செய்திகள் :

Piracy: பொழுதுபோக்கு துறைக்கு ரூ.22,400 கோடி இழப்பு; எத்தனை பேர் பைரசி பயன்படுத்துகின்றனர்?

post image

இணையவழி உலகில் இருக்கக்கூடிய மிக முக்கியமான பிரச்னை பைரசி. திரைப்படங்கள், வெப்சீரிஸ்கள், வீடியோக்கள், பாடல்கள் என அனைத்து கன்டென்ட்களையும் திருட்டுத்தனமாக பார்க்க வழி செய்வதே பைரசி.

திரையரங்கில் திரைப்படம் வெளியானதும் வீடியோ ரெக்கார்ட் செய்து வெளியிடுவது முதல், ஓடிடி தளங்களில் பார்க்கும் வீடியோக்களை ஸ்கிரீன் ரெக்கார்ட் செய்து வெளியிடுவது வரை இதில் அடங்கும். மென்பொருள் மற்றும் பதிப்புரிமை பெறப்பட்ட புத்தகங்கள் மற்றும் பிற அறிவுசார் சொத்துகளையும் நகலெடுப்பது, பகிர்வது மற்றும் பயன்படுத்துவது பைரசியில் அடங்கும். ஆனால் இந்த அறிக்கை, பொழுதுபோக்கு துறையில் ஏற்பட்ட இழப்பை மட்டுமே குறிப்பிட்டுள்ளது.

Piracy

எர்னஸ்ட் & யங் மற்றும் இன்டர்நெட் மற்றும் மொபைல் அசோசியேஷன் ஆஃப் இந்தியா (EY & IAMAI) இணைந்து வெளியிட்டுள்ள The Rob Report என்ற அறிக்கையின்படி, இந்தியாவில் இணையதள ஊடகங்கள் வழியாக பொழுதுபோக்கு சமாச்சாரங்களைப் பார்க்கும் 51% நபர்கள் திருட்டுத்தனமான வழிகளைப் பயன்படுத்துகின்றனர். இதனால், ஒளிபரப்பு சேவைத் தளங்களே அதிகம் பாதிக்கப்படுகின்றன.

2023ம் ஆண்டில் மட்டும் இந்தியாவின் பைரசி பொருளாதாரம் 22,400 கோடி ரூபாய். இதில் திரையரங்குகளில் இருந்து திருடப்பட்ட கன்டென்களின் பங்கு, ரூ.13,700 கோடி, OTT தளங்களின் பங்கு ரூ.8,700 கோடி. இதனால் அரசுக்கு ஜி.எஸ்.டி இழப்பு மட்டும் 4,300 கோடி இருக்கலாம் எனக் கணக்கிடப்பட்டுள்ளது.

பைரசி இணையவெளியில் சாதாரணமாக நடந்துவந்தாலும் இதுவும் ஒரு திருட்டே. அசல் படைப்பாளிகள் அல்லது காப்புரிமை வைத்திருக்கும் நிறுவனங்கள் இதனால் பெருமளவில் பாதிப்படைகின்றன.

டிஜிட்டல் பொழுதுபோக்கு என்பது இந்தியாவில் அதிவேகமாக வளர்ந்துவரும் துறையாகும். வீடியோ சார்ந்த பொழுதுபோக்கு துறையின் மதிப்பு 2026ம் ஆண்டுக்குள் 14,600 கோடியை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் இதற்கு பைரசி மிகப் பெரிய அச்சுறுத்தலாக இருக்கிறது.

Copuright - Piracy

இந்தியாவைப் பொருத்தவரையில் 19 முதல் 34 வயதினரிடையே பைரசி பரவியிருக்கிறது. ஆண்கள் கிளாசிக் திரைப்படங்களையும் பெண்கள் ஓடிடி நிகழ்ச்சிகளையும் பைரசியில் அதிகம் பார்ப்பதாக அந்த அறிக்கை கூறுகிறது.

