செய்திகள் :

காட்டு யானையுடன் செல்பி எடுத்தபோது விபரீதம்... இளைஞரை விரட்டி மிதித்து கொன்ற யானை..!

post image

எதைப்பார்த்தாலும் உடனே அதன் அருகில் நின்று செல்பி எடுப்பது பேஷனாகிவிட்டது. சில நேரங்களில் மலை உச்சியில் நின்று செல்பி எடுத்தபோது தவறி விழுந்து பலர் இறந்துள்ளனர். இதே போன்று ரயில் தண்டவாளத்தில் நின்று செல்பி எடுத்தபோது ரயில் மோதி இறந்த சம்பவங்களும் நடந்துள்ளது.

மகாராஷ்டிரா மாநிலத்தில் மூன்று பேர் காட்டுக்குள் யானையுடன் செல்பி எடுத்த போது விபரீதத்தை சந்தித்துள்ளனர். அவர்களில் ஒருவரை யானை விரட்டி கொன்றுள்ளது.

யானையுடன் செல்பி எடுக்க முயற்சி

கட்சிரோலி மாவட்டம் அபேபூர் வனப்பகுதிக்குள் ஸ்ரீகாந்த் என்பவரும், அவரது நண்பர்கள் இரண்டு பேரும் கேபிள் பதிக்கும் வேலைக்காக சென்றனர். அவர்கள் வேலை செய்த காட்டுக்குள் சிட்டகாங்க் பகுதியில் இருந்து காட்டு யானை ஒன்று வந்திருப்பதாக தகவல் பரவியது. உடனே அந்த யானையை பார்க்க மூன்று பேரும் சென்றனர்.

தூரத்தில் இருந்து மூன்று பேரும் யானையை பார்த்துக்கொண்டிருந்தனர். அந்நேரம் ஸ்ரீகாந்த் யானையுடன் செல்பி எடுக்கலாம் என்று தெரிவித்தார். மற்ற இருவரும் வர மறுத்துவிட்டனர். இதனால் ஸ்ரீகாந்த் மட்டும் யானை அருகில் சென்று தனது மொபைல் மூலம் செல்பி எடுக்க முயன்றார்.

உடனே அந்நேரம் காட்டு யானை கோபத்தில் ஸ்ரீகாந்த்தை விரட்டிச்சென்று மிதித்து கொன்றது. அவரது நண்பர்கள் இரண்டு பேரும் தப்பித்து ஓடி தங்களது உயிரை பாதுகாத்துக்கொண்டனர். அவர்கள் ஊருக்குள் சென்று நடந்த சம்பவத்தை கூறினர். உடனே வனத்துறையினரும், பொதுமக்களும் வந்து ஸ்ரீகாந்த் உடலை மீட்டனர். யானையை அங்கிருந்து விரட்டியடிக்க வனத்துறையினர் முயற்சி மேற்கொண்டு வருகின்றனர்.

Snake: பாம்பு வீட்டுக்கு வருவது ஏன்? ஷூக்குள்ளே, மாடித்தோட்டத்துக்குள்ளே போகுமா? -நிபுணர் விளக்கம்!

வேளச்சேரி அருகே ஒரு வீட்டுத்தோட்டத்தை வீடியோ எடுக்க சென்றபோது, தோட்டத்துக்குள் காலடி எடுத்து வைத்தவுடனே அந்த வீட்டின் உரிமையாளர் சத்தமாக கைத்தட்டியபடியே நுழைந்தார். 'ஏங்க' என்றதும், 'செடி, கொடி இருந்த... மேலும் பார்க்க

கூடலூர்: திடீர் ஆக்ரோஷம், வனத்துறையின் ரோந்து வாகனத்தை தாக்கிய பெண் யானை... பதறிய பணியாளர்கள்!

அடர்ந்த வனப்பகுதிகளைக் கொண்டிருந்த நீலகிரி மாவட்டத்தின் கூடலூர் மற்றும் பந்தலூர் பகுதிகளில் பல ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் காடுகளை அழித்து பெருந்தோட்டங்களாக மாற்றப்பட்டது. பல்வேறு காலகட்டங்களில் ஏற்பட்ட ... மேலும் பார்க்க