாய்ப்பை நழுவவிடாதீர்கள்... தமிழக சுற்றுலாத் துறையில் பல்வேறு வேலை!

தமிழ்நாடு சுற்றுலாத் துறையின் சந்தையியல் பிரிவில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து வரும் 20 ஆம் தேதிக்குள் ஆன்லைன் மூல... மேலும் பார்க்க