பைரசி கன்டென்ட்களை பார்க்கும் பலருக்கும் ஓடிடி தளங்களில் கட்டணம் செலுத்துவதில் விருப்பமில்லை. ஓடிடி தளங்கள் விளம்பரங்களுடன் கூட இலவசமாக சேவைகளை வழங்கினால் அணுக தயாராக இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளனர். இதனால் ஓடிடி தளங்கள் சப்ஸ்கிரைபிங் மூலம் பணம் வசூலிக்காமல், வேறு வகையில் வருமானத்தை ஈட்டுவது குறித்து சிந்தக்கவேண்டும் என்றும் வல்லுநர்கள் அறிவுறுத்துகின்றனர்.

மெட்ரோ நகரங்களை விட இரண்டாம் கட்ட நகரங்களில் பைரசி அதிகம் இருப்பதாக அறிக்கை குறிப்பிட்டுள்ளது. பைரசிக்கு எதிராக வலிமையான தொழில்நுட்பத்தை உருவாக்க வேண்டும் என்ற குரல் எழுந்திருக்கிறது.

நிறுவனங்கள், அரசு, பொழுதுபோக்குத் துறையைச் சேர்ந்தவர்கள் மற்றும் பயனர்களும் பைரசிக்கு எதிராகசெயலாற்ற வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்https://bit.ly/3OITqxs

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs

Keerthi Suresh: கீர்த்தி சுரேஷுக்குக் கல்யாணம் - நீண்ட நாள் பாய் ஃபிரண்ட் மாப்பிள்ளை ஆகிறார்!

நடிகை கீர்த்தி சுரேஷுக்கும் அவரது நீண்ட நாள் நண்பர் ஆண்டனி தட்டிலுக்கும் திருமணம் உறுதி செய்யப்பட்டுள்ளது என கோலிவுட்டில் தகவல் பரபரக்கிறது. ’இது என்ன மாயம்’ படம் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர்... மேலும் பார்க்க

என்னை பாதித்த அசாமி திரைப்படம்... பெயர் தெரிந்தால் சொல்லுங்களேன்? | My Vikatan

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின்... மேலும் பார்க்க

"ரஜினி என்னை மூணு தடவை அடிச்சார்; இது நியாயமா?" - நடிகை விஜயசாந்தி அதிரடி பேட்டி

"'மன்னன்' படத்துல நான் நடிச்சப்போ ஒரு படத்துக்கு ஒரு கோடி ரூபாய் சம்பளம் வாங்கினேன். இந்தியாவுல அதிக சம்பளம் வாங்கிய நடிகர்கள்ல அமிதாப் பச்சன் சார் முதலிடத்துலயும், ரஜினி சார் இரண்டாவது இடத்துலயும், ந... மேலும் பார்க்க

`ஜான்சி ராணி, நேதாஜி, சாவர்கர்' புதிய அவதாரத்தில் மீண்டும் சக்திமான் - முகேஷ் கண்ணா அறிவிப்பு!

சக்திமான்... 90-களில் பிறந்தவர்களுக்கு மறக்கமுடியாத தொடர்களில் ஒன்று. சக்திமான கதாபாத்திரத்தில் நடிகர் முகேஷ் கண்ணா நடித்திருப்பார். அந்தத் தொடர் மீண்டும் வெளியாக இருப்பதாக நடிகர் முகேஷ் கண்ணா தெரிவித... மேலும் பார்க்க

2025 கிராமி விருதுகளில் அதிக பிரிவுகளில் நாமினேஷன் ஆன கலைஞர்கள் - யார் யார்?

துரைத்துறையில் கொடுக்கப்படும் ஆஸ்கார் விருதுக்கு நிகரானது, இசை துறையை சார்ந்தவர்களுக்கு கொடுக்கப்படும் `கிராமி விருதுகள்’. 2025 ஆம் ஆண்டுக்கான கிராமி விருதுகளுக்கான நாமினேஷன் பட்டியலை தற்போது அறிவித்த... மேலும் பார்க்க