செய்திகள் :

அதே தவறை மீண்டும் செய்யாதீர்கள்; தொடக்க ஆட்டக்காரர் இடம் குறித்து முன்னாள் ஆஸி. கேப்டன் கருத்து!

post image

இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கு தொடக்க ஆட்டக்காரர் இடத்தில் சிறப்பாக விளையாடக் கூடியவரை தேர்வு செய்ய வேண்டும் என ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் கிளார்க் தெரிவித்துள்ளார்.

இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான பார்டர் - கவாஸ்கர் டெஸ்ட் தொடர் அடுத்த மாதம் தொடங்கவுள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி நவம்பர் 22 ஆம் தேதி பெர்த்தில் தொடங்குகிறது.

இதையும் படிக்க: வாஷிங்டன் சுந்தர் 7, அஸ்வின் 3 விக்கெட்டுகள்..! நியூசி. 259க்கு ஆல் அவுட்!

டேவிட் வார்னரின் ஓய்வுக்குப் பிறகு ஆஸ்திரேலிய அணியில் தொடக்க ஆட்டக்காரருக்கான இடத்தை நிரப்ப இன்னும் சரியான வீரர் கிடைக்கவில்லை. சில போட்டிகளில் ஸ்டீவ் ஸ்மித் ஆஸ்திரேலிய அணியின் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கினார். ஆனால், அவர் அந்த அளவுக்கு பெரிதாக சோபிக்கவில்லை.

இதற்கிடையில், ஆஸ்திரேலிய அணி விருப்பப்பட்டால் தனது ஓய்வு முடிவை திரும்பப் பெற்று, இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் தொடக்க ஆட்டக்காரராக விளையாட தயாராக இருப்பதாக டேவிட் வார்னர் தெரிவித்துள்ளார்.

சிறப்பான வீரர் வேண்டும்

ஆஸ்திரேலிய அணியில் தொடக்க ஆட்டக்காரருக்கான தேடல் தொடரும் நிலையில், தொடக்க ஆட்டக்காரராக சிறப்பாக விளையாடக் கூடியவரை தேர்வு செய்ய வேண்டும் என ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் கிளார்க் தெரிவித்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.

மைக்கேல் கிளார்க் (கோப்புப் படம்)

இது தொடர்பாக அவர் பேசியதாவது: தொடக்க ஆட்டக்காரர் இடத்துக்கு ஸ்டீவ் ஸ்மித்தை தேர்ந்தெடுத்து ஆஸ்திரேலிய அணி தவறான முடிவை எடுத்தது. அதனால், இந்த முறை அதே தவறை மீண்டும் செய்யக் கூடாது. தொடக்க ஆட்டக்காரர் இடத்தில் சிறப்பாக விளையாடக் கூடிய ஒருவரை தொடக்க ஆட்டக்காரராக தேர்ந்தெடுக்க வேண்டும்.

இதையும் படிக்க: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் வரலாற்றில் உலக சாதனை படைத்த அஸ்வின்!

ஜோஷ் இங்லிஷை தொடக்க ஆட்டக்காராக களமிறக்க ஆலோசனை மேற்கொள்ளப்படுகிறது. இந்திய பந்துவீச்சுக்கு எதிராக மிடில் ஆர்டரில் விளையாடும் ஒருவரை தொடக்க ஆட்டக்காரராக எவ்வாறு களமிறக்க முடியும். உள்ளூர் போட்டிகளில் ரன்கள் குவிப்பதால் மட்டும் வீரர்கள் தொடக்க ஆட்டக்காரர் இடத்துக்கு சரியாக இருப்பார்கள் என்று அர்த்தம் கிடையாது. அவர்கள் களமிறங்கும் இடங்களையும் கருத்தில் கொள்ள வேண்டும். அதேபோல, உள்ளூர் போட்டிகளில் சரியாக ரன்கள் எடுக்காத மூன்று வீரர்களின் பெயர்கள் ஆஸ்திரேலியாவின் தொடக்க ஆட்டக்காரருக்கான பரீசிலனையில் உள்ளது.

தொடக்க ஆட்டக்காரராக கேமரூன் பான்கிராஃப்டை களமிறக்கலாம் எனக் கூறுவேன். ஏனென்றால், ஷீல்டு கிரிக்கெட்டில் கடந்த இரண்டு ஆண்டுகளாக அவர் அதிக ரன்கள் குவித்தவராக சிறப்பாக விளையாடி வருகிறார். இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அவரை தொடக்க ஆட்டக்காரராக களமிறக்கினால் சரியாக இருக்கும் என நினைக்கிறேன் என்றார்.

இதையும் படிக்க: 3ஆவது டெஸ்ட்: இங்கிலாந்து திணறல், பாகிஸ்தான் ஆதிக்கம்..!

சாம் கொன்ஸ்டாஸ், மார்கஸ் ஹாரிஸ், ஜோஷ் இங்லிஷ் மற்றும் நாதன் மெக்ஸ்வீனி ஆகியோரின் பெயர்கள் தொடக்க ஆட்டக்காரர்கள் இடத்துக்காக பரிசீலிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

259 ரன்களுக்கு ஆட்டமிழந்த நியூசிலாந்து; ஏமாற்றமளித்த ரோஹித் சர்மா!

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்ஸில் நியூசிலாந்து 259 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட... மேலும் பார்க்க

டக் அவுட்டில் சச்சினின் சாதனையை சமன் செய்த ரோஹித் சர்மா!

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சச்சினின் மோசமான சாதனையை இந்திய கேப்டன் ரோஹித் சர்மா சமன் செய்துள்ளார்.இந்தியா - நியூசிலாந்து அணிகள் மோதும் இரண்டாவது டெஸ்ட் போட்டி புணேவில் நடந்து வருகிறது. இந்தப் போட... மேலும் பார்க்க

பாட் கம்மின்ஸ் பகிர்ந்த மறக்க முடியாத சச்சின் டெண்டுல்கரின் ஆட்டம்!

மறக்க முடியாத சச்சின் டெண்டுல்கரின் சிறந்த ஆட்டம் குறித்து ஆஸ்திரேலிய கேப்டன் பாட் கம்மின்ஸ் பகிர்ந்துள்ளார்.இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதும் பார்டர் - கவாஸ்கர் கோப்பைக்கானத் தொடர் வருகிற நவம்பர் ம... மேலும் பார்க்க

இந்தியா - நியூசி டெஸ்ட்: தண்ணீர் பாட்டில்கள் இல்லாததால் ஆத்திரமடைந்த ரசிகர்கள்!

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியின்போது, போதிய தண்ணீர் பாட்டில்கள் இல்லாததால் ரசிகர்கள் கோபமடைந்தனர்.இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது... மேலும் பார்க்க

இந்திய அணி பயந்துவிட்டது; முன்னாள் கேப்டன் கூறுவதென்ன?

நியூசிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான பிளேயிங் லெவனில் இந்திய அணி பயத்தின் காரணமாக மூன்று மாற்றங்களை செய்துள்ளதாக இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.இந்திய... மேலும் பார்க்க

பாக். சுழலில் சிக்கிய இங்கிலாந்து: 267 ரன்களுக்கு ஆல் அவுட்!

பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இங்கிலாந்து அணி 267 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.பாகிஸ்தான் - இங்கிலாந்து அணிகள் மோதும் மூன்றாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி பாகிஸ்தானின் ராவல்பிண்டியில் நடைபெற்று வருகி... மேலும் பார்க்க