செய்திகள் :

Vijay : `எங்கள் தளபதிக்கு நல்ல பெயர் கிடைக்க வேண்டும்..!' - தவெக மாநாடு குறித்து S.A.சந்திரசேகர்

post image
அக்டோபர் 27-ம் தேதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டியில் தனது முதல் அரசியல் மாநாட்டை பிரமாண்டமாக நடத்தி தனது கட்சிக் கொள்கைகளை அறிவிக்க விஜய் திட்டமிட்டிருக்கிறார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டுக்கான பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. அக்கட்சியின் நிர்வாகிகள் விக்கிரவாண்டியில் தங்கி மாநாட்டிற்கான வேலைகளைச் செய்து வருகின்றனர். இந்நிலையில் தவெக மாநாடு நன்றாக நடைபெற வேண்டும் என, விஜய் கொரட்டூரில் கட்டிக்கொடுத்த சாய் பாபா கோயிலில் கட்சி தொண்டர்கள் அன்னதானம் செய்தனர்.

S.A. சந்திரசேகர்

இந்நிகழ்வில் விஜய்யின் தந்தையான S.A. சந்திரசேகர் கலந்துகொண்டார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், " வருகின்ற ஞாயிற்றுக்கிழமை நடைபெற இருக்கும் மாநாடு மிகச் சிறப்பாக நடைபெற வேண்டும். எங்கள் தளபதிக்கு நல்ல பெயர் கிடைக்க வேண்டும். அவர் ஒரு நல்ல நிலைமைக்கு வர வேண்டும். தமிழ்நாட்டிற்கு ஒரு பொக்கிஷம் கிடைக்க வேண்டும் என வேண்டி இந்த அன்னதானத்தை தளபதிக்காக விஜய் தொண்டர்கள் செய்திருக்கிறார்கள்" என்று பேசியிருக்கிறார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்https://bit.ly/3OITqxs

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs

திருவள்ளுவர் முதல் BSNL வரை... `காவி’மயமும் ‘பாரத’ பற்றும் - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு என்ன?!

திருவள்ளுவர் தொடங்கி இந்திய அணி கிரிக்கெட் ஜெர்சி, தூர்தர்ஷன் சேனல் லோகோ, ஜி-20 மாநாடு லோகோ, வந்தே பாரத் ரயில் என ஒவ்வொன்றுக்கும் காவி பெயிண்ட் அடிக்கும் கலாசாரத்தை பா.ஜ.க தொடர்ந்து செய்துகொண்டிருப்பத... மேலும் பார்க்க

`தீபாவளி நேரம் பாஸ்… கண்டுக்காதீங்க!’ - லஞ்ச ஒழிப்பு போலீஸுக்கே `லஞ்சம்' கொடுத்த டாஸ்மாக் மேலாளர்

டாஸ்மாக் கடைகளில் மதுபானங்கள் கூடுதல் விலை வைத்து விற்கப்படுவதாக தொடர்ச்சியாக புகார்கள் எழுந்தாலும், `மதுபானங்களை கூடுதல் விலை வைத்து விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று அரசு எச்சரித்தாலும்,... மேலும் பார்க்க

Elon Musk vs Ambani: சாட்டிலைட் பிராட்பேண்ட் யுத்தத்தில் வெல்லப் போவது யார்?!

இந்தியாவில் பிராட்பேண்ட் சேவைக்கான செயற்கைக்கோள் அலைக்கற்றை ஏலத்தில் விடப்படாமல் நிர்வாக ரீதியாக ஒதுக்கப்படும் என்று மத்திய அரசு சமீபத்தில் அறிவித்தது. இதனையடுத்து இந்தியாவில் சாட்டிலைட் பிராட்பேண்ட் ... மேலும் பார்க்க

`அடையாளமும் இல்லை… அங்கீகாரமும் இல்லை…!’ - 12 ஆண்டுகளாகப் போராடும் 12,000 பகுதி நேர ஆசிரியர்கள்

``2021 சட்டப்பேரவை தேர்தலின்போது, ` பள்ளிக்கல்வித்துறையில் தற்போது பகுதி நேர ஆசிரியர்களாகப் பணியாற்றி வரும் ஓவிய ஆசிரியர்கள், இசை ஆசிரியர்கள், உடற்பயிற்சி ஆசிரியர்கள் ஆகியோரை பணி நிரந்தரம் செய்ய நடவட... மேலும் பார்க்க

தலைமைச் செயலக கட்டடத்தில் விரிசலா... பதறி வெளியேறிய ஊழியர்கள்; அமைச்சர் சொல்வதென்ன?

சென்னையிலுள்ள தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலகத்தில், நாமக்கல் கவிஞர் மாளிகைக் கட்டத்தில் விரிசல் ஏற்பட்டிருப்பதாக உள்ளிருந்த அரசு அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் பதறிய வெளியேறிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்த... மேலும் பார்க்க