செய்திகள் :

கூடலூர்: திடீர் ஆக்ரோஷம், வனத்துறையின் ரோந்து வாகனத்தை தாக்கிய பெண் யானை... பதறிய பணியாளர்கள்!

post image

அடர்ந்த வனப்பகுதிகளைக் கொண்டிருந்த நீலகிரி மாவட்டத்தின் கூடலூர் மற்றும் பந்தலூர் பகுதிகளில் பல ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் காடுகளை அழித்து பெருந்தோட்டங்களாக மாற்றப்பட்டது. பல்வேறு காலகட்டங்களில் ஏற்பட்ட இந்த மாற்றங்களால் உணவு, தண்ணீர், இனப்பெருக்கம் போன்ற அடிப்படை தேவைகளுக்காக யானை உள்ளிட்ட வனவிலங்குகள் இடம்பெயர முடியாமல் திணறி வருகின்றன. இதனால்தான் நாட்டில் யானை - மனித மோதல்கள் அதிகம் ஏற்படும் பகுதிகளில் கூடலூர் மற்றும் பந்தலூர் முக்கிய இடங்களில் இருக்கின்றன.

வனத்துறை வாகனம்

மனிதர்களிடமிருந்து யானைகளையும் யானைகளிடம் இருந்து மனிதர்களையும் பாதுகாக்க இரவு பகலாக 24 மணி நேரமும் வனத்துறையினர் போராடி வருகின்றனர். நடமாட முடியாமல் தொடர்ந்து விரட்டலுக்கு உள்ளாகும் யானைகள், சில சமயங்களில் வனத்துறையின் வாகனங்களை எதிர்த்து தாக்கி வருகின்றன. இந்நிலையில், கூடலூர் வனக்கோட்டத்திற்கு உட்பட்ட ஓவேலி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்ட வனத்துறையினர் வாகனத்தை யானை ஒன்று ஆக்ரோஷமாக தாக்கிவிட்டு ஓடியுள்ளது.

இது குறித்து தெரிவித்த வனத்துறையினர், "ஓவேலி வனச்சரகத்திற்கு உட்பட்ட ஃபார்வுட் பகுதியில் பெண் யானை ஒன்று கடந்த சில மாதங்களாக நடமாடி வருகிறது. ரேஷன் கடைகளில் இருந்து பொருட்களை எடுத்து சாப்பிடும் அந்த யானையை உள்ளுர் மக்கள் சர்க்கரைத் தின்னி என்ற பெயரில் அழைக்கின்றனர். கடந்த சில நாள்களாக அரசு ஆரம்ப சுகாதார நிலையம் பகுதியில் இரவு நேரங்களில் நடமாடி வருகிறது.

வனத்துறை வாகனம்

இதனால், நோயாளிகளுக்கு பாதிப்பு ஏற்படும் என்பதால் அந்த யானையை வனப்பகுதிக்குள் விரட்டினோம். எதிர்பாராத விதமாக வாகனத்தை நோக்கி ஓடி வந்த அந்த யானை வாகனத்தை தாக்கியது. வாகனத்திற்குள்‌ பல பேர் இருந்தனர். ஒருவழியாக போராடி அந்த யானையை வனப்பகுதிக்குள் விரட்டியுள்ளனர்" என்றனர்.

தாயைப் பிரிந்த சோகம்; உயிரிழந்த 9 மாத குட்டி யானை... முதுமலை முகாமில் சோகம்..!

நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்தில் அமைந்துள்ளது தெப்பக்காடு வளர்ப்பு யானைகள் முகாம். இது, ஆசியாவின் பழைமை வாய்ந்த வளர்ப்பு யானைகள் முகாம்களில் ஒன்றாகும். நூற்றாண்டுகளைக் கடந்து செயல்பட்டு வ... மேலும் பார்க்